உடல் எடையை குறைக்கணுமா? சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க போதும்..!

பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த உடல் பருமனை குறைப்பது என்பது எளிதல்ல. இருப்பினும், எதுவும் முயன்றால் சாத்தியம்தான். இதனால் உடல் பருமனை குறைக்க பல்வேறு உணவு முறைகளும் உணவு வகைகளும் இணையத்தில் வலம் வருகின்றன. சியா விதைகள் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு உணவு. இந்த சியா விதைகள் அளவு சிறியதாக இருந்தாலும், அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

இந்த விதைகள் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி இதயம் முதல் மூளை வரை உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஏனெனில் இந்த சியா விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த விதைகளை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம். சரி, இந்த சியா விதைகள் எப்படி உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் அந்த சியா விதைகளை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

eat chia seeds daily for weight loss

சியா விதை ஊட்டச்சத்து அதிகமாகக் கொண்டது.. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், மினரல்கள், அதிக நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு சத்து இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் நல்லது. எடை இழப்புக்கான முக்கிய காரணிகளில் ஒன்று. நமது உடலில் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றமாகும். அதற்கு இந்த சியா விதை பயனுள்ளதாக இருக்கும். எடை இழப்புக்கு சியா விதை எவ்வாறு உதவுகிறது? இதை உட்கொள்வதால் தாவர அடிப்படையிலான புரதம் கிடைக்கிறது. இது தசைகளை வலுவாக்கி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அது உடல் பருமனை கரைக்கிறது. சியா விதைகளை உட்கொள்வது பசியின்மையை ஏற்படுத்துகிறது.. இதனால் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.

சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?

சியா விதைகளை சாலட் அல்லது மில்க் ஷேக் உடன் சாப்பிடலாம். அதிலிருந்து உண்மையான பலனைப் பெற இதைப் பயன்படுத்தவும். சியா விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு அடுத்த நாள் காலை உணவுக்கு முன் குடிக்கலாம். இரவில் ஊற வைக்க மறந்துவிட்டால், அதனை எடுத்துக் கொள்ளும் 20 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கவும்..

1. சியா புட்டிங்

ஒரு பாத்திரத்தில் பால், தயிர், சியா விதைகள், அரை ஸ்பூன் சிரப் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். பின் அனைத்தையும் ஒன்றாக 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் காலை வெளியே எடுத்தால், க்ரீம் சியா புட்டிங் ரெடி. விரும்பினால், உங்களுக்கு விருப்பமான சில பழங்களை மேலே கலந்து சாப்பிடலாம்..

2. ஃப்ரூட் அண்ட் நட்ஸ் சாலட்

முதலில் தேங்காய் பாலில் சில சியா விதைகளை போட்டு தேன் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உங்களுக்கு விருப்பமான பழங்களை நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின் அதில் சில விதைகளை அரைத்து பழங்களுடன் கலக்கவும். பின் அதனுடன் சியா விதை கலவையை சேர்த்து நன்கு கலக்கினால் சாலட் ரெடி.உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த சாலட்.

3. சியா விதை ஓட்ஸ்

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், சியா விதைகள், பட்டை தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை இணைக்கவும். பிறகு பாதாம் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். ஓட்ஸ் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். பிறகு தேன், உங்களுக்குப் பிடித்த பழங்கள், கொட்டைகள் சேர்த்து சாப்பிட்டால் சுவையான சியா ஓட்ஸ் கிடைக்கும்.

4. சியா விதை எலுமிச்சை சாறு

சியா விதைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றவும். பின் புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து 20-30 நிமிடம் ஊற விடவும்.30 நிமிடம் கழித்து நன்றாகக் கலக்கினால் ஜூஸ் ஜெல் போல் ஆகிவிடும். இப்போது சுவையான சியா விதை எலுமிச்சைப்பழம் தயார்.

5. சியா விதைகளை ஊறாமல் சாப்பிடக் கூடாதா?

இல்லை ஊறாமல் சாப்பிடலாம். ஆனால் இப்படி சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது எனவே ஊறவைத்து எடுத்துக்கொள்வது நல்லது. சியா விதைகள் ஆண், பெண் இருவருக்குமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்தாலும் பெண்களுக்கு உடலில் இடுப்பு, தொடை பகுதிகளில் தேங்கும் கொழுப்புகள் கொஞ்சம் கரைய கடினமானதாக இருக்கும். நீண்ட நாட்கள் எடுக்கும். அதுபோன்ற கரையக் கடினமாக இருக்கும் பெண்களின் உடல் கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.

6. வெறும் சியா விதைகளால் உடல் எடையை குறைக்க முடியுமா?

சியா போன்ற எந்த உணவையும் உட்கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க முடியாது. என் எடை குறைய இந்த பொடி போதும் என்பது பொய். நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். அத்த்டன் சேர்த்து சியா விதைகளையும் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, June 9, 2024, 22:09 [IST]
Desktop Bottom Promotion