Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?
நம்முடைய ஆரோக்கியம், அழகு ஆகிய இரண்டையும் மாதுளை எப்படி பாதுகாக்கிறது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மாதுளையில் மிக அதிக அளவிலான உயர்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது உலக அளவில் நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்த மாதுளை இந்தியாவில் அனார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த மாதுளை சுவையில் மட்டும் உயர்வானதாக இல்லை.

அதனுடைய ஊட்டச்சத்துக்களிலும் மற்ற பழங்களை விட உயர்வானதுதான். இதில் ஆரோக்கியம் மட்டுமல்ல. நம்முடைய அழகும் அடங்கியிருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரத்தையும் இந்த கட்டுரையில் காணலாம்.

ஆரோக்கிய நன்மைகள் இதய ஆரோக்கியம்
பொதுவாக கிரீன் டீ மற்றும் ரெட் ஒயினில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டும் பாலிபினைலும் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அவை இரண்டையும் விட அதிகமாக ஒரு கிளாஸ் மாதுளம்பழ ஜூஸில் உங்களுக்கு ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் பாலிபினைல்களும் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாது இந்த மாதுளையில் நார்சு்சத்துக்கள் நிறைந்திருக்கும் காரணத்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை நீக்கி, இதய நோய் உங்களை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

எலும்புகளின் வலிமை
மாதுளையில் உடலுக்குத் தவையாக என்சைம்கள் மிக அதிகமாக இருப்பதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. மாதுளை ஜூஸானது எலும்புத் தேய்மானத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எலும்பு முறிவு, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வாருங்கள்.

ரத்த சர்க்கரை
மாதுளையில் குளுக்கோஸின் அளவு மிகமிகக் குறைவு. அதில் அதிக அளவு பிரக்டோஸ் இருக்கிறது. அதனால் மாதுளை ஜூஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை என்னும் நீரிழிவு நோய் வராமல் இருக்கும்.

பசியைத் தூண்டும்
சிலருக்கு நேரத்துக்குப் பசி எடுக்காமல் இருப்பதுதான் பெரும்பான்மையான பிரச்சினைக்குக் காரணமாக அமைகின்றது. இந்த பசியின்மை பொதுவாக குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மிக அதிக அளவில் உண்டாகும். அவர்களுக்கு தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் கொடுத்து வந்தால், நேரத்துக்குப் பசி எடுக்கும். மாதுளைக்குப் பசியைத் தூண்டும் ஆற்றல் உண்டு.

எடை குறைப்பு
மாதுளையை ஏன் மக்கள் தேடிப் போகிறார்கள் என்றால், அதில் உள்ள இயற்கையான, அதிகப்படியான ஆற்றலை வழங்குகிறது என்பதால் தான். அத்தகைய மாதுளை நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உடலைச் சுத்தம் செய்வதிலும் முன்னுக்கு நிற்கிறது. அதனால் தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறி, உடல் எடையைக் குறைக்கிறது.

மன அழுத்தம்
குயின் மார்க்கரேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், மாதளையை தினமும் ஜூஸாகக் குடித்து வந்தால், மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். எவ்வளவு ஸ்ட்ரஸ்ஸோ இருந்தாலும் இந்த ஜுஸைக் குடித்தால், உடனே மன அழுத்தம் நீங்கி, உடலுக்குப் புது தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

சூரியக் கதிர்வீச்சு
அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சினால் சருமம் கருமையடைவதோடு, அல்ட்ரா வைலட் கதிர்களால் பாதிக்கப்படக்கூடும். இதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. மாதுளையானது கதிர்வீச்சினால் உண்டாகும் சரும சேதத்தைப் போக்கும். கதிர்வீச்சு பாதிப்புகளைப் போக்கி, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.



Click it and Unblock the Notifications