Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
நீங்க அதிகமாக குடிக்கிறீங்களா? உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க கல்லீரல் பெரிய ஆபத்தில் இருக்காம்!
Fatty Liver In Tamil: அதிகளவு ஆல்கஹால் அருந்துவது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். இது ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தான பிரச்சனையையும் ஏற்படுத்தும். கல்லீரலுக்கு தன்னைத்தானே குணப்படுத்தும் திறன் உள்ளது.
நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். இதன் செயல்பாடுகள் இல்லையென்றால் அல்லது பாதிக்கப்பட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். பொதுவாக மது அருந்துவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிகப்படியான மது அருந்துவதை நீங்கள் குறைக்கவில்லை என்றால், விரைவில் உங்கள் கல்லீரல் அதிகம் பாதிப்படையும்.

கல்லீரல் செயல்பாடு குறைவது மற்றும் கல்லீரலில் கொழுப்பு படிவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சேதமடைந்த கல்லீரல் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் அல்லது வெளிப்படுத்தாமல் இருக்கலாம். மேலும், தோன்றும் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்ளாமல் இருக்கலாம்.
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் உங்களின் மிக முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள இந்த அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ஆல்கஹால் கொழுப்பு கல்லீரலின் கவனிக்க வேண்டிய சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
வயிற்று வலி
பொதுவாக வயிற்று வலியை நாம் சாதாரணமாக கடந்து செல்லும் பிரச்சனையாக பார்க்கிறோம். ஆனால், சில நேரங்களில், வயிற்று வலி ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அந்த வகையில், கொழுப்பு கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறியாக வயிற்று வலி இருக்கிறது.
உங்கள் வயிற்று பகுதியில் மென்மை, அசௌகரியம் அல்லது அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் நிரம்பிய உணர்வு மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வு உங்கள் கல்லீரல் பிரச்சனையில் உள்ளதைக் குறிக்கிறது.
பசியின்மை
அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து மது அருந்துவதால் இந்த நிலை மேலும் அதிகரிக்கும். ஆல்கஹால் ஹெபடைடிஸுக்கு வழிவகுக்கும் இந்த கொழுப்பு கல்லீரல் பசியின்மையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
உடல் சோர்வு
சில நேரங்களில் உடல் சோர்வு ஏற்படுவது சாதாரணம். ஆனால், எல்லா நேரமும் அப்படி இருக்காது. உங்கள் உடலில் ஏதேனும் ஆபத்தான பிரச்சனை இருந்தாலும், உடல் சோர்வு ஏற்படலாம். கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
இது அழற்சிக்கு சார்பான சைட்டோகைன்களின் வெளியீட்டை ஊக்குவிக்கும். இந்த சைட்டோகைன்கள் உடல்சோர்வு உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
வயிற்றுப்போக்கு
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த், யு.எஸ்.யின் கூற்றுப்படி, கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் தாமதமான சிறுகுடல் செயல்பாடு சிறிய பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது வயிற்றுப்போக்கிற்கு பங்களிக்கும். உங்களுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் அதிகம்
மேலே குறிப்பிட்டுள்ள ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைத் தவிர, கல்லீரல் பாதிப்பு இன்னும் பிற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். அவை பின்வருவன:
- மஞ்சள் காமாலை
- கால்கள், கணுக்கால் மற்றும் கால்களில் திரவம் குவிவதால் ஏற்படும் வீக்கம்
- அடிவயிற்றில் வீக்கம்
- அதிக தோல் அரிப்பு
- முடி கொட்டுதல்
- வழக்கத்திற்கு மாறாக வளைந்த விரல் நுனிகள் மற்றும் நகங்கள்
- கருமையான சிவப்பு உள்ளங்கைகள்
- குறிப்பிடத்தக்க எடை இழப்பு
- உட்புற இரத்தப்போக்கு காரணமாக கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது
- வாந்தியில் இரத்தம்
- ஆல்கஹால் மற்றும் மருந்துகளுக்கு அதிக உணர்திறன் வெளிப்படுத்துவது
- கல்லீரலின் செயல்பாடு குறைவது
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


