Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
நீங்க குண்டாவதற்கு மதிய உணவின் போது செய்யும் இந்த தவறுகள் தான் காரணம் தெரியுமா?
Lunchtime Mistakes In Tamil: தற்போது ஒவ்வொருவருமே அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஒவ்வொருவரும் நாள்தோறும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், எவ்வளவு முயற்சித்தாலும், சிலரால் உடல் எடையைக் குறைப்பது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. எப்போதும் எடை அதிகரித்த பின் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பதற்கு பதிலாக, அதற்கான மூல காரணத்தை அறிந்து அதை சரிசெய்ய முயற்சித்தாலே எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
ஒருவருக்கு உடல் எடை பல காரணங்களால் அதிகரிக்கலாம். அதில் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக மதிய வேளை உணவின் போது செய்யும் சில தவறுகள் உடல் எடையை வேகமாக அதிகரிக்க வழிவகை செய்கின்றன. எப்படி ஒருவருக்கு காலை உணவு இன்றியமையாததோ, அதேப் போல் பகல் வேளையில் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

ஆனால் நிறைய பேர் காலை மற்றும் இரவு வேளை உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மதிய வேளை உணவிற்கு அதிகம் கொடுப்பதில்லை. இப்படி கொடுக்காமல் இருப்பதால், அது ஒருவரது உடல் எடையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போது மதிய வேளை உணவின் போது செய்யும் எந்த தவறுகள் ஒருவரது உடல் எடை அதிகரிக்க காரணங்களாக உள்ளன என்பதைக் காண்போம்.
1. பசி எடுத்தால் மட்டும் சாப்பிடுவது
நிறைய பேர் மதிய வேளையில் பசித்தால் மட்டும்தான் சாப்பிடுவார்கள். நன்கு பசித்த பின் சாப்பிட்டால் தான் உணவு ஜீரணிக்கும் என்று நினைத்து ஏராளமானோர் நன்கு பசித்த பின் சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி அதிக பசி எடுத்த பின் சாப்பிடும் போது, அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும். பின் அதன் விளைவாக உடலில் கலோரிகள் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே மதிய வேளையில் தாமதமாக சாப்பிடவோ அல்லது நன்கு பசி எடுத்த பின் சாப்பிடும் பழக்கத்தையோ கொள்ளாதீர்கள்.
2. மதிய உணவை திட்டமிடாமல் இருப்பது
மதிய வேளையில் என்ன சாப்பிடுவது என்பதை சாப்பிடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு தான் தீர்மானிப்பீர்களா? அப்படியானால், அதை உடனே நிறுத்துங்கள். மதிய உணவை முன்பே திட்டமிடாமல் இருந்தால், பின் அது ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இந்த தவறு செய்வதையும் நிறுத்துங்கள்.
3. சமநிலையற்ற மதிய உணவு
மதிய வேளை உணவை முன்பே திட்டமிடும் போது, அந்த உணவு அனைத்து சத்துக்களும் அடங்கிய உணவாக இருக்க வேண்டும். அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை மதிய உணவில் சமநிலையில் இருக்க வேண்டும். இப்படி சமச்சீரான உணவை உண்ணும் போது, பகல் வேளையில் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். இப்படி சமச்சீரான உணவை உண்ணாமல் இருக்கும் போது தான், மதிய உணவு உண்ட பின்னரும் பசியை சந்திக்க நேரிட்டு, சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட நேரிடுகிறது.
4. மதிய உணவுக்கு முன் மீட்டிங்கை திட்டமிடுவது
மதிய வேளையில் செய்யும் மற்றொரு தவறு மதிய உணவுக்கு முன் மீட்டிங்கை அரேஞ்ச் செய்வது. பொதுவாக அலுவலக வேலைகள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படி உணவு உண்பதற்கு முன் அலுவலக மீட்டிங்கை அரேஞ்ச் செய்தால், அதிக மன அழுத்தம் காரணமாக அதிகளவு உணவை உண்ண நேரிடுகிறது. இதன் விளைவாக உடல் எடையும் அதிகரிக்கிறது. எனவே இந்த தவறை செய்துவிடாதீர்கள்.
5. மதியம் குறைவாக உண்பது அல்லது உணவைத் தவிர்ப்பது
நீங்கள் உடல் எடையைக் குறைக்க மதிய வேளையில் குறைவாக சாப்பிடுவீர்களா அல்லது மதிய உணவைத் தவிர்ப்பீர்களா? அப்படியானால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் இப்படியான செயலால் உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கவே செய்யும். எப்படியெனில் மதிய வேளையில் சாப்பிடாமல் நீண்ட நேரம் இருக்கும் போது, இரவு உணவின் போது அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடுகிறது.
எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மதிய வேளை உணவின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யாதீர்கள். இந்த தவறுகளை தவிர்த்து வந்தாலே, எதிர்பார்த்ததை விட வேகமாக எடையில் மாற்றத்தைக் காணலாம் மற்றும் உடல் எடையும் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











