Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
Exclusive: வாக்கிங் போறீங்களா? அப்ப கட்டாயம் வார்ம்-அப் செய்யுங்க.. ஏன் என்று விளக்குகிறார் கோச். பாஸ்கர்!
Warm Up Before Walking: ஃபிட்னஸ் என்பது ஒருவரது தினசரி செயல்பாடுகளில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உடல் செயல்பாடுகள் இருந்தால், அந்நபர் ஃபிட்டாக உள்ளார் என்று அர்த்தம். தற்போது மக்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஆசைப்படுவதோடு, அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். அதில் ஃபிட்னஸ் என்றதும் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அதுவும் ஃபிட்டாக உடலை வைத்துக் கொள்ள நிறைய பேர் காலையில் எழுந்ததும் வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றை செய்து வருகிறார்கள். அதில் வாக்கிங் பயிற்சியை தான் நிறைய பேர் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த வாக்கிங் பயிற்சியை சரியாக செய்கிறார்களா என்று கேட்டால், 90 சதவீத மக்கள் சரியாக செய்வதில்லை என்று தான் கூற வேண்டும். என்ன தான் இவை மிதமான உடற்பயிற்சிகளாக இருந்தாலும், இந்த வாக்கிங்கை மேற்கொள்ள என்று ஒருசில செயல்முறை உள்ளது.

முக்கியமாக வாக்கிங்கிற்கு மட்டுமின்றி, வேறு எந்த ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பும் வார்ம்-அப் என்னும் மிதமான உடல் அசைவுகளை உடலுக்கு கொடுக்க வேண்டும். சரி, ஏன் வார்ம்-அப்பை கட்டாயம் உடற்பயிற்சிக்கு முன் செய்ய வேண்டும் என்பது குறித்து மனித இயக்க அறிவியல், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளரான ஏ. பாஸ்கர் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
உடற்பயிற்சிக்கு முன் ஏன் வார்ம்-அப் செய்ய வேண்டும்?
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒருவர் கட்டாயம் வார்ம்-அப் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்பட்டு, அதன் விளைவாக தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, மூட்டுகள் மற்றும் தசைகளின் இயக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வார்ம் அப்பை வாக்கிங் மேற்கொள்வதற்கு முன் செய்யும் போது, அந்த வாக்கிங்கை சுறுசுறுப்பாகவும், எவ்வித காயங்களும் இல்லாமல் வெற்றிகரமாக செய்யலாம்.
மேலும் எதற்காக வாக்கிங் பயிற்சியை மேற்கொள்கிறோமோ, அந்த நோக்கமும் விரைவில் நிறைவேறும். சுருக்கமாக கூற வேண்டுமானால், வார்ம் அப் என்பது உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலை தயார்படுத்த செய்யக்கூடிய உடல் அசைவுகளாகும்.
உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப்பை செய்யாமல் இருந்தால், அதன் விளைவாக உடற்பயிற்சியின் போது கொடுக்கப்படும் அழுத்தமானது முழங்கால்கள் மற்றும் மூட்டுக்களில் கொடுக்கப்பட்டு, அதனால் கால் வலியை சந்திக்க நேரிடலாம். எனவே தினமும் 1/2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வதற்கு முன் 5 நிமிடம் வார்ம்-அப் செய்யுங்கள் என பாஸ்கர் கூறினார்.
எப்படி உடற்பயிற்சிக்கு முன் வார்ம்-அப் முக்கியமோ, அதேப் போல் உடற்பயிற்சி செய்த பின் உடலைக் குளிர்விக்க கூல்டவுன் பயிற்சிகளை செய்ய வேண்டும். அதாவது வார்ம்-அப்பின் போது எந்த மாதிரியான அசைவுகளை செய்தீர்களோ, அதை மீண்டும் செய்தாலே போதுமானது.
எந்த மாதிரியான வார்ம்-அப் பயிற்சிகளை செய்யலாம்?
வார்ம்-அப் பயிற்சிகள் என்பவை அவ்வளவு பெரிய கடினமான பயிற்சிகள் அல்ல. அது நாம் சாதாரணமாக செய்யக்கூடிய கை, கால் அசைவுகளான கையை தலைக்கு மேல் தூக்கி இறக்குவது, கீழே குனிந்து நிமிர்வது, உட்கார்ந்து எழுவது போன்றவை தான். இவை ஒவ்வொன்றையும் 5-10 முறை செய்து வந்தாலே போதுமானது என்றும் பாஸ்கர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications