Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
எச்சரிக்கை! ஒரு நாளைக்கு இத்தனை 'கப்'-க்கு மேல் காபி குடிச்சா மாரடைப்பு வருமாம்... உஷாரா இருங்க...
Coffee Cause Heart Attack: உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால், அது காபி தான். அதுவும் காலையில் எழுந்ததும் பற்களைக் கூட துலக்காமல் பெட் காபியை குடிப்போர் ஏராளம். அப்படிப்பட்ட காப்ஃபைன் நிறைந்த காபியானது ஒருவருக்கு உடனடி ஆற்றலை அளிப்பதோடு, நல்ல புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் என்ன தான் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால் அது ஆபத்து தான். அது இந்த காபிக்கும் பொருந்தும்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு 400 மிகி காப்ஃபைன் அல்லது 4 கப் காபிக்கு மேல் குடிப்பது, ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த அளவில் காப்ஃபைனை எடுப்பது இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை காலப்போக்கில் மெதுவாக அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்படி அதிக காப்ஃபைனை எடுக்கும் போது, அது பாராசிம்பேடிக் அமைப்பை தொந்தரவு செய்து, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவற்றை அதிகரித்து, இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் தேய்மானத்தை ஏற்படுத்தி, இதயத்தை பலவீனப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாக இறுதியில், அது பக்கவாதம், மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதுக்குறித்து ஆய்வு ஆசிரியர் டாக்டர் நென்சி ககதாரா கூறியதாவது, இந்த ஆய்வானது 92 ஆரோக்கியமானவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட 92 பேரின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அளவும் 3 நிமிட கார்டியோ பயிற்சிக்கு முன்னும், பின்னும் எடுக்கப்பட்டது. மேலும் இவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு காப்ஃபைனை உட்கொண்டனர் என்பது பற்றிய தகவல்களையும் வாங்கிக் கொண்டனர். அதில் இந்த ஆய்வில் பங்கேற்ற 20 சதவீதம் பேர் தினமும் 400 மிகி காப்ஃபைன் உட்கொண்டனர். இது 4 கப் காபிக்கு சமமாகும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 400 மிகி காப்ஃபைனை எடுக்கக்கூடாது. ஆனால் 400 மிகி-க்கும் அதிகமான காப்ஃபைனை எடுத்தவர்களுக்கு, 3 நிமிட கார்டியோ பயிற்சிக்கு பின் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்றவை அதிகரிக்கும் அபாயம் அதிகமிருப்பது தெரிய வந்தது. இவ்வாறு அதிகமாக காப்ஃபைனைப் பயன்படுத்துபவர்கள் நகர்ப்புறங்களில் வசித்த பெண்கள் மற்றும் வணிகச் சூழலில் பணிபுரிந்தவர்களாக உள்ளனர்.
காப்ஃபைன் எப்படி இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது?
காப்ஃபைன் என்பது மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பொருளாகும். இது காபி கொட்டைகள், டீ, சாக்லேட் உட்பட 60-க்கும் மேற்பட்டவைகளில் இயற்கையாகவே உள்ளன. இது தவிர எனர்ஜி பானங்கள், குளிர் பானங்கள், வலி நிவாரணிகள் போன்ற பலவற்றிலும் இந்த காப்ஃபைன் செயற்கையாக சேர்க்கப்படுகிறது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, காப்ஃபைன் இரத்த அழுத்தத்தில் குறுகிய கால அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. ஏனெனில் இது பெருநாடியில் உள்ள அடினோசைன் ஏற்பிகளை தடுத்து, அடினோசைன் அளவுகளை அதிகரிக்க வழிவகை செய்கிற்து. இதன் விளைவாக இரத்த அழுத்தத்தில் சட்டென்று உயர்வு ஏற்படுகிறது.
மேலும் காப்ஃபைன் நோராட்ரீனலின் மற்றும் நோர்பைன்ப்ரைன் வெளியீட்டை ஏற்படுத்துவதன் மூலம், காப்ஃபைன் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட காபியை ஒருவர் தினமும் குடித்துவந்தால், பின் அது இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றை அதிகரித்து, மாரடைப்பு, இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே அளவாக காபியைக் குடித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications