Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
நீங்கள் சிக்கன் பிரியரா? கோழியின் இந்த பகுதியை சாப்பிடக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
கோழிக்கறி என்பது புரதச்சத்து நிறைந்த உணவு மற்றும் அசைவ பிரியர்களுக்கு விருப்பமான உணவாகும். ஆட்டிறைசி விலை அதிகம்.. ஆனால் சிக்கன் விலை அதிகம் இல்லாததால், அதனை மக்கள் அடிக்கடி வாங்கி சமைக்கின்றனர்.. டயட் செய்பவர்களும் சிக்கன், க்ரில்டு சிக்கன்தான் அதிகம் சாப்பிடுவார்கள்.
ஆனால் கோழிக்கறியை விரும்புகிறவர்கள் பண்ணை கோழியை குறைக்க அறிவுறுத்துகிறார்கள் சுகாதார நிபுணர்கள்.. கோழியின் சில பகுதிகள் சாப்பிடக்கூடாது எனவும் ஆரோக்கியத்திற்கு அது நல்லதல்ல எனவும் கூறுகின்றனர். எனவே கோழியின் எந்த பகுதி நன்றாக இல்லை என்று மருத்துவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

கோழியின் எந்தப் பகுதி நல்லதல்ல?
கோழியின் தோல் சாப்பிட ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.. அதில் அதிக கொழுப்பு உள்ளடங்கி உள்ளது.. அதுமட்டுமல்லாமல் கோழியை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க ரசாயனங்கள் சேர்க்கப்படலாம், எனவே தோலை சாப்பிடுவது நல்லது... இதயநோய் நிபுணர்கள் கூட கோழியின் தோலை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள், பண்ணை கோழியை குறைவாக பயன்படுத்தலாம், ஆனால் நீங்கள் பண்ணை கோழியை சாப்பிட்டால், தோல் இல்லாத கோழியை சாப்பிடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.. கோழி தோலில் நிறைவுறா கொழுப்பு அதிகமாக இருக்கும். கலோரிகளும் அதிகம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோழியின் தோலை சாப்பிடக்கூடாது.
கோழி தோல் முற்றிலும் பாதிப்பில்லாததா?
சிக்கன் தோலில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்புகள் உள்ளன, எனவே சிக்கனை அடிக்கடி சாப்பிடாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது.. ஆரோக்கியத்திற்கும் பிரச்சனை இல்லை.. எனவே கோழியின் தோலை குறைவாக சாப்பிட்டுக் கொள்ளலாம்..
கோழியின் எந்த பகுதி நல்லது?
கோழி மார்பகம்
அதிக புரதச்சத்து இருப்பதால் கோழி மார்பகம் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை கட்டுப்படுத்த இது மிகவும் நல்லது, மேலும் தசை வளர்ச்சிக்கும் கோழி மார்பகம் மிகவும் நல்லது.
கோழி தொடைகள்
கோழி மார்பகத்தை விட கோழி தொடைகளில் அதிக கொழுப்பு உள்ளது. சிக்கன் விங்ஸில் அதிக கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் இருப்பதால், அவற்றை வறுத்ததை விட குழம்பு வைத்து சாப்பிடுவது சிறந்தது.
KFC Chicken Recipe : டேஸ்டியான சாஃப்டான கேஎஃப்சி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி?
கோழியில் எந்த கோழி சிறந்தது?
பண்ணை கோழியை விட நாட்டுக் கோழி சிறந்தது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இந்த கோழியை சாப்பிடுவது சமநிலையை பராமரிக்க உதவுகிறது. எடை கட்டுப்பாட்டில் பயனுள்ளது இந்த நாட்டுக்கோழி.. ஆனால் பொதுவாகவே கோழியை உட்கொள்வதால் எடை அதிகரிக்காது... அதன் நுகர்வு உடலுக்குத் தேவையான புரதங்களை அதிகமாக தரும்... எனவே ஜிம்மிற்கு செல்வோர் கோழிக்கறியை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் எப்போதுமே பண்ணை கோழியை விட நாட்டிக்கோழிகளை சாப்பிடுவது நல்லது.. அது மட்தும்மல்லாமல் எந்த கோழியாக இருந்தாலும் அதில் உள்ள தோலை உரித்து விட்டு சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications