Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
ஏன் 90% கார்டியாக் அரெஸ்ட் டாய்லெட்டில் இருக்கும் போது ஏற்படுதுன்னு தெரியுமா?
Cardiac Arrest Symptoms In Tamil: உலகளவில் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். நிறைய பேர் மாரடைப்பையும், கார்டியாக் அரெஸ்ட்டையும் ஒன்றென கருதுகிறார்கள். ஆனால் இவ்விரண்டும் வேறுபட்டது. மாரடைப்பு என்பது இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதாகும். மாரடைப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத அளவில் நெஞ்சு வலி மற்றும் அதிக வியர்வை ஏற்படும்.
இந்த மாரடைப்பின் அடுத்த நிலையில் தான் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும். கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் செயலற்று போவது. இப்படி இதயம் செயலற்று போக இரத்தக்குழாயின் அடைப்பு, போதைப்பொருள் பழக்கம், மரபணு என எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். இந்த கார்டியாக் அரெஸ்ட்டிற்கு சற்றும் தாமதிக்காமல் உடனே முதலுதவி அளிக்கப்பட வேண்டும்.

ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக இதுவரை பதிவான கார்டியாக் அரெஸ்ட் வழக்குகள் பெரும்பாலும் கழிவறை/குளியலறையில் இருக்கும் போது தான் நிகழ்ந்துள்ளன. ஏனெனில் கார்டியாக் அடெஸ்ட்டை தூண்டுவதில் ஷவரில் குளிப்பது அல்லது டாய்லெட்டில் இருப்பது போன்ற செயல்கள் முக்கிய பங்கை வகிப்பதாக கூறுகின்றனர்.
ஏனெனில் குடலியக்கம் அல்லது குளிப்பது போன்ற செயல்களின் போது உடலுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டு, இதய செயல்பாட்டில் தடை ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவரது மூளை மற்றும் உடலின் பிற உறுப்புகளுக்கு இரத்தம் ஓட்டம் முழுமையாக நிற்கும் போது உடனே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அந்நபர் மயக்கமடைந்து, மரணிக்க நேரிடும்.
ஏன் டாய்லெட்டில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது?
பொதுவாக ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தி, இதயத்தின் செயல்பாட்டை முழுமையாக நிறுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் மலம் கழிக்கும் போது ஒருவர் தங்கள் இதயங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். அதுவும் ஏற்கனவே இதய பிரச்சனை இருந்து, இப்படி அதிக அழுத்தத்தைக கொடுத்தால், அது திடீரென்று மாரடைப்பைத் தூண்டும்.
அதேப் போல் அதிக குளிர்ச்சியான அல்லது சூடான நீரில் குளிக்கும் போது, அது இதயத் துடிப்பை பாதித்து, அதன் விளைவாக இதய செயலிழக்கை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இதய நோயின் அபாயம் அதிகம் கொண்டவர்கள் அனைவருக்குமே மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதாகவும், இந்த மலச்சிக்கலானது போதுமான திரவங்களை எடுக்காமை, வாக்கிங் மேற்கொள்ளாமை அல்லது சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழாமல் இருப்பது போன்றவை காரணங்களாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தவிர மருந்துகள், பசியின்மை, ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்ணாமல் இருப்பது, செரிமான பாதையில் இரத்த ஓட்டம் குறைவது போன்றவைகளும் ஒருவரது மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
கார்டியாக் அரெஸ்ட்டின் அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகளைக் கொண்டவர்கள் டாய்லெட் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். அவை:
* நெஞ்சு வலி
* திடீர் மூச்சுத்திணறல்
* தலைச்சுற்றல்
* வாந்தி
* சுவாசிப்பதில் சிரமம்
* மயக்கம்
கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் ஏற்படலாம்?
நிபுணர்களின் கூற்றுப்படி, கார்டியாக் அரெஸ்ட் ஒருவருக்கு பின்வரும் காரணிகளால் ஏற்படலாம். அவை:
* உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை
* உயர் இரத்த அழுத்தம்
* அரித்மியா
* சர்க்கரை நோய்
* இதய நோய் வரலாறு
* இதய வால்வு நோய்
* இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியத்தின் அளவில் பெரிய மாற்றம்
* போதைப்பொருள் பழக்கங்கள்
குளியலறையில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர்களின் கூற்றுப்படி, குளியலறையில் இருக்கும் போது கார்டியாக் அரெஸ்ட் வராமல் இருக்க பின்வரும் வழிகளைப் பின்பற்ற வேண்டும். அவை:
* நெஞ்சு பகுதிக்கு மேல் சுடுநீரில் மூழ்கியிருக்காதீர்கள்.
* குளியல் தொட்டியில் இருக்கும் போது அலாரத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
* தூங்குவதற்கு முன் அல்லது மருந்துகளை உட்கொண்ட பின் சுடுநீரில் குளிக்க வேண்டாம்.
* குளியலறையில் இருக்கும் போது மொபைல் போனை அருகிலேயே வைத்திருங்கள்.
இவற்றை ஒருவர் தினமும் மேற்கொள்ளும் போது குளியலறையில் கார்டியாக் அரெஸ்ட்டினால் மரணம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications