Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இதுல உங்க நகம் எந்த கலர்-ல இருக்கு-ன்னு சொல்லுங்க.. உங்க உடம்புல என்ன பிரச்சனை-ன்னு சொல்றோம்...
Nail Color And Health Problems: நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் தொடர்புடையது. அதனால் தான் நம் உடலின் ஒரு உறுப்பு/பகுதியில் பிரச்சனை இருந்தால், அதன் அறிகுறி சம்பந்தமே இல்லாத இடத்தில் தெரிகிறது. முக்கியமாக நமது விரல் நகங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விஷயங்களை தெரியப்படுத்தும் என்பது தெரியுமா?
குறிப்பாக விரல் நகங்களில் காணப்படும் மாற்றங்கள், உடலில் எந்த விதமான பிரச்சனை உள்ளது என்பதை தெரியப்படுத்தும். உங்களின் விரல் நகங்கள் திடீரென்று வித்தியாசமான நிறத்தில் உள்ளதா அல்லது உங்கள் விரல் நகங்களில் ஏதேனும் மாற்றங்களை காண்கிறீர்களா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில் விரல் நகங்களின் நிறங்களைக் கொண்டு உடலின் எந்த உறுப்பில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்பதை அறியலாம். இதுக்குறித்து டாக்டர். ஐசக் அப்பாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விரல் நகங்கள் எந்த நிறத்தில் இருந்தால், உடலில் என்ன பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "நமது விரல் நகங்களின் நிறத்தைக் கொண்டே உடலில் என்ன நோய் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதுவும் விரல் நகங்களின் க்யூட்டிகிளுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறத்தில் இருந்து, நகங்களின் முனைப்பகுதி சிவப்பு நிறத்திலும் இருந்தால், அது டெரிஸ் நெயில். இப்படியான நகம் இருந்தால், கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் பாதிப்பு இருக்கலாம். ஏனெனில் இந்த உறுப்புக்களில் பாதிப்பு இருந்தால் தான், கேப்பில்லரி அட்ரோபி, அதாவது இரத்தக்குழாய்கள் சேதமடைந்து நகங்களின் முனைப்பகுதியில் மட்டும் அதிக இரத்த ஓட்டம் நிறைந்திருக்கும்." என்று கூறினார்.
"அதுவே நகங்களில் கருமை நிற கோடுகள் அல்லது புள்ளிகள் இருந்தால், அது சபெஞ்சுவல் மெலனோமா என்னும் புற்றுநோயாக இருக்கலாம். ஏனென்றால் புற்றுநோயை உண்டாக்கும் மெலனோசைட்டு செல்கள் நகங்களுக்கு அடியில் அதிக மெலனின் நிறமியை உற்பத்தி செய்து, இப்படியான கருமையை உண்டாக்கும்." என்று டாக்டர் ஐசக் கூறினார்.
"ஒருவேளை நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். ஏனெனில் பிலிரூபினின் நிறம் மஞ்சள் நிறம். மஞ்சள் காமாலை நோயாளிகளில் இரத்தத்தில் இந்த பிலிரூபின் நகங்களுக்கு அடியில் அதிகம் தேங்கி, இவ்வாறான மஞ்சள் நிறத்தை உண்டாக்கும். அதுவே நகங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது எண்டோகார்டிடிஸ் போன்ற இதய வால்வுகளில் ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம். ஏனென்றால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அதிக இரத்தம் நகங்களை அடைந்து, நகங்களில் சிவப்பு நிற தோற்றத்தை ஏற்படுத்தும்" என்று டாக்டர் கூறியுள்ளார்.
எனவே நண்பர்களே! உங்கள் நகங்களில் இப்படியான நிறங்களை கண்டால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள். முக்கியமாக எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications