Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
டொனால்ட் டிரம்ப்பிற்கு உள்ள நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு - அப்படின்னா என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
Chronic Venous Insufficiency: சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை கண்டறிந்த பின், அவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு (CVI - Chronic Venous Insufficiency) என்பது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பு ஆகும். இதன் அறிகுறிகள் தொந்தரவாக மாறும் வரை இது பெரும்பாலும் அடையாளம் காணப்படாமலேயே இருக்கும். அப்போலோ மருத்துவமனையின் மூத்த ரத்தக் குழாய் நோய் சிகிச்சை நிபுணர்கள், இந்த நோயால் வாழ்க்கை பாதிக்கப்படும் ஏராளமான நோயாளிகளைக் காண்பதாக கூறியுள்ளனர்.

இந்த சிவிஐ ஏற்படுதற்கான காரணங்களையும், அதன் அறிகுறிகளையும் புரிந்துகொள்வது விரைவான சிகிச்சை முறைகளுக்கும், மேம்பட்ட வகையிலான முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும். இந்த நாள்பட்ட ரத்த குழாய் தேக்க பாதிப்பு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். V.பாலாஜி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கம் (Chronic Venous Insufficiency) என்றால் என்ன?
"நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கம் (சிவிஐ) என்பது கால்களில் உள்ள நரம்புகள் இதயத்திற்கு ரத்தத்தை திறம்பட அனுப்ப முடியாமல் ஏற்படும் ஒரு பாதிப்பு ஆகும். நரம்புகளுக்குள் இருக்கும் சிறிய, ஒரு வழி கதவுகளான வால்வுகள் பலவீனமாக இருந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ இது நிகழ்கிறது. இதன் விளைவாக, கால்களில் ரத்தம் தேங்கும். இதற்கு உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். அது பெரிதாக மாறி பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்." என்று டாக்டர் கூறினார்.
ஆரோக்கியமான நரம்புகள் எவ்வாறு செயல்படுகின்றன?
"சாதாரண சூழ்நிலைகளில், நரம்புகள் உடலில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக கால் நரம்புகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுகின்றன. ரத்தம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்க அவை தசைச் சுருக்கங்களையும், வால்வுகளையும் நம்பியுள்ளன. இந்த வால்வுகள் பாதிக்கப்படும் போது, ரத்தம் தேங்கி, நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது." என்று டாக்டர் கூறினார்.
நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்பின் (சிவிஐ) அறிகுறிகள்
"நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கத்தின் (சிவிஐ) அறிகுறிகளாக பெரும்பாலும் கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம், கால் பகுதியில் இறுக்கமான அல்லது கனமான உணர்வு, நிற்கும் போது கால் வலி அல்லது தசைப்பிடிப்பு வலி, அரிப்பு, கூச்ச உணர்வு அல்லது வலி உணர்வுகள், நரம்பு வீக்கம், வலி ஆகியவை தெரியும்.
இந்த பாதிப்பு அதிகரிக்கும் போது, பழுப்பு நிறத்தில் தோல் மாற்றம், தோல் தடித்தல் அல்லது கடினமடைதல் (குறிப்பாக கணுக்கால்களைச் சுற்றி கடினம் அடைதல்), எரிச்சல், விரிசல், எளிதில் குணப்படுத்த முடியாத புண்கள் போன்றவை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடும்.
அடிக்கடி ஏற்படும் மற்ற அறிகுறிகளாக கால்களில் அசௌகரியம், கால்களை, கால் பிடிப்பு அல்லது தசைப்பிடிப்பு ஏற்படலாம். இது சில நேரங்களில் "சார்லி ஹார்ஸ்" (charley horse) என்று விவரிக்கப்படுகிறது." என்று டாக்டர் பாலாஜி கூறினார்.
காரணங்கள்
"கால் நரம்புகளுக்குள் உள்ள வால்வுகள் சேதமடைதல் அல்லது பலவீனமடைவதால் ஏற்படும் நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்புக்கு வயது முதிர்வு காரணமாக இருக்கலாம். காயம் அல்லது ஆழமான நரம்பு ரத்த உறைவு போன்றவை காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
இது தவிர உடல் பருமன், பரம்பரை காரணிகள், தொடர்ந்து நீண்ட நேரம் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ இருப்பது, உடற்பயிற்சி இல்லாமை, புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் இந்த பாதிப்பு ஏற்படக் காரணமாக அமையலாம்.
இந்த காரணிகள் ஒவ்வொன்றும் நரம்புகள் இதயத்திற்கு ரத்தத்தை திறம்பட அனுப்புவதைத் தடுப்பதை அதிகரிக்கும். இது கால்களில் ரத்தம் தேங்கி சிவிஐ எனப்படும் நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்க பாதிப்புக்கு வழிவகுக்கிறது." என்று டாக்டர் பாலாஜி கூறினார்.
மருத்துவ சிகிச்சையை எப்போது பெற வேண்டும்?
"சிவிஐ-யின் ஆரம்ப அறிகுறிகள் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகக் கூடும். இருப்பினும், தொடர்ச்சியான வீக்கம், வீக்கமடைந்து அதனால் பருத்து போவதால் நரம்புகளில் வலி, கால்களில் தோல் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப நிலையிலேயே நோயறிதலும், அதற்கான சிகிச்சையும் கடும் வலியையும், தோல் தொற்றுகள் போன்ற சிக்கல்களையும் தடுக்கும்.
நாள்பட்ட ரத்தக் குழாய் தேக்கம் எனப்படும் சிவிஐ என்பது ஒரு சிக்கலான நிலை. ஆனால் சரியான நேரத்தில் கண்டறிந்து, சிகிச்சையளிப்பதன் மூலம் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும். வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நடைமுறைகள் போன்ற பயனுள்ள சிகிச்சை முறைகள் இதற்கு உள்ளன. அறிகுறிகளையும் காரணங்களையும் புரிந்து கொள்வதால் ஆரம்ப நிலையலேயே இதைக் கண்டறிந்து பாதிப்பைத் தவிர்க்க முடியும். இதனால் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதுகாக்க முடியும்.
இதில் சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தால், முழுமையான பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் ரத்தக் குழாய் சிகிச்சை நிபுணரைத் தயக்கமின்றி அணுக வேண்டும்." என்றும் டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications













