Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
முதுமைத் தோற்றம் ஆரம்பிச்சுடுச்சா? கவலையை விடுங்க...

ப்ளு பெர்ரிஸ் : இந்த பழம் மிகவும் சிறந்த முகச்சுருக்கத்தை தடுக்கும் பழம். ஏனெனில் இதில் உள்ள ஆன்தோசைனோசைடு, முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் முகச்சுருக்கம், பார்வை குறைவு போன்றவற்றை தடுக்கிறது. மேலும் இதில் 40% ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதல் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இருக்கம் கொலாஜென் உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதால், முதுமையை தடுக்கிறது.
தக்காளி : இது மற்றொரு சிறந்த உணவுப் பொருள். இதனை உண்பதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். மேலும் இதன் ஜுஸை முகத்திற்கு தடவி வந்தால், முகமானது பளபளப்புடன் இருக்கும். ஏனென்றால் தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் என்னும் கெமிக்கல், முகத்தில் தோன்றும் கோடுகளை தடுப்பதோடு, செல்கள் பாதிப்பு மற்றும் சரும தோற்று நோய்கள் வராமலும் தடுக்கும்.
மீன் எண்ணெய் : கடலோரப் பகுதிகளில் வாழும் பெண்கள் இளமையோடு காட்சியளிக்க காரம் என்னவென்று தெரியுமா? ஏனேனில் மீன் மற்றும் மீன் எண்ணெயை அவர்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், சருமம் இறுக்கமடைந்து அளமை தோற்றதை அளிக்கிறது. அதிலும் குளிர்ந்த தண்ணீரில் வாழும் சாலமன், டுனா போன்ற மீனில் அதிகமான அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் இருப்பதால், சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை கிடைப்பதோடு, சுருக்கங்களும் மறையும்.
கிரீன் டீ : பானங்களில் கிரீன் டீ மிகவும் ஆரோக்கியமானது. கிரீன் டீ குடிப்பதால் செரிமானத் தன்மை சரியாக நடப்பதோடு, உடல் எடையும் குறைந்து, முகச்சுருக்கமும் குறையும். முக்கியமாக முகச்சுருக்கம் வருவதற்கு டி.என்.ஏ பாதிப்பும் ஒரு காரணமாகும். இந்த டி.என்.ஏ பாதிப்பை கிரீன் டீ தடுக்கும். எனவே தினமும் ஒரு கப் கிரீன் டீ குடித்தால், முகம் அழகாக சுருக்கம் இல்லாமல் இருப்பதோடு, கூந்தல் உதிராமல், எடை குறைந்து ஸ்லிம்மாக அழகாக இருக்கலாம்.
சாக்லேட் : சாக்லேட் ஃப்ளேவர் மிகவும் பிடிக்கும் என்றால் அந்த சாக்லேட் ஃப்ளேவர் சாப்பிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ என்னும் பொருள், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாவதோடு, சுருக்கம் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடுங்க, இளமையோடு இருங்க.
மேற்கூறிய உணவுப் பொருட்களையெல்லாம் சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், தினமும் அதிக அளவு தண்ணீர் குடித்தாலும் சருமத்தில் சுருக்கும் ஏற்படுவதை தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications