Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் அசாலட்டா இருக்காதீங்க... இது தோல்புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாம்...!
Skin Cancer Symptoms: தோல் புற்றுநோய் என்பது தோல் செல்களில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சியாகும், இது பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு வெளிப்படும் தோலில் உருவாகிறது. இது ஆரம்பத்தில் உங்கள் கழுத்து, காது, முகம், உதடுகள், மார்பு, கைகள் மற்றும் கால்கள் உட்பட சூரியன் மற்றும் புற ஊதா கதிர்கள் வெளிப்படும் பகுதிகளில் உருவாகலாம்.

தோல் புற்றுநோயானது சூரிய வெளிச்சம் அரிதாக அடையும் பகுதிகளான, உங்கள் உள்ளங்கை, விரல் நகங்கள் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உலகெங்கிலும் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கும் ஒரு தீவிர புற்றுநோய் நிலையாகும். அதனால்தான் தோல் புற்றுநோயுடன் தொடர்புடைய அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் மற்றும் உடனடி நோயறிதலுக்காக உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
தோல் புற்றுநோயின் வகைகள்
பாசல் செல் கார்சினோமா (பி.சி.சி)- பொதுவாக முகம் மற்றும் கழுத்து போன்ற சூரிய ஒளியில் வெளிப்படும் பகுதிகளில் உருவாகிறது மற்றும் இது ஒரு கட்டி, கொப்புளம் அல்லது சரும நிற பம்ப் போல் தோன்றும்.
ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (SCC)- உடனடி சிகிச்சை வழங்கப்பட்டால், இது பொதுவாக தீவிரமானதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தானதாகவோ இருக்காது. ஒருவேளை சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பெரிதாக வளரலாம் அல்லது உடல் முழுவதும் பரவலாம். ஸ்குவாமஸ் செல் கார்சினோமா பொதுவாக தோலில் ஒரு சிவப்பு திட்டு, அல்லது திறந்த புண்கள் போல் இருக்கும்.
மெலனோமா- மெலனோமா என்பது தோல் நிறமிக்கு காரணமான உயிரணுவான மெலனோசைட்டுகளில் உருவாகும் மிகவும் தீவிரமான தோல் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் உடலில் எங்கு வேண்டுமென்றாலும் உருவாகலாம் மற்றும் மச்சங்களின் அசாதாரண வளர்ச்சி, சீரற்ற நிறம் மற்றும் வளரும் அளவு ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகிறது.
சரும புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்
சருமத்தில் புதிய வளர்ச்சி
புதிய கட்டிகள், மச்சங்கள், புடைப்புகள் அல்லது உங்கள் தோலில் ஏதேனும் புள்ளிகளின் அசாதாரண வளர்ச்சி இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். இந்த அசாதாரண வளர்ச்சிகளை உங்கள் சருமத்தில் நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும், ஏனெனில் அவை தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
மச்சத்தில் மாற்றங்கள்
உங்கள் உடலில் ஏற்கனவே மச்சம் இருந்தால், அவற்றின் அளவு, வடிவம் அல்லது நிறத்தில் நிலையான மாற்றங்களைக் கவனிக்கத் தொடங்கினால், அது தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
குணமடையாத புண்கள்
தோல் புண்கள் மற்ற புண்களைப் போலவே ஒரு வகையான தோல் பிரச்சினை ஆகும். சில வாரங்களுக்குப் பிறகும் குணமடையாத தோல் புண்கள் இருந்தால், அது தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த புண்கள் வலி, கசிவு மற்றும் சில சந்தர்ப்பங்களில் இரத்தம் கூட வெளிவரலாம்.
அரிப்பு
சிலருக்கு தோலில் ஒரு மச்சம் அல்லது குறிப்பிட்ட பகுதி திடீரென வலி, அரிப்பு, காயம் அல்லது தொடர்ந்து தேய்ப்பதால் சிவப்பு நிறமாக மாறினால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிவப்பு நிற திட்டுகள்
இந்த திட்டுகள் முகம், மார்பு, கைகள் அல்லது கால்கள் உட்பட தோலில் எங்கும் தோன்றலாம். அவை வலி, அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தலாம் அல்லது வலியை ஏற்படுத்தாமலேயே இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
