கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் அத்திப்பழ இலைகள்! - எப்படி பயன்படுத்தணும்?

Fig Leaves Benefits In Tamil: அத்தி பழ இலைகள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்த அத்திப்பழ இலைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அத்திப்பழ இலைகளைக் கொண்டு நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அத்திப்பழ இலைகள் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், எக்ஸிமா மற்றும் சொரியாஸிஸ் போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

அத்திப்பழ இலைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் போன்றவை காணப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அந்த பாதிப்பில் இருந்து விரைவாக குணமடைய முடியும். இந்த அத்தி இலையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது அல்சர் மற்றும் வயிற்றுக் கோளாறு போன்றவற்றை போக்க உதவுகிறது.

Fig Leaves For Diabetes And Triglycerides In Tamil

அத்திப்பழ இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

அத்திப்பழ இலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. அத்திப்பழ இலையில் நிறைய கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள் உள்ளன.

அத்தி பழ இலையின் நன்மைகள்:

நீரிழிவு நோய்க்கு உதவுகிறது

அத்தி பழ இலைகள் அற்புதமான நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் இந்த இலைகளைக் கொண்டு தேநீர் போட்டு வரலாம். இந்த தேநீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து டைப் 1 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.

கெட்ட கொழுப்பை குறைத்தல்

அத்திப் பழ தேநீரை குடித்து வருவது உங்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. ட்ரைகிளிசரைடு கொழுப்பை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். மேலும் அத்திப்பழ இலைகள் அதிக கொழுப்பு, தடிப்புத் தோல் அழற்சி, விட்டிலிகோ மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்றவற்றை போக்கவும் பல தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் நோய்களை போக்க கூடியது

அத்தி இலைகள் சுருக்கங்கள் மற்றும் தோல் நோய்களை போக்க கூடியது. அத்தி இலைகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. சில வகை அத்தி இலைகள் குறிப்பிட்ட வகை புற்றுநோயை போக்குகிறது. அத்தி இலைகளில் உள்ள கொலாஜனினேஸ் எதிர்ப்பு தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் வயதாகுவதை தடுக்க உதவுகிறது.

மலச்சிக்கலை போக்க உதவுகிறது

நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் அத்தி இலைகளின் மூலம் உடனடி நிவாரணத்தைப் பெற முடியும். ஏனென்றால் அத்தி இலைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை உடனே போக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உடல் பருமனால் கஷ்டப்படுபவர்களுக்கு அத்தி இலை பெரிதும் உதவி புரியும். ஏனெனில் அத்தி இலைகளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அத்தி இலைகளை முறையான வகையில் பயன்படுத்தி வாருங்கள்.

விந்தணுக்களை அதிகரிக்கிறது

அத்தி இலைகள் மலட்டுத் தன்மையை போக்க உதவுகிறது. மெலடோனின், காஃபியோல்மாலிக் அமிலம், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அத்தி இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆண்களின் உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

அத்திப் பழ இலையைக் கொண்டு தேநீர் தயாரிப்பது எப்படி?

* 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த அத்திப்பழ இலைகள்
* கொஞ்சம் தண்ணீர்

செய்முறை:

* முதலில் அத்திப் பழ இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.
* தண்ணீர் பாதியாகும் வரை இதைச் செய்ய வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் இதை நீங்கள் செய்ய வேண்டும்.
* இப்பொழுது இந்த தேநீரை வடிகட்டி ஆறிய பின்னர் குடியுங்கள்.

அத்தி இலைகளை உலர்த்துவது எப்படி?

அத்தி இலைகளை எடுத்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கி பிறகு நேரடியாக சூரிய ஒளியில் வைக்காமல் வீட்டினுள் மிதமான ஒளியில் வைத்து சில நாட்கள் காய போடுங்கள். இலைகள் வெயிலில் நன்றாக உலர்ந்த பிறகு அதை ஒரு கண்ணாடி கொள்கலனில் வைத்து சேகரித்து வையுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion