Latest Updates
-
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா
எச்சரிக்கை! இந்த 6 பழங்களை மறந்தும் ஃப்ரிட்ஜ்-ல வெக்காதீங்க.. இல்லன்னா அது விஷமாகி உயிருக்கே ஆபத்தாயிடும்...
காய்கறிகள், பழங்கள் போன்றவை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமென்று நாம் அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருப்போம். ஆனால் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நாம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருக்க முடியாது.
ஒருசிலவற்றை தான் நாம் வைக்க வேண்டும். குறிப்பாக பழங்களை எடுத்துக் கொண்டால், ஒருசில பழங்களை மட்டும் தான் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். ஏனெனில் சில பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் அவை விரைவில் கெட்டுப் போகும் அல்லது அவை விஷமாகிவிடும்.

முக்கியமாக பல்பி பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அவை நஞ்சாகி, உடலுக்கு தீங்கை விளைவிக்கும். இப்போது எந்த பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து, நன்மைக்கு பதிலாக தீமையை ஏற்படுத்தும் என்பதைக் காண்போம். நீங்கள் இதுவரை அந்த பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருந்தால், இனிமேல் அப்படி வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
வாழைப்பழம்
பெரும்பாலானோரின் வீட்டில் எப்போதும் இருக்கும் ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். முக்கியமாக வாழைப்பழம் அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழமும் கூட. இப்படிப்பட்ட வாழைப்பழத்தை எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருக்கக்கூடாது.
அப்படி வைத்தால், வாழைப்பழம் விரைவில் கருமையாகிவிடும். மேலும் வாழைப்பழத்தில் இருந்து வெளிவரும் எத்திலின் வாயுவானது, மற்ற பழங்களை விரைவில் பழுக்கச் செய்துவிடும். எனவே எப்போதும் வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜிலோ அல்லது மற்ற பழங்களுடன் சேர்த்தோ வைக்கக்கூடாது.
தர்பூசணி
கோடையில் அதிகம் வாங்கி சாப்பிடப்படும் ஒரு பழம் தான் தர்பூசணி. இந்த பழம் மிகவும் பெரியதாக இருப்பதால், இவற்றை வெட்டினால், ஒரே வேளையில் சாப்பிட முடியாது. இதனால் நிறைய பேர் வெட்டிய தர்பூசணி பழத் துண்டுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதுண்டு.
ஆனால் இப்படி செய்வது தவறு. தர்பூசணிப் பழத்தை எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அழிக்கப்பட்டுவிடும். எனவே அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீர்கள்.
ஆப்பிள்
வாழைப்பழத்திற்கு அடுத்தப்படியாகபெரும்பாலானோர் வாங்கி சாப்பிடக்கூடிய பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளின் விலை அதிகமாக இருந்தாலும், தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கூறுவதால், பலரும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக ஆப்பிளை வாங்கினால், நிறைய பேர் முதலில் அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் தான் வைப்பார்கள்.
ஆனால் ஆப்பிளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அவை விரைவில் பழுத்துவிடும். இதற்கு இதில் இருக்கும் செயலில் உள்ள நொதிகள் தான் காரணம். எனவே ஆப்பிளை எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காரீர்கள். ஒருவேளை வைப்பததாக இருந்தால், அவற்றை ஒரு பேப்பரில் சுற்றி வையுங்கள். ஆப்பிளை மட்டுமின்றி, ப்ளம்ப்ஸ், செர்ரி, பீச் போன்ற பழங்களையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மாம்பழம்
மாம்பழத்தை எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அந்த பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மெதுவாக குறைய ஆரம்பித்துவிடும். மேலும் மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் அழியத் தொடங்கும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
லிச்சி
கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம் தான் லிச்சி. இந்த லிச்சி பழம் மிகவும் அட்டகாசமான சுவையைக் கொண்டது. பலரும் இந்த பழத்தை வாங்கி வந்தால், விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பார்கள். இப்பழத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அதன் மேல் பகுதி பிரஷ்ஷாக இருக்கும். ஆனால் அதன் உட்பகுதி கெட்டுப் போக ஆரம்பித்துவிடும். எனவே இந்த பழத்தையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள்.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும். ஏனெனில் இவற்றில் சிட்ரிக் அமிலம் அதிகளவில் உள்ளன. சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ள பழங்களால் குளிர்ச்சியான காலநிலையில் இருக்க முடியாது. அப்படி வைக்கும் போது, அவற்றில் உள்ள சத்துக்க மெதுவாக அழியத் தொடங்கிவிடும்.
கூடுதலாக சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்களை மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் வைக்கும் போது, அவை மற்ற உணவுகளையும் விரைவில் கெட்டுப் போகச் செய்துவிடும். எனவே சிட்ரஸ் பழங்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications