Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
ஆண்களே! அதிகாலையில் விறைப்பு ஏற்படலையா? அசால்ட்டா இருக்காதீங்க.. இந்த நோய் இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
Morning Erection In Tamil: பொதுவாக ஆண்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். அதுவும் தங்களின் ஆணுறுப்பு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி மருத்துவரிடம் பேசவே தயக்கம் கொள்வார்கள். உலகளவில் நிறைய ஆண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு.
விறைப்புத்தன்மை என்பது ஆண்குறியானது இரத்தத்தால் நிரம்பி கடினமாகி பெரிதாகும் நிலை. இந்த விறைப்புத்தன்மையானது பாலியல் ரீதியாக தூண்டப்படும் போது ஏற்படும். எப்போது ஒரு ஆணின் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இல்லையோ, அப்போது இப்படியான விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

மேலும் ஆண்களுக்கு தினமும் காலையில் எழும் போது விறைப்புத்தன்மை ஏற்படுவது வழக்கம். ஆனால் இப்படியான விறைப்பு திடீரென்று காலையில் ஏற்படாமல் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்த் துருவாசல் கூறியுள்ளார். மேலும் காலையில் விறைப்புத்தன்மை ஏற்படாமல் இருப்பதற்கு பின்னிருக்கும் 5 விதமான காரணங்கள் குறித்தும் டாக்டர் அரவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
அதிகாலையில் விரைப்புத்தன்மை ஏன் ஏற்படுகிறது?
"இரவு நேரத்தில் ஆழந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூளை ரிலாக்ஸாகி, உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் அளவு குறையும். தூங்கும் போது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் இரத்த நாளங்கள் ரிலாக்ஸாகி, இதயத்தில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி தான் ஆணுறுப்பிலும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இவ்வாறு ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, விறைப்புத்தன்மை ஏற்படுகிறது." என்று டாக்டர் அரவிந்த் கூறினார்.
விறைப்புத்தன்மை ஏற்படாமல் இருந்தால் என்ன பிரச்சனை?
"அதிகாலையில் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஏற்படாமல் இருந்தால், இதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆணுறுப்பிற்கு இரத்தத்தை அனுப்பும் இரத்த நாளங்களில் ஒரு அடைப்பு இருந்து, அதனால் விறைப்புத்தன்மை ஏற்படாமல் இருந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது" என்று டாக்டர் கூறினார்.
பிற காரணங்கள்:
ஆண்களுக்கு அதிகாலையில் விறைப்புத்தன்மை ஏற்படாமல் இருக்க வேறு சில 5 காரணங்களும் உள்ளன என்றும் டாக்டர் கூறினார். அந்த காரணங்களாவன:
1. போதுமான தூக்கம் இல்லாமை
2. அதிக மன அழுத்தம்
3. எடுக்கும் மருந்து மாத்திரைகள்
4. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
5. சர்க்கரை நோய் போன்றவை.
எனவே நண்பர்களே! உங்களுக்கு அதிகாலையில் எழும் போது விறைப்புத்தன்மை ஏற்படாமல் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
