Latest Updates
-
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
ஆண்களே! படுக்கையில் நீண்ட நேரம் துணையை திருப்திபடுத்த முடியலையா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
Fruits For Erectile Dysfunction In Tamil: உலகெங்கிலும் உள்ள ஆண்களில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் விறைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது உடலுறவு கொள்ளும் போது துணையை திருப்திப்படுத்த போதுமான அளவில் விறைப்புத்தன்மையைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ இயலாமை ஆகும்.
இந்த பிரச்சனையை கொண்ட ஆண்கள் பலர் தங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாமல் மனதளவில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதுவும் இந்த பிரச்சனையைப் பற்றி வெளியே பேசவும் தயக்கம் கொள்கிறார்கள். நிறைய ஆண்கள் இந்த பிரச்சனைக்கு வயாகரா மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படி வயாகரா மாத்திரைகளைப் போட்டால், தற்காலிகமாக செயல்படுமே தவிர, இப்பிரச்சனையை முழுமையாக சரிசெய்ய முடியாது.

இந்த விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஆணுறுப்பில் போதுமான இரத்த ஓட்டம் இல்லாமை தான். எனவே ஆண்கள் தங்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய நினைத்தால், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
அதுவும் பழங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பதால், அந்த பழங்களை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய உதவி புரியும் சில பழங்களைக் காண்போம்.
1. தர்பூசணி
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், தர்பூசணி பழங்களை இனி அதிகம் காணலாம். இந்த தர்பூசணி பழங்களில் உள்ள சிட்ருலின் என்னும் அமினோ அமிலம், இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து, உடல் முழுவதும் குறிப்பாக ஆணுறுப்பின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபட உதவி புரியும். எனவே இந்த பழத்தைக் கண்டால், வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.
2. மாதுளை
மாதுளை ஒரு சுவையான பழம் மட்டுமின்றி, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்ட பழமும் கூட. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவி புரிகின்றன. கூடுதலாக மாதுளை உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே பாலியல் பிரச்சனைகளைத் தடுக்க விரும்பினால், மாதுளம் பழத்தை தினமும் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
3. வாழைப்பழம்
வாழைப்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் சுவையான பழம். முக்கியமாக இது விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய பழம். இந்த பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6, டயட்டரி நார்ச்சத்து போன்றவை உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. ஒருவரது இதய ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், விறைப்புத்தன்மை கோளாறு போன்ற பாலியல் பிரச்சனைகள் மறைமுகமாக தடுக்கப்படும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்படுங்கள்.
4. ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையைக் கொண்ட நல்ல மணம் நிறைந்த பழம். இந்த பழத்தில் அந்தோசையனின்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, உடலினுள் உள்ள வீக்கங்களைக் குறைக்கின்றன. முக்கியமாக இந்த பழத்தின் மணம் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதால், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க விரும்புபவர்கள், இந்த பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.
5. அவகேடோ
வழுவழுப்பான, சுவையான அவகேடோ பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்ச்ததுக்கள் அதிகம் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் உள்ள ஆரோக்கியமான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கின்றன. உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், அது மறைமுறைகாக விறைப்புத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
6. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் புளிப்புச் சுவையை கொண்டிருப்பதோடு, வைட்டமின் சி-யை அதிகம் கொண்டவை. இந்த வைட்டமின் கொலாஜன் தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது ஆரோக்கியமான இரத்த நாளங்களை பராமரிக்கவும், விறைப்புத்தன்மையை ஆதரிக்கவும் உதவுகிறது.
7. ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இது விறைப்புத்தன்மை பிரச்சனையை கொண்டவர்களுக்கும் பொருந்தும். அதாவது, இந்த பிரச்சனையை கொண்டவர்கள் ஆப்பிளை தினந்தோறும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடாமல், ஆப்பிள் போன்ற சத்தான பழங்களை உட்கொள்ளுங்கள்.
8. கிவி
கிவி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெப்பமண்டல பழமாக இருந்தாலும், இது சுவையானது மட்டுமின்றி, மிகவும் சத்தான பழமும் கூட. அதுவும் இப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை ஆதரித்து விறைப்புத்தன்மை பிரச்சனையின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே இந்த பழங்களை ஆண்கள் அடிக்கடி உண்பதன் மூலம், விறைப்புத்தன்மை கோளாறை தடுக்கலாம்.
9. ப்ளூபெர்ரி
திராட்சை போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த சிறிய அளவிலான ப்ளூபெர்ரி பழங்களில் அந்தோசையனின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இந்த பழங்கள் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், விறைப்புத்தன்மை பிரச்சனையையும் தடுக்க உதவி புரியும். எனவே பாலியல் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் இந்த பழங்களை கண்டால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
10. செர்ரி
செர்ரி பழங்களில் அந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இவை ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கினற்ன. கார்டியோவாஸ்குலர் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், செர்ரி பழங்கள் மறைமுகமாக ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்புத்தன்மை பிரச்சனையை தடுக்க உதவுகின்றன. எனவே விறைப்புத்தன்மை பிரச்சனையை கொண்ட ஆண்க்ள இதுவரை செர்ரி பழங்களை சாப்பிடுவது தவிர்த்து வந்தால், இனிமேல் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications