Latest Updates
-
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்..
தமிழ் ஹீரோயின்ஸ் பிட்டா இருப்பதற்கான ரகசியத்தை படிச்சு பாருங்க...
எல்லோருக்கும் ஹீரோயின் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அது எவ்வளவு கடினம் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் பார்க்கத் தான் அழகாக, உடல் நன்கு பிட்டாக வைத்திருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் மேற்கொள்ளும் உணவு முறை தான். அவர்கள் எதையுமே சுலபமாக சாப்பிட மாட்டார்கள். எதை சாப்பிட வேண்டுமென்றாலும், ஒரு முறைக்கு பல முறை யோசித்து, அதன் பின்னரே சாப்பிடுவார்கள். மேலும் அவர்கள் ஒரு ஃபுட் சார்ட் போட்டு, அதனையே தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இப்போது எந்த ஹீரோயின்கள் என்ன ஃபுட் சார்ட் போட்டு ஃபாலோ செய்கிறார்கள் என்று பார்ப்போமா!!!

அனுஷ்கா
சரியான எடை மற்றும் உயரத்தைக் கொண்ட அனுஷ்கா, உண்மையில் ஒரு யோகா டீச்சர். இவரது எடை முதலில் 108 கிலோவாக இருந்தது. பின்னர் அவர் பல உடற்பயிற்சி, யோகா, உணவில் கட்டுப்பாடு என்பனவற்றை செய்து, பின்னர் ஒரு அழகான கனவுக் கன்னியாக அனைவரது மனதில் இடம் பிடித்தார். இவரது இந்த எடை குறைவிற்கு காரணமான ஃபுட் சார்ட் என்ன தெரியுமா? அவர் தினமும் காலையில் இட்லியும், மதிய வேளையில் சிக்கன் மற்றும் மீனும், இரவில் சப்பாத்தி மற்றும் சிக்கனும் தான் சாப்பிடுவாராம்.

த்ரிஷா
மிகவும் பிரபலமான நடிகை த்ரிஷா முதலில் மாடலிங்கில் இருந்து, மிஸ் சென்னையாக இருந்தார். பின் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்து, அனைவரது மனதிலும் ஒரு சிறந்த நடிகை என்று பதிய வைத்தார். இவர் இன்றும் சற்றும் குண்டாகாமல், தன் அழகை அழகாக பராமரித்து வருகிறார். அந்த இரசியம் என்னவென்றால், அவர் தினமும் காலை வேளையில் முட்டையின் வெள்ளைக் கருவையும், மதியத்தில் சாதம் மற்றும் சப்பாத்தியும், இரவு நேரத்தில் எண்ணெய் குறைவாக பயன்படுத்திய சில்லி சிக்கனை சாப்பிடுவது தான் வழக்கமாம்.

ரீமாசென்
என்ன தான் வயதானாலும், இன்னும் கட்டுடல் சற்றும் களையாமல், இளமையோடு காட்சியளிப்பவர் தான் ரீமாசென். இவர் தன் உணவாக காலையில் வெஜிடேபிள் சான்விட்ச் + ஆம்லெட், மதியத்தில் சாதம் + பாதியாக வேக வைத்த காய்கறிகளும், இரவில் பிட்சா + தந்தூரி சிக்கனை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஸ்ரேயா
இடுப்பிற்கு பேர் போனவர் தான் ஸ்ரேயா. இவர் தன் அழகான ஒல்லியான இடுப்பை வைத்தே அனைவரையும் கவர்ந்தவர். இவர் மேற்கொள்ளும் உணவு முறை மிகவும் சூப்பரானது. அது அவர் காலை வேளையில் தோசை, மதியத்தில் சப்பாத்தி மற்றும் இரவில் ஆம்லெட் மட்டும் தான் சாப்பிடுகிறார். ஆனால் திரையுலகில் இருப்பவர்கள் ஸ்ரேயாவிற்கு பர்க்கர் தான் ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அசின்
கேரளத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர் தான் அசின். இவர் தன் அழகான பேச்சாலும், சிரிப்பாலும் தமிழ் நாட்டு ரசிகர்களை கவர்ந்து, சிறிது நாட்கள் கனவுக் கன்னியாக இருந்தவர். இப்போது இவர் இந்தியிலும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன் உடலை பிட்டாக வைக்க காலையில் ஓட்ஸ், மதியத்தில் மட்டன் பிரியாணி மற்றும இரவில் சப்பாத்தியுடன் மீன் குழம்பை வைத்து சாப்பிடுவாராம். இதுவே இவரது உடலின் இரகசியம் என்றும் கூறுகிறார்.
த்ரிஷா - மிகவும் பிரபலமான நடிகை த்ரிஷா முதலில் மாடலிங்கில் இருந்து, மிஸ் சென்னையாக இருந்தார். பின் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்து, அனைவரது மனதிலும் ஒரு சிறந்த நடிகை என்று பதிய வைத்தார். இவர் இன்றும் சற்றும் குண்டாகாமல், தன் அழகை அழகாக பராமரித்து வருகிறார். அந்த இரசியம் என்னவென்றால், அவர் தினமும் காலை வேளையில் முட்டையின் வெள்ளைக் கருவையும், மதியத்தில் சாதம் மற்றும் சப்பாத்தியும், இரவு நேரத்தில் எண்ணெய் குறைவாக பயன்படுத்திய சில்லி சிக்கனை சாப்பிடுவது தான் வழக்கமாம்.
ரீமாசென் - என்ன தான் வயதானாலும், இன்னும் கட்டுடல் சற்றும் களையாமல், இளமையோடு காட்சியளிப்பவர் தான் ரீமாசென். இவர் தன் உணவாக காலையில் வெஜிடேபிள் சான்விட்ச் + ஆம்லெட், மதியத்தில் சாதம் + பாதியாக வேக வைத்த காய்கறிகளும், இரவில் பிட்சா + தந்தூரி சிக்கனை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஸ்ரேயா - இடுப்பிற்கு பேர் போனவர் தான் ஸ்ரேயா. இவர் தன் அழகான ஒல்லியான இடுப்பை வைத்தே அனைவரையும் கவர்ந்தவர். இவர் மேற்கொள்ளும் உணவு முறை மிகவும் சூப்பரானது. அது அவர் காலை வேளையில் தோசை, மதியத்தில் சப்பாத்தி மற்றும் இரவில் ஆம்லெட் மட்டும் தான் சாப்பிடுகிறார். ஆனால் திரையுலகில் இருப்பவர்கள் ஸ்ரேயாவிற்கு பர்க்கர் தான் ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
அசின் - கேரளத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர் தான் அசின். இவர் தன் அழகான பேச்சாலும், சிரிப்பாலும் தமிழ் நாட்டு ரசிகர்களை கவர்ந்து, சிறிது நாட்கள் கனவுக் கன்னியாக இருந்தவர். இப்போது இவர் இந்தியிலும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன் உடலை பிட்டாக வைக்க காலையில் ஓட்ஸ், மதியத்தில் மட்டன் பிரியாணி மற்றும இரவில் சப்பாத்தியுடன் மீன் குழம்பை வைத்து சாப்பிடுவாராம். இதுவே இவரது உடலின் இரகசியம் என்றும் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications











