Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
ஷார்ட்ஸ், ரீல்ஸ் அதிகமா பாப்பீங்களா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை வர வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்..
Side Effects Of Watching Shorts And Reels: தற்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. நல்ல விஷயத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், தற்போது மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் மோசமான ஒன்றாகிவிட்டது. ஏனெனில் மக்கள் தங்களின் வேலை நேரத்தை தவிர, ஓய்வு நேரத்தில் இந்த மொபைல் போனில் மூழ்கிவிடுகின்றனர். அப்படி என்ன அந்த போனில் உள்ளது என்றால், அது தான் ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ்.
சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது, இந்த ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் தான். இது ஒரு குறுகிய நேர வீடியோ ஆகும். இதில் ஒன்றை பார்க்கத் தொடங்கிவிட்டால், பின் தானாக அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான குறும்படங்கள் வருவதால், அது என்ன என்பதை பார்க்க ஸ்வைப் செய்து கொண்டே இருப்பார்கள். இதனால் இது தற்போது மக்களின் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. சொல்லப்போனால் ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கிவிட்டால், நேரம் போவதே தெரியாது. அந்த அளவில் அது ஒருவரை பிஸியாக போரடிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் போது வீட்டில் இருப்போரிடம் அரட்டை அடித்து பேசி நேரத்தை கழித்து மகிழ்வோம். அதேப் போல் வெளியே பயணம் மேற்கொள்ளும் போது, அருகில் இருப்பவரிடம் ஏதாவது பேசிக் கொண்டு நேரத்தை கழிப்போம். ஆனால் மொபைல் வந்ததும், அனைவரும் எங்கு சென்றாலும் அல்லது இருந்தாலும், கையில் மொபைலுடன் அதில் உள்ள ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் பார்த்தவாறே நேரத்தை கழிக்கின்றனர்.
ஏன் 1 வயது குழந்தைக்கு கூட மொபைலை எடுத்தால், ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸை ஸ்வைப் செய்து பார்க்கத் தெரிகிறது. இப்படியான பழக்கம் நல்லது என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு. சொல்லப்போனால் இது ஒருவரது மன ஆரோக்கியம் மற்றும் மூளையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸை அதிகம் பார்ப்பதால் எந்த மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குழந்தைநல மருத்துவரான டாக்டர். அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "எந்த வேலையிலும் உங்களால் கவனம் செலுத்த முடியவில்லையா? உங்க குழந்தைகள் எதிலும் கவனம் செலுத்தாமல், உட்கார்ந்து படிக்காமல், அவர்களுக்கு கவனச்சிதறல் அதிகமாவதை கவனிக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு அடிக்கடி ஷார்ட்ஸ், ரீல்ஸ் பார்ப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.
ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவை பிரபலமானதற்கு பின், மக்களிடையே ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் குறைந்து வருவதாக ஆய்வுகளில் கூறியிருப்பதாக மருத்துவர் அருண்குமார் கூறினார். அதுவும் குழந்தைகளுக்கு முக்கியமாக ADHD அறிகுறிகள் அதிகமாகி வருவதாக நிறைய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாகவும் மருத்துவர் கூறினார். அதேப் போல் பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களால் உட்கார்ந்து ஒரு விஷயத்தை திட்டமிட்டு செய்யவே முடியாத அளவில் முன்பக்க அறிவாற்றல் செயல்பாடு (Frontal Cognitive Function) குறைவதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளதாகவும் டாக்டர் கூறியுள்ளார்.
"எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களை பார்க்க அனுமதித்தால், கட்டாயம் ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காதீர்கள். இல்லாவிட்டால், குழந்தைகளால் உட்கார்ந்து யோசித்து எதையும் முடிவெடுக்கக்கூடிய மூளையின் செயல்பாட்டை நாளடைவில் இழக்க வாய்ப்புள்ளது. இது பெரியவர்களுக்கும் கட்டாயம் பொருந்தும். ஆகவே ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவற்றை பார்க்க வேண்டுமானால், ஒரு டைம் லிமிட் செட் செய்து பாருங்கள். குறுகிய நேரத்தில் நிறைய தகவல்களை பெற இது ஒரு நல்ல வழியாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரம் மட்டும் பாருங்கள். இல்லாவிட்டால் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் அதில் நேரத்தை செலவிட நேரிடும். மொத்தத்தில் யோசிக்கும் திறன் மற்றும் ஆழ்ந்து செயல்படக்கூடிய திறன் குறைந்துவிடும்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவற்றை அதிகம் பார்த்து வந்தால், அதைக் குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் வளரும் பிள்ளைகளை ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவற்றை பார்க்க சற்றும் அனுமதிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications