Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்!
சில நடைமுறை குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தங்களுடைய ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்.
சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கமுடியாவிட்டால் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய கோளாறுகளில் ஒன்று நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். பொதுவாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத நிலையில், வயது முதிர்வை தாங்க முடியாத நிலை உங்கள் உடலுக்கு உண்டாகிறது. அதனால் சில உடல் பாதிப்புகள் உண்டாகிறது. அவற்றுள் சில,
* நரம்பு வலி மற்றும் சேதம்
* இதய நோய்
* வாதம்
* உயர் இரத்த அழுத்தம்
* சிறுநீரக கோளாறுகள்
* கண்பார்வை கோளாறுகள்
* சரும நிலை பாதிப்புகள்
* கேட்கும் திறனில் பாதிப்பு
* ஈறு பிரச்சனைகள்

வயதானவர்களுக்கு இதய நோய்கள், வாதம், சிறுநீரக கோளாறுகள், கண்பார்வை கோளாறுகள் போன்றவை அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் நீரிழிவு பாதிப்பு உள்ள முதியவர்கள் விரைவில் மரணத்தை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மேலே கூறப்பட்டுள்ள அபாயத்தைக் குறைக்க எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதற்கில்லை. சில நடைமுறை குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தங்களுடைய ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும். அந்த குறிப்புகள் இதோ உங்களுக்காக ..

உங்கள் உணவு அட்டவணையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்:
* நீரிழிவு பாதிப்பைக் கட்டுப்படுத்த முதல் நிலை , உங்கள் உணவில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது மட்டுமே. உங்கள் உணவு அட்டவணையை திட்டமிடுங்கள். குறைவாக சாப்பிடுங்கள் ஆனால் அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் வைக்கப்படும்.
* புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் , நார்ச்சத்து போன்ற சத்துகளின் சமநிலையை தரும் கலவையான உணவுகளை உட்கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து முழு தானிய உணவுகளில் கவனம் செலுத்துங்கள். இதனால் உங்கள் உணவு செரிமானத்திற்கு அதிக நேரம் தேவைப்படும்.
* சிவப்பு இறைச்சி மற்றும் கொழுப்பு இறைச்சியான பன்றி இறைச்சி போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். ஒரு சிறிய அளவு மீன் அல்லது கோழி இறைச்சி உட்கொள்ளுங்கள். இதனால் உங்கள் கொழுப்பு உட்கொள்ளல் அளவு குறைக்கப்படும்.
* சோடா அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும். காபி அல்லது தேநீர் பருகும் போதும் சர்க்கரை சேர்க்கப்படாமல் பருகுவது நல்லது. நீரிழிவு வழியாக உங்களுக்கு ஏற்படக்கூடிய மற்றொரு பெரிய பாதிப்பு உயர் இரத்த அழுத்தம். ஆகவே உங்களால் முடிந்த அளவிற்கு உப்பு பயன்பாட்டைக் குறைக்கவும்.

இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றை கண்காணியுங்கள்:
* பொதுவாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பாதிப்பு போன்றவை இருக்க முடியும் என்பதால் உங்கள் உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணிப்பது அவசியம்.
* தற்போது வீட்டில் இருந்தபடியே இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் கருவிகள் உள்ளன. அதனால் அவற்றை எளிதாக வீட்டில் இருந்தபடியே பரிசோதிக்கலாம்.
* கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க பரிசோதனை மையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். எவ்வளவு இடைவெளியில் இவற்றை பரிசோதிக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் இந்த அளவுகளை பரிசோதிக்கும் கருவிகள் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருத்தல் அவசியம். இந்த சோதனை முடிவுகளைக் குறித்த ஒரு அறிக்கையை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம். இதனால் உங்கள் மருத்துவர் நீங்கள் நீரிழிவை நிர்வகிக்கும் முறையை புரிந்து கொள்ள இயலும்.
* தற்போது, நீரிழிவு போன்ற நோய்களின் மரபணு குறிப்பான்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன, அவை முன்னர் வாழ்க்கை முறைகளுடன் மட்டுமே இணைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

உடற்பயிற்சிகள் அவசியம்:
* ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 2 1/2 மணி நேரம் மிதமான அளவு ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைக்கிறது.
* அவற்றுள் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி, தோட்டக்கலை, வேகமாக நடப்பது போன்றவை அடங்கும். உங்கள் புஜங்கள், மார்பு, தோள்பட்டை, கால்கள், முதுகு, வயிறு போன்றவற்றின் தசைகள் வலிமையாக இருக்க உதவும் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
* தீவிர பயிற்சிகளான ஒட்டப்பயிற்சி, மலையேற்றம், மலைப்பாங்கான இடத்தில் சைக்கிள் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் குறைவான நேரத்தில் விரைவான நல்ல பலனை பெறமுடியும்.

சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வது:
* உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த வகையில் சரியாக மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும்.
* நீரிழிவு பாதிப்பிற்கான சில மருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளக் கூடியவையாக இருக்கும். ஆகவே அவற்றை அந்த நேரம் தவறாமல் எடுத்துக் கொள்வது அவசியம்.
* மேலும் மருத்துவ ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தையும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

மன அழுத்தத்தை தவிர்க்கவும்
மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், இரத்த அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் . அதனால் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் கூடுமானவரை மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது நல்லது.

புகைப்பழக்கத்தை கைவிடவும்
புகை பிடிக்கும் பழக்கம் இதயம் மற்றும் இரத்த குழாய்களை சேதப்படுத்தும். மேலும் இதர நோய்களும் புகைப்பழக்கத்தால் ஏற்படக்கூடும் என்பதால் அதனை உடனடியாக அந்த பழக்கத்தைக் கைவிடுவது நல்லது .

சீரான இடைவெளியில் மருத்துவரை சந்திக்கவும்
ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை அணுகி உங்கள் மருத்துவ வரலாற்றை அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும் வழிகளை அவர் உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க முடியும். மேலும் உங்கள் உடல்நிலை குறித்த நல்ல முடிவுகளை அவர் எடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications