Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
என்றென்றும் இளமையாக இருக்கணுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
நிறைய பேர் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக முயற்சி செய்கிறார்கள். ஆனால், புராணங்களில் இளமையாகத் தோற்றமளிக்க நிறைய தவம் செய்தார்கள். வெளிப்புற அழகை விட உள் அழகு மதிப்புமிக்கது. உள்ளே என்பது மனம் மட்டுமல்ல உடலும் கூட.
உடல் உள்ளுக்குள் ஆரோக்கியமாக இருந்தால், வெளியில் நாம் இளமையாக இருப்போம் என்று அர்த்தம். சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இளமையாக தோற்றமளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று இப்போது இண்டஹ் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

பாதம்
2021 இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, பாதாமில் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஆய்வில், பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு கைப்பிடி பாதாம் பருப்பை எடுத்துக் கொண்டனர். இதனால் அவர்களின் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாததாகவும் மாறியது. தினசரி கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை பாதாமில் கிடைக்கும்.
கேரட்
கேரட்டில் கரோட்டினாய்டுகள் அதிகம். இந்த கரோட்டினாய்டுகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு முகம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்பதை நடத்தை உளவியல் காட்டுகிறது.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசயனின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வயதாகும்போது ஒரு சில தசைகள் இழப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இது நம்மை இளமையாகக் காட்டும்.
தக்காளி
தக்காளியில் உள்ள லைசோபீன் நிறமி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இந்த லைசோபீன் இயற்கையான சன்ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது. இந்த லைசோபீன் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம். இந்த மோனோசாச்சுரேட்டட் கொழுப்பை அதிகம் உட்கொண்டவர்களுக்கு சுருக்கங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு கூட சுருக்கங்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவகேடோ
வெண்ணெய் பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது சருமத்தை இளமையாக வைத்திருக்கும். வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக இருப்பதால், சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
தண்ணீர்
அதிக தண்ணீர் குடிப்பது இளைஞர்களுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஒரு ஆய்வில், இளம் பெண்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பார்கள். அவர்களுக்கு முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.. 2 லிட்டரை விட குறைவான தண்னீர் குடிப்பவர்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டிருந்தது..
கிரீன் டீ
ஒரு நாளைக்கு இரண்டு கப் க்ரீன் டீ குடித்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கிரீன் டீயில் EGCG எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்குமாம்.
காய் கறி சூப்
தினமும் ஒரு கிண்ணம் வெஜிடபிள் சூப் குடித்து வந்தால், சருமம் மட்டுமின்றி முடி, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும். வயதான பெண்கள் இந்த சூப்பை சில நாட்கள் குடித்து வந்தால், அவர்களின் சரும சுருக்கங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முந்திரி
முந்திரி சாப்பிடுவதால் சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் இரும்புச் சத்தும், துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளதால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
கிவி
கிவி பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைக்கலாம் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், குறைவாக தூங்குபவர்களுக்கு சுருக்கங்கள் குறைவாக இருப்பதாகவும், அவர்கள் தினமும் கிவி பழத்தை உண்பதாகவும் கண்டறியப்பட்டது.
நட்ஸ் வகைகள்
நட்ஸ் நமது வழக்கமான ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகும், இது உடலில் கூடுதல் கலோரிகளை சேர்க்காது. இவை வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பாதாம், முந்திரி, பிஸ்தா, வால் நட்ஸ் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தயிர்
தயிரில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. தயிரில் ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
சால்மன் மீன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவை தோல் சுருக்கம் மற்றும் கோடுகள் வராமல் இருக்க பயனுள்ளதாக இருக்கும்.
தேன்
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. மேலும் இதில் கால்சியம், நியாசின், தயாமின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. தொடர்ந்து தேனை உட்கொள்வதால் கவலை உணர்வை குறைத்து நினைவாற்றலை அதிகரிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











