Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஆண்களே! சொட்டு சொட்டா சிறுநீர் கழிக்கிறீர்களா? உடனே டாக்டரை சந்திங்க.. எச்சரிக்கும் டாக்டர் ஃபரூக்!
பெண்களைப் போன்றே ஆண்களும் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் ஆண்கள் தாங்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் சென்று அப்பிரச்சனையை பற்றி விரிவாக பேச தயக்கம் கொள்வதுண்டு. குறிப்பாக ஆணுறுப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் பேச கூச்சம் கொள்வார்கள்.
ஆண்கள் தாங்கள் சந்திக்கும் ஆணுறுப்பு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி பேச தயக்கம் கொள்ளக்கூடாது. அப்படி தயக்கம் கொண்டால், பின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஆண்கள் சந்திக்கும் புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் சிறுநீர் கழித்தல் பிரச்சனை குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆண்களுக்கு அவர்களது நாற்பதுகளின் பிற்பகுதியில் இருந்து சிறுநீர்ப்பைக்கு வெளிப்புறம் சிறுநீர் செல்லும் பாதையான யூரித்ராவுக்கு வெளியே "புரோஸ்டேட்" எனும் சுரப்பி வீக்கம் காண ஆரம்பிக்கிறது. புரோஸ்டேட் சுரப்பியில் இருந்து வரும் சுரப்பு - விந்தணுக்களுக்கு ஊட்டம் அளிக்கும் விதத்தில் சத்துகளை கொண்டிருக்கும். நீரிழிவு நோயர்களுக்கு இத்தகைய புரோஸ்டேட் வீக்கம் சற்று சீக்கிரமே தொடங்கி விடுகிறது.
புரோஸ்டேட் அறிகுறிகள்
அறுபது வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதாக உணர ஆரம்பிப்பார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் ஒரு முறை சிறுநீர் கழிக்கச் சென்றால் முழுவதுமாக சிறுநீரை வெளியேற்ற இயலாமல் கொஞ்சம் சிறுநீர் மிச்சம் இருக்கும் உணர்வு வரவே மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள். ஒரு முறையில் கழிக்க வேண்டிய சிறுநீர் அளவை நான்கு முறை கழித்தால் தான் வெளியேறும். சிறுநீர்ப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் இந்த புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் தான் இதற்கு காரணமாக அமைகிறது.
சிலருக்கு இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று கூட ஏற்படக்கூடும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, குறைவான அளவில் குறைவான அழுத்த விசையில் சிறுநீர் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் இருப்பின் மருத்துவர் அறிவுரையின் பேரில் ஒரு வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதி ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் புரோஸ்டேட் சுரப்பி வீங்கியிருப்பது தெரிய வரும். கூடவே சிறுநீர் கழிக்கச் செய்து விட்டு மருத்துவர் சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீரின் அளவை ஸ்கேன் செய்வார்.
இந்த POST MICTURITION RESIDUAL URINE அளவு அதிகமாக இருப்பின் அது புரோஸ்டேட் வீக்கத்தின் அளவையும் சிறுநீர்ப்பாதையின் விட்டத்தை எவ்வளவு அடைக்கிறது என்பதையும் கூறும். இந்த நோயை BENIGN PROSTATE HYPERPLASIA (புரோஸ்டேட் சுரப்பி வீக்கம்) என்று அழைக்கிறோம்.
புரோஸ்டேட் கேன்சர்
ஆண்களைப் பொருத்தவரை புரோஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புள்ள முக்கியமான மற்றொரு விசயம் புரோஸ்டேட் கேன்சர் ஆகும். எனவே புரோஸ்டேட் வீக்கமாக இருக்கும் நபர்களுக்கு புரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆண்டிஜென் ( serum PSA - Prostate specific Antigen) எனும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும். இந்த ஆண்டிஜென் புரோஸ்டேட் புற்றுநோயில் அளவில் அதிகமாக அறியப்படும்.
இத்துடன் யூரோ ஃப்ளோமெட்ரி எனும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் வெளியேறும் அழுத்த விசை மற்றும் அளவு போன்றவற்றை வைத்து புரோஸ்டேட் அடைப்பின் தீவிரத்தை உணர முடியும்.
சிகிச்சைகள்
சாதாரண நிலையில் உள்ள புரோஸ்டேட் வீக்கத்துக்கு புரோஸ்டேட் சுரப்பியின் மொத்த அளவைக் குறைக்கும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். பெரிய அளவில் வீக்கம் இருக்குமாயின் / கூடவே புற்றுநோய் காரணி அதிகமாக இருந்தால், அவர்களுக்கு ஆண்குறி வழியாக ஸ்கோப் எனும் நுண் இளகிய குழாயைச் செலுத்தி புரோஸ்டேட் சுரப்பியின் அளவைக் குறைக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்த சிகிச்சையை டர்ப் (TURP - TRANSURETHRAL RESECTION OF PROSTATE) என்று அழைக்கிறோம். இதன் விரிவாக்கம் யுரித்ரா வழியாக புரோஸ்டேட்டின் அளவைக் குறைத்து அடைப்பை நீக்கும் சிகிச்சை என்று பொருள். இந்த சிகிச்சைக்கு வெளிப்புற காயமோ, தையலோ, தழும்போ இருப்பதில்லை.
உங்களின் குடும்ப உறுப்பினரில் மத்திய வயதைத் தாண்டிய ஆண்களுக்கு சிறுநீர் கழித்தலில் சிக்கல் இருப்பின் புரோஸ்டேட் குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும் புரோஸ்டேட் புற்றுநோய் தான் உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் நம்பர் ஒன் புற்றுநோய் என்பதால், வயது முதிர்ந்த ஆண்களில் (குறிப்பாக 60 வயதுக்கு மேல்) இந்த புரோஸ்டேட் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும். தாமதம் கூடாது என்று தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications