Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சிறுநீரக கற்களை கரைக்க உதவும், பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ்!
பசலைக் கீரை, வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், சிறுநீரக கற்களை கரைக்க முடியும்.
இதுமட்டுமல்ல, முற்றிலும் இயற்கை முறையில், இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், உடலில் பல்வேறு பாகங்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
இதையும் படிங்க: உடல் எடை குறைக்க, இரத்தத்தை சுத்தம் செய்ய இந்த ஜூஸை குடிங்க!
கண், சருமம், கல்லீரல், சிறுநீரகம், செரிமானம், அல்சர், நோய் எதிர்ப்பு மண்டலம் என உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஓர் ஜூஸ் பல நன்மைகள் அளிக்கிறது.
இனி, பசலைக்கீரை, வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது மற்றும் நன்மைகள் பற்றி காண்போம்...

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 2
ஆப்பிள் - 1
பசலைக்கீரை - ஒரு கட்டு

வைட்டமின் சத்துக்கள்:
சிறுநீரக கற்களை கரைக்க உதவும், பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ் கிடைப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்.,
வைட்டமின் A, B, B1, B2, C, E, J மற்றும் K.

செய்முறை:
1) நன்கு கழுவு எடுத்துக் கொண்ட வெள்ளரிக்காயின் கசப்பான பகுதியை நீக்கிவிடுங்கள்.
2) ஆப்பிள் பழத்தின் நடுபகுதியை நீக்கிவிடுங்கள்.
3) கழுவி, சுத்தப்படுத்திய பசலைக்கீரை, வெள்ளரி மற்றும் ஆப்பிள் மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

நன்மைகள்:
1) இந்த ஜூஸை சீரான முறையில் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்.
2) இந்த ஜூஸ் உடலில் புற்றுநோய் உண்டாக கூடிய கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது.
3) உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க இந்த பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ் பயனளிக்கிறது.

நன்மைகள்:
4) அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலனடையலாம்.
5) செரிமானத்தை சரியாக்கி, மலமிளக்க பிரச்சனை உண்டாகாமல் இருக்க உதவுகிறது.
6) இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும், நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் இதயம் வலுபெறவும் இந்த ஜூஸ் உதவுகிறது.

நன்மைகள்:
7) இந்த ஜூஸ் உடலில் உள்ள புழுக்களை அழிக்கவும், நச்சுக்கள் அதிகரிக்காமலும் இருக்கவும் பயனளிக்கிறது.
8) இந்த பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ் கண் பார்வை மேலோங்க வெகுவாக உதவுகிறது.
9) மற்றும் கல்லீரல் கோளாறுகள், இரத்த அழுத்தம் போன்றவை உண்டாகாமல் இருக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications