Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
பெண்களின் ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்!!!

ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்...
1. மாதவிடாயின் போது வலிகள் மற்றும் சுளுக்குகள் அடிக்கடி ஏற்படும். அதற்கு காரணம் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருப்பது. ஆகவே கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை உட்கொண்டால் வலி ஏற்படுவது பாதியாக குறையும். அதிலும் பால், தயிர் மற்றும் வெண்ணெயில் கால்சியம் அதிகமாக இருக்கும்.
2. சிலருக்கு அதிக இரத்தப்போக்கு திடீரென ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே அப்போது இரும்புச் சத்து அதிகமாக உள்ள உணவான சிவப்பு அரிசி, சிக்கன், முட்டை மற்றும் கீரைகளை அதிகமாக உண்டு வந்தால் அதிக இரத்தப் போக்கானது சரியாகிவிடும்.
3. பெண்களுக்கு மாதவிடாயானது முடியும் போதோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் போதோ, மிகவும் சோர்ந்து, உடலானது மிகுந்த வெப்பத்துடன் இருப்பது போல் இருக்கும். அவ்வாறெல்லாம் இல்லாமல் இருக்க, நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள், மாதுளை போன்றவற்றை உண்டால் உடலில் இரத்த சுத்திகரிப்பானது சரியாக நடக்கும்.
4. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் மாதவிடாயினால் ஏற்படும் மனஅழுத்தத்தினால், மூளையானது அதிகமாக உற்பத்தி செய்யும் செரோடோனின் என்ற ஹார்மோனானது பலவீனமடையும். ஆகவே அதனால் உடலில் அதிகமான சோர்வு ஏற்படும். அப்போது உருளைக்கிழங்கை சாப்பிட்டால் அதில் உள்ள டிரிப்தோபன், செரோடோனின் என்ற ஹார்மோனை சரிசெய்யும்.
5. மேலும் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். மேலும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இதனால் உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவும்.
இத்தகைய உணவுகளை சரியாக உண்டு வந்தால், உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனையை சரி செய்வதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
