Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சர்க்கரை வள்ளி கிழங்கின் அற்புத பயன்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி நீங்கள் அறியாத
கிழங்கு வகைகளில் மிகவும் அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.

எளிதில் கிடைக்கும், சுவையாக இருக்கும் என்பதையும் தாண்டி இதில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

வைட்டமின் பி6
இதய ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் முக்கியமான சத்துப்பொருள் வைட்டமின் பி6 ஆகும். வைட்டமின் பி6 நம் உடலில் உற்பத்தியாகும் ஹோமோசயட்டின் என்ற நச்சுப்பொருளை குறைக்கும். இந்த ஹோமோசயட்டின் உடலுக்கு பலவித தீங்குகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கு இதனை உடலைவிட்டு எளிதில் வெளியேற்றிவிடும்.

வைட்டமின் சி
வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது. அதுமட்டுமின்றி காயங்களை விரைவில் குணமாக்குவது சருமத்தின் நெகிழ்வு தன்மையை தக்கவைப்பது என பலவற்றிற்கும் வைட்டமின் சி அவசியம். அதுமட்டுமின்றி புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களையும் இது சரிசெய்யக்கூடும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி மற்ற பொருள்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

எலும்புகளின் ஆரோக்கியம்
சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் அவசியமானது. நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து எளிதாக கிடைக்கும். ஆனால் சிலசமயம் சூரிய ஒளியால் சில அலர்ஜிகள் ஏற்படலாம். எனவே அதுபோன்ற சமயத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவது வைட்டமின் டி இழப்பை சரிசெய்யும். இதன்மூலம் நமது எலும்பு, பற்கள், நரம்புகள் போன்றவை வலுப்பெறும்.

இரும்புசத்து
நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க இரும்புசத்து அவசியம் என்று நாம் அறிவோம். ஆனால் அதுமட்டுமின்றி இரத்த உற்பத்தி, மனஅழுத்தத்தை குறைத்தல், நோயெதிர்ப்பு மணடலம் சரிவர செய்லபட, உடலியக்கங்கள் சரியாக இருக்க என அனைத்திற்கும் இரும்புசத்து அவசியம். இது சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமாக உள்ளது.

மெக்னீசியம்
சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரிபண்ண சிறந்த மருந்தாக இருக்கிறது. மருத்துவர்களின் அறிக்கை படி நான்கில் ஒருவருக்கு மெக்னீசிய குறைபாடு உள்ளது. இதனால் இரத்த சுழற்சியில் மாற்றம், இதை அடைப்பு, வலுவில்லாத எலும்புகள் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சர்க்கரை வள்ளி கிழங்கு சரியான தேர்வாக இருக்கும்.

பொட்டாசியம்
நமது சிறுநீரகம் சரியாக செயல்பட அவசியமான ஒன்று பொட்டாசியம். மேலும் இதய துடிப்பு சீராக இருக்கவும், நரம்பு மண்டலம் சரியாக செயல்படவும் பொட்டாசியம் அவசியமானது. சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகமுள்ள இது தசைப்பிடிப்புகளை சரிசெய்தல், வீக்கத்தை குறைத்தல் போன்ற பல பிரச்சினைகளை சரிசெய்ய கூடியது.

சர்க்கரையை குறைத்தல்
இதன் பேரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர இது எந்த விதத்திலும் சர்க்கரை னாய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையாகவே இதிலுள்ள சர்க்கரை மிகவும் மெதுவாகவே இரத்தத்தில் கரையும். இதனால் இதனை கரைப்பது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி சோர்வு மற்றும் எடை அதிகரிப்பிற்கு இதனை பயன்படுத்தலாம்.

புற்றுநோய்
இதன் நிறமே உணர்த்தும் இதிலுள்ள கரோட்டீன்களை பற்றி. இதிலுள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. பீட்டா கரோட்டின் உங்கள் விழித்திரையை பாதுகாப்பதுடன் உங்கள் குணமாகும் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதுடன் வயதான தோற்றத்தையும் குறைக்கும். குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.

சமைக்கும் முறை
மற்ற கிழங்குகளை போல அல்லாமல் இதனை பல வழிகளில் சமைக்கலாம். ஏன் பச்சையாக கூட சாப்பிடலாம்.ஆனால் சிலருக்கு இதனை பச்சையாக சாப்பிடுவது தலைவலியை ஏற்படுத்தலாம். எனவே இதனை வேகவைத்தோ, பொரியல் செய்தோ, சிப்ஸ் செய்தோ சாப்பிடலாம். சிலர் இதனை வைத்து பாயாசம் செய்தும் சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications