Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அது கருப்பை புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்.. உஷார்...
Ovarian Cancer Symptoms In Tamil: உலகில் பெண்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் கருப்பை புற்றுநோய். இது மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான புற்றுநோயாகும். என்ன தான் நமது மருத்துவ உலகில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு நோய் வந்து அதை சரிசெய்ய முயற்சிப்பதை விட, அந்நோய் வராமல் தடுப்பதே எப்போதும் சிறந்தது. அதற்கு ஒரு நோய் எப்போது வருவதற்கான வாய்ப்புள்ளது மற்றும் எந்த காரணங்களால் ஒருவருக்கு வரும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பெண்கள் நிறைய பேருக்கு கருப்பை புற்றுநோய் குறித்து தெரிவதில்லை. இந்த கருப்பை புற்றுநோயானது 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கருப்பை புற்றுநோய் அமைதியாக இருந்து பெண்களை அழிக்கும் ஒரு கொடிய நோயாக பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அது தவறு. கருப்பை புற்றுநோயும் ஒருசில அறிகுறிகளை ஆரம்ப காலத்தில் வெளிக்காட்டும் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்யலாம். இப்போது பெண்களைத் தாக்கும் கருப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

வயிறு உப்புசம்
மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்ட பின் வயிற்று உப்புசத்தை சந்திப்பார்கள். ஆனால் அந்த வயிற்று உப்புசத்தை ஒரு பெண் நீண்ட நேரம் அனுபவித்தால், அந்த பெண்ணிற்கு கருப்பை புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.

அடிவயிற்று வலி அல்லது இடுப்பு வலி
கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடைய காணப்படும் பொதுவான அறிகுறிகள் தான் அடிவயிற்று வலி மற்றும் இடுப்பு வலி. அதுவும் இந்த வலியானது கடுமையானதாக இருக்கலாம் அல்லது பிடிப்பு போன்று இருக்கலாம். அதுவும் கட்டியின் அளவைப் பொறுத்து, அது உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருப்பதால், பல பெண்கள் இந்த அறிகுறியை புறக்கணிப்பதுண்டு. ஆனால் கருப்பை புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்று தான் அடிக்கடி சிறுநீர் கழிப்பது. அதுவும் கருப்பையில் உள்ள கட்டியின் அளவைப் பொறுத்து சிறுநீர் கழிக்கும் முறை அதிகரிக்கும்.

முதுகு வலி
பெரும்பாலான பெண்கள் புறக்கணிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான கருப்பை புற்றுநோயின் அறிகுறி தான் முதுகு வலி. காரணமின்றி ஒரு பெண் முதுகு வலியை சந்தித்தால், அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பசியின்மை
கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பசியின்மை, அஜீரண கோளாறு, குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். எனவே திடீரென்று உங்களுக்கு இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால், அதை சாதாரணமாக எடுக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மாதவிடாய் மாற்றங்கள்
ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கு, மாதவிடாய் அல்லாத நாட்களில் இரத்தப்போக்கு போன்றவை கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது. வழக்கமான மாதவிடாயை சந்திக்கும் பெண்கள் திடீரென்று ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்தித்தால், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை பெண்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையில் போட்டோ, தலைப்பு, Tags போன்றவை மாற்றப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
