Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
டயட்-ல இருக்கீங்களா? கேரட்டையும் சேத்துக்கோங்க!!!

* பார்வை குறைபாடு : கேரட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள பீட்டா கரோட்டீன் என்னும் பொருள், வைட்டமின் ஏ-ஆக மாறிவிடுகிறது. அந்த வைட்டமின் ஏ பார்வை குறைபாட்டை நீக்குவதோடு, கண்களும் நன்கு தெரியும். இந்த வைட்டமின் ஏ குறைபாட்டினால் தான், மாலைக்கண் நோயானது வருகிறது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து உடலுக்கு கிடைப்பதோடு, பார்வையும் நன்கு தெரியும்.
* புற்றுநோய் : கேரட்டில் அதிகமான அளவு கரோட்டீஸ் இருப்பதால், அதை சாப்பிடும் போது தற்போது அதிகமாக உடலில் வரும் நோயான மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் அதன் வேர்களில் ஃபால்கரினால் என்னும் பொருள் இருப்பதால், செடிகள் அழியாமல் தடுக்கிறது. மேலும் அந்த பொருள் கேரட்டில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையுடையது. ஆகவே இந்த கேரட்டை டயட்டில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
* இதய நோய் : மருத்துவர்கள் தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஏனெனில் அதில் பீட்டா கரோட்டீன், ஆல்பா கரோட்டீன் மற்றும் லுட்டீனின் போன்றவை அதிகமாக உள்ளன. இவை இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன. மேலும் உடலில் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். அதிலும் ஒரு ஆய்வில், கேரட்டை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஊட்டச்சத்துக்கள், உடலில் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* பற்கள் : நல்ல பளிச்சென்ற அழகான பற்கள் வேண்டுமென்றால், அதற்கு சிறந்தது கேரட் தான். இதை சாப்பிட்டால் பற்கள் மற்றும் ஈறுகள் நன்கு சுத்தமாவதோடு, நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். சொல்லப்போனால் அதை ஒரு இயற்கை "டூத் பிரஷ்" என்றும் சொல்லலாம். அதிலும் இதனை உணவு உண்டப் பின் சாப்பிட்டால், பற்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் பிளேக் போன்றவை எளிதில் நீங்கும்.
* நீரிழிவு : உடலுக்கு கேரட் ஆரோக்கியத்தை தருவதோடு, நீரிழிவை நோயை எதிர்த்து குணப்படுத்தும் ஒரு சிறந்த உணவுப்பொருள். அதில் உள்ள கரோட்டினாய்டு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை குறைக்கும். ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் இதனை தினமும் அப்படியே அல்லது ஜூஸ் செய்து குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே கேரட்டை சாப்பிட்டு, உடலை பிட்டாக மட்டும் வைக்காமல், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
