Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Diwali 2024: தீபாவளி பலகாரங்களால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காம இருக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..
Diwali 2024: தீபாவளி பண்டிகை என்றாலே நினைவிற்கு வருவது பட்டாசுகளுக்கு அடுத்தப்படியாக பலகாரங்கள் தான். தீபாவளி பலகாரங்கள் அனைவரும் எண்ணெயில் பொரித்து செய்யப்படுவதால், இந்த பண்டிகையால் கொலஸ்ட்ரால் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது.
அதுவும் ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அவர்கள் இப்பண்டிகையின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கவனக்குறைவாக இருந்தால், பின் அது மாரடைப்பின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையின் போது வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடந்து கொண்டால் போதும். இப்போது தீபாவளி பண்டிகையின் போது கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைக் காண்போம்.
1. அளவாக சாப்பிடவும்
தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் அதிகம் இருக்கும். அதை பார்க்கும் போது அனைவருக்குமே ஆசை தீர சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எதையும் அளவாக சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
2. வறுத்த உணவுகளை அளவாக சாப்பிடவும்
முறுக்கு, குலாப் ஜாமூன், அதிரசம் போன்றவற்றை முடிந்தவரை குறைவாக சாப்பிடுங்கள். இவை அனைத்தும் எண்ணெயில் பொரிக்கப்படுவதைத் தவிர, அவற்றில் சர்க்கரை, உப்பு போன்றவை அதிகமாக இருக்கும். எனவே எண்ணெயில் பொரித்த எந்த உணவுகளையும் அளவாக சாப்பிடுங்கள்.
3. திரவங்களை அதிகம் குடிக்கவும்
தீபாவளி பண்டிகையின் போது வெறும் பலகாரங்களை மட்டும் சாப்பிடாமல், எலுமிச்சை ஜூஸ், மோர், இளநீர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் உடலின் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.
4. கலோரி உணவுகளை தவிர்க்கவும்
தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு நிறைந்த பலகாரங்களை வீட்டில் செய்திருந்தால், அவற்றை அளவாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், முடிந்தவரை தவிர்க்க முயற்சிப்பது நல்லது. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமின்றி, கொலஸ்ட்ரால் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. நீரை அதிகம் அருந்தவும்
பண்டிகை காலங்களில் அதிகமாக அலைச்சல் இருக்கும். அதோடு வேலையும் அதிகம் இருக்கும். இதனால் மிகுந்த உடல் சோர்வுடன், நீரிழப்பும் ஏற்படலாம். அதே வேளையில் அதிகம் பசி எடுக்கும். அப்போது பலகாரங்களை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு தான் அதிகரிக்கும். எனவே அப்போது நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். அதுவும் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை குறைந்தது 1 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள்.
6. உடற்பயிற்சி செய்யவும்
பண்டிகை நாட்களுக்கு முந்தைய நாள் நீண்ட நேரம் விழித்திருந்து வீட்டு வேலைகளை செய்து தாமதமாக தூங்குவதால், நிறைய பேர் பண்டிகை நாட்களில் காலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காமல், உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பார்கள். ஒருவேளை உங்களால் காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், மாலையில் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications