Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
வாரத்துக்கு இந்த அளவுக்கு மேல சிக்கன் சாப்பிட்டால், இந்த புற்றுநோய் வருமாம் - புதிய ஆய்வில் தகவல்.. உஷார்..
Cancer: உலகளவில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இறைச்சி என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் புரோட்டீன் அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். இதனால் உடலுக்கு வேண்டிய புரோட்டீனைப் பெற பெரும்பாலானோர் சிக்கனை தங்களின் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள்.
ஆனால் இத்தாலியில் உள்ள தேசிய இரைப்பை குடல் ஆய்வகத்தின் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் குழு, சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதற்கும் செரிமான அமைப்பு புற்றுநோய்களால் ஏற்படும் ஆரம்பகால மரணத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு குறித்து நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டது. அதில் 20 வருடங்களாக இத்தாலியில் வசிக்கும் 4,869 பெரியவர்களின் ஆரோக்கியம் தொடர்பான தரவுகளை ஆய்வு குழு பகுப்பாய்வு செய்தது.

முந்தைய ஆராய்ச்சிகள் சிக்கனை சாப்பிடுவது, மாட்டிறைச்சியை சாப்பிடுவதை விட ஆரோக்கியமானது என்று பரிந்துரைத்தன. ஏனெனில் இது இதய நோய் மற்றும் சில இரைப்பை குடல் புற்றுநோய்களுக்கு பங்களிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆனால் தற்போதைய இந்த சமீபத்திய ஆராய்ச்சி, சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவது சில வகையான இரைப்பை குடல் புற்றுநோய்கள் மற்றும் ஆரம்பகால மரணத்துடன் இணைக்கப்படலாம் என்று கூறுகிறது. அதுவும் வாரத்திற்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் சாப்பிடுபவர்களிடையே இரைப்பை குடல் புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் தொடர்பான ஆரம்பகால இறப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரைப்பை குடல் புற்றுநோய் என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது?
இரைப்பை குடல் புற்றுநோய், வயிறு, குடல் பெருங்குடல் மற்றும் மலக்குடல் போன்றவற்றில் வீரியமிக்க கட்டிகள் உருவாவதைக் குறிக்கிறது. இந்த புற்றுநோய் செரிமான அமைப்பை மோசமாக பாதிக்கிறது. இந்த வகையான புற்றுநோய் கட்டிகள் மிகவும் ஆபத்தானவை. அதுவும் இந்த வகை புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது கடினம். இதனால் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது கடினம்.
மேலும் இரைப்பை குடல் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். அதில் வயிற்று வலி, விவரிக்க முடியாத எடை இழப்பு, தீவிர உடல் சோர்வு, மலத்தில் இரத்தக்கசிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுவும் இந்த அறிகுறிகள் அனைத்தும் புற்றுநோய் முன்னேறிய நிலையில் தான் தெரியவரும்.
இரைப்பை குடல் புற்றுநோய்க்கான காரணங்கள்
இரைப்பை குடல் புற்றுநோய் ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் மோசமான உணவுமுறை, மரபணுக்கள், தொற்றுகள் மற்றும் வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தற்போது இந்த பட்டியலில் வாரத்திற்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் மற்றும் முட்டைகளை உட்கொள்வதும் சேர்ந்துள்ளது.
இருப்பினும், இந்த அளவு சிக்கனை உட்கொள்வது ஏன் ஆபத்தை அதிகரிக்கிறது என்பது முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் சில கோட்பாடுகளைக் கொண்டுள்ளனர். சிக்கனை அதிகமாக சமைப்பது அதிக அளவு மியூட்டஜென்களை உருவாக்குகிறது. அவை ஒரு உயிரினத்தின் டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பயாலஜி ஆன்லைன் படி, இந்த மாற்றங்கள் உடலில் பல்வேறு விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதில் செயல்படாத டிஎன்ஏ பகுதிகளில் அமைதியான மியூட்டேஷன்கள் முதல் தீவிரமாக படியெடுக்கப்பட்ட பகுதிகளில் ஆபத்தான மியூட்டேஷன்கள் வரை அடங்கும்.
சிக்கன்கள் வளர்க்கப்படும் விதமும், அவற்றுக்கு உணவளிக்கும் விதமும் புற்றுநோய் அபாயத்திற்கு பங்களிக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆய்வுகளில், சிக்கன் சாப்பிடுவதால் மனிதர்கள் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஹார்மோன்களுக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு மேற்கோள் காட்டியுள்ளது.
சிக்கனை அதிகமாக உட்கொள்வது, குறிப்பாக கிரில் செய்யப்பட்ட அல்லது வறுத்த வடிவத்தில் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் சிக்கனில் HCAs மற்றும் PAHs போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உருவாகும். இவை குடல் செல்களை சேதப்படுத்தும் மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதற்காக சிக்கன் சாப்பிடக்கூடாது என்பதில்லை. மாறாக மிதமான அளவில் சிக்கனை உட்கொள்ள வேண்டும். அதுவும் ஒரு வாரத்தில் 300 கிராமுக்கு மேல் சாப்பிடாமல் குறைவாக சாப்பிட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











