விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்!

சோயா சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்.

நாம் சாப்பிடும் தானியங்களில் ஒன்று சோயா பீன்ஸ். உலகளவில் சோயா பீன்ஸ் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் எளிதில் விளையக்கூடிய இந்த சோயாவின் பயன்கள் ஏராளமானது. சமீப காலங்களாக உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் குறிப்பாக டயட் பின்பற்றுபவர்கள் மத்தியில் டயட் கடைபிடிப்பவர்கள் மத்தியில் சோயா,சோயா பால் குறித்த பயன்பாடு அதிகளவு இருக்கிறது.

சோயாவில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. இது உலகளவில் விளைவிக்க முக்கிய காரணம், பிற செடிகளை விட சோயாபீன்ஸ் அதிகளவு வளர்ந்திடும். இதனால் லாபம் நிச்சயம்.

சைவ உணவு சாப்பிடுபவர்களின் ப்ரோட்டீன் நிறைந்திருக்கும் ஓர் உணவுப்பொருள் என்றால் அது சோயா தான். அதைத் தவிரவும் அதில் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்னென்ன இருக்கிறது :

என்னென்ன இருக்கிறது :

இதில் ப்ரோட்டீன் மட்டுமல்லாது ஏராளமான நியூட்டிரிசியன்கள், விட்டமின்ஸ் நிரம்பியிருக்கிறது. விட்டமின்கள் என்று பார்த்தால் சோயாபீன்ஸில் விட்டமின் கே, ரிபோஃப்லேவின்,ஃபோலேட்,விட்டமின் பி6,தியாமின் மற்றும் விட்டமின் சி ஆகியவை அடங்கும்.

இதே மினரல்ஸ்கள் என்று பார்த்தால் இரும்புச்சத்து, மக்னீஸ்,பாஸ்பரஸ்,காப்பர், பொட்டாசியம்,மக்னீசியம்,ஜிங்க், செலினியம் மற்றும் கால்சியம் ஆகியவை இவை எல்லாவற்றையும் இவற்றில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.

மெட்டபாலிசம் :

மெட்டபாலிசம் :

உடலில் போதுமான அளவு ப்ரோட்டீன் இருந்தால் மட்டுமே உங்களின் மெட்டபாலிசம் சீராக நடைபெறும். ரத்த நாளங்களுக்கும், செல்களும் சீராக இயங்க ப்ரோட்டீன் மிகவும் அவசியமாகும்.

பொதுவாக ப்ரோட்டீன் அசைவ உணவுகளில் தான் நிரம்பியிருக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ப்ரோட்டீன் சத்து கிடைப்பது மிகச் சில உணவுகளிலிருந்து தான் அவற்றில் ஒன்று இந்த சோயாபீன்ஸ்.

எடை அதிகரிக்க :

எடை அதிகரிக்க :

சோயாபீன்ஸ், அல்லது சோயாவிலிருந்து தயாரிக்கப்படுகிற எந்த வகை உணவை நீங்கள் உட்கொண்டாலும் நிறைவான உணர்வைத் தரும் ஏனென்றால் இவற்றில் ஃபைபர் இருக்கிறது.

இதையே நீங்கள் அதிகளவு எடுத்துக் கொண்டால் எடை அதிகரிக்கவைத்திடும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்கிறது. குறிப்பாக செல்களின் செயல்பாடுகளுக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் இவை முக்கியப் பங்காற்றுகிறது.

இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து பெருங்குடலில் ஏற்படுகிற புற்றுநோயை தவிர்க்கச் செய்கிறது.

இதயத்திற்கு :

இதயத்திற்கு :

இதில் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கிறது. இது இருப்பதினால் உங்களது கொலஸ்ட்ரால் அளவு குறைக்க உதவிடும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்சனைகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

அதே நேரத்தில் நம்முடைய ஆரோக்கியமான உடல்நிலைக்கு லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய இரண்டு கொழுப்பு அமிலங்கள் தேவை இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிடுகிறது. இவை சோயாபீன்ஸில் அதிகளவு இருக்கிறது.

மெனோபாஸ் :

மெனோபாஸ் :

சோயாபீன்ஸில் இசோஃபேலவோன்ஸ் என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களின் இனப்பெருக்கத்திற்கு அவசியமான ஒன்று. மெனோபாஸ் காலங்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரென குறையும் அந்த நேரத்தில் இசோஃபேலவோன்ஸ் அதன் இழப்பினை சமன் செய்ய வைக்கும். அதனால் பெருமளவு மாற்றம் தெரியாது.

மெனோபாஸ் காலங்களில் ஏற்படுகிற பிரச்சனைகளின் தீவிரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதனால் மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடியவர்கள் சோயாபீன்ஸ் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 செரிமானம் :

செரிமானம் :

நம்முடைய செரிமானத்திற்கு பெரிதும் அவசியமாக இருப்பது ஃபைபர் ஆனால் அதனை யாரும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை. செரிமானம் செய்ய வைப்பதுடன் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை நீக்கவும் அது பெரிதும் தேவைப்படுகிறது.

சோயாபீன்ஸில் நார்ச்சத்தும் குறிப்பிட்ட அளவு இருப்பதினால் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

எலும்பு வளர்ச்சிக்கு :

எலும்பு வளர்ச்சிக்கு :

சோயா பீன்ஸில் கால்சியம்,மக்னீசியம், காப்பர்,செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற மிக அத்தியாவசியமான சத்துக்கள் இருக்கிறது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவை. இதனை அடிக்கடி உங்கள் உணவுகளில் சேர்த்து வர, வயதானபின் ஏற்படக்கூடிய மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கர்பிணிகள் :

கர்பிணிகள் :

இதில் அதிகப்படியான விட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இவை இரண்டுமே கர்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமாகும்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது.

ரத்த ஓட்டம் :

ரத்த ஓட்டம் :

ரத்த சிகப்பணுக்கள் உருவாவதற்கு அவசியமான காப்பர் மற்றும் இரும்புச்சத்து ஆகிய இரண்டும் சோயாபீன்ஸில் இருக்கிறது. இதனை நீங்கள் எடுத்துக் கொள்வதால் ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சீராக ரத்த ஓட்டம் ஏற்படுத்திடும், இதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் நோய் என்றால் அது சர்க்கரை நோய் தான். உடலில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள சோயா பீன்ஸின் பங்கு அளப்பறியது.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதைத் தவிர தூக்கம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களும் இதனை சாப்பிடலாம்.

கவனம் :

கவனம் :

இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் சில நேரங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.தொடர்ந்து அதிகப்படியான சோயா அல்லது சோயா சார்ந்த பொருட்கள் எடுத்து வந்தால் அது உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இது மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகிய பாதிப்புகளை உண்டாக்கி விடும். அதைத் தவிர இது தைராய்டு சுரப்பியின் வேலையையும் சீர்குலைத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, June 14, 2018, 15:50 [IST]
Desktop Bottom Promotion