ஆண்களின் முக அழகுக்கான எளிய குறிப்புகள்.. இதை ட்ரை பண்ணுங்கள்..!

அழகான சருமத்தை கொண்டிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு என்று சொல்லலாம். தனிப்பட்ட பராமரிப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் ஏற்கனவே கடினமாக இருக்கும் சருமம் மேலும் கடினத்தை சந்திக்கும். இவை அதிகரித்தால் முகத்தில் பொலிவு குறையும்.

face care beauty tips for men

தெளிவான ஆரோக்கியமான சருமத்தை விரும்பும் பெண்களை போன்றே ஆண்களும் விரும்பினால் இந்த எளிமையான ஆறு குறிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள். இதன் மூலம் அழகான சருமத்தை பெறலாம்.

1. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றுவதன் மூலம் சருமம் பொலிவாக இருக்கும். இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் சருமம் பிரகாசமாக அளிக்க செய்கிறது. வாரத்தில் இரண்டு முறையாவது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றினால் போதுமானது.

2. ஆண்கள் தங்கள் முகத்திற்கு க்ளென்சர்கள், ஸ்க்ரப்பர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றில் ஆல்கஹால், சாயம், தீங்கு விளைவிக்கும் வாசனை திரவியங்கள் போன்றவை இருக்கலாம். இவை இல்லாத பொருட்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

3. ஆண்கள் அவ்வபோது அல்லது தினமும் ஷேவிங் செய்வதுண்டு. பெரும்பாலான ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு அப்படியே சருமத்தை விட்டுவிடுவதுண்டு. இதனால் துளைகள் விரிவடையக்கூடும். இந்த நேரத்தில் ஆண்டி செப்டிக் தோல் எரிச்சலை குறைக்க கூடும். வெட்டுக்களில் இருந்து தொற்றுநோயை தடுக்கிறது.ஈரப்பதத்தை தக்க வைத்துகொள்ள ஷேவிங் செய்த பிறகு பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய்பயன்படுத்தலாம்.

4. பெண்கள் பயன்படுத்தும் அதே கிரீம்கள், டோனர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் போன்றே பல ஆண்கள் சருமப் பராமரிப்பைப் பார்க்கிறார்கள். இது சருமத்தை பாதிக்கலாம். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் அவர்களுக்கானவை. இது உங்கள் சருமத்திற்கு பொருந்தாமல் போகலாம். தோல் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே ஆண்களுக்கான பிரத்யேக சரும அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. சரும பராமரிப்பு செய்வதில் முக்கியமானது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது. பெண்களை போன்று ஆண்களுக்கும் சருமபராமரிப்பு நிபுணர்கள் அறிவுறுத்துவது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதுதான். பெரும்பாலான ஆண்கள் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது இல்லை

6. உடலின் மற்ற பகுதிகளை விட முகத்திற்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன. பாடி லோஷனை முகத்தில் தடவினால் துளைகள் அடைத்துவிடும். எனவே கழுத்து வரை முகத்தில் ஃபேஸ் க்ரீம் அல்லது மாய்ஸ்சரைசர் தடவவும். உடலின் மற்ற பகுதிகளுக்கு பாடி லோஷனைப் பயன்படுத்துங்கள். எல்லாவற்றிற்கும் ஒரே கிரீம் பயன்படுத்தக்கூடாது..

7. முகத்தை எவ்வளவு நன்றாகக் கழுவினாலும், நல்ல ஃபேஸ் க்ரீமை உபயோகித்தாலும், முகம் வறண்டு, கரடுமுரடாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், முகத்தில் தேவையான அளவு ஈரப்பதம் கிடைக்காததே. நீங்கள் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தும் முறை தவறாக இருக்கலாம். முகம் சற்று ஈரமாக இருக்கும்போது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறிது காலம் நீடிக்கும். உலர்ந்த முகத்தில் இதைப் பயன்படுத்தினால், விளைவு நீண்ட காலம் நீடிக்காது.

8. ஒரு நல்ல மாய்சுரைசரை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும். தோல் வகைக்கு ஏற்ற தரமான மாய்சுரைசரை தேர்ந்தெடுங்கள். எண்ணெய் சருமமாக இருந்தால் ஜெல் அடிப்படையிலான மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். உங்களுக்கான மாய்சுரைசரை தேர்ந்தெடுக்க மருத்துவரை அணுகலாம்..

9. ஆண்கள் அவர்களின் முகத்திற்கு ஏற்ப பேஸ் பேக்கை போட வேண்டும்..அது சருமம் நீரேற்றமாக இருக்க உதவும்..இது அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி முகத்தையும் சருமத்தையும் மென்மையாக்கும்..

10. சருமம் நன்றாக எல்லா பருவக் காலங்களிலும் பளப்பளப்பாக இருக்க ஆண் பெண் இரு பாலாரும் உடலுக்கு தேவையான நண்ணீரை குடிக்க வேண்டும்.. அப்படி குடிப்பதினால் சருமம் பொழிவாக தோற்றமளிக்கும்..

Desktop Bottom Promotion