Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்பது உண்மையா? - டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க...
Chicken And Cancer: உலகளவில் அசைவ பிரியர்களின் மிகவும் விருப்பமான இறைச்சி என்றால் அது சிக்கன் தான். மேலும் சிக்கன் விலை குறைவில் கிடைக்கக்கூடியது என்பதால் அசைவ பிரியர்கள் இந்த சிக்கனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக ஜிம் செல்பவர்கள் புரோட்டீனைப் பெறுவதற்கு சிக்கனை அதிகமாக உட்கொள்வார்கள். ஏனெனில் சிக்கனில் கொழுப்பு குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம்.
ஆனால் சமீபத்தில் வாரத்திற்கு 300 கிராம் சிக்கனை உட்கொண்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளதாக ஒரு புதிய ஆய்வின் அறிக்கை வெளிவந்தது. இதனால் சிக்கனை சாப்பிடும் பலருக்கும், இனிமேல் சிக்கன் சாப்பிடலாமா கூடாதா என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்துள்ளது. உண்மையில் சிக்கனை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா என்பது குறித்து டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கருத்தை கூறியுள்ளார். அது என்னவென்பதை இப்போது காண்போம்.

அதில் டாக்டர் அருண்குமார் இந்த புதிய ஆய்வு குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது" இந்த சிக்கன் குறித்த சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 19 வருடத்திற்கு முன் குறிப்பிட்ட நபர்களின் உணவுப் பழக்கத்தை கேட்டறிந்து, பின் அவர்களை 19 வருடங்களாக பின்தொடர்ந்து, யாருக்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது, சிக்கன் சாப்பிடுபவர்களுக்கா, மட்டன் சாப்பிடுபவர்களுக்கா என்றெல்லாம் பார்த்து, ஆய்வாளர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதில் வாரத்திற்கு 300 கிராமிற்கு மேல் சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு இறப்பு விகிதம் குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச புற்றுநோய் ஏஜென்சி மேற்கொண்ட ஆய்வுகளில், மட்டன், மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால் தான் புற்றுநோய் வரும் என்று கூறியதோடு, இந்த இறைச்சிகளுக்கு மாற்றாக சிக்கன், மீன் போன்றவற்றை சாப்பிட்டால், புற்றுநோயின் அபாயம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவித்தன.
எனவே ஒரு ஆராய்ச்சியில் மட்டன், மாட்டுக்கறி, பன்றிக்கறி சாப்பிட்டால் தான் வரும், சிக்கன் சாப்பிட்டால் வராது என்றும், மற்றொரு ஆராய்ச்சியில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று மாற்றி மாற்றி கூறப்படுகின்றன. எனவே சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று கூறுதெல்லாம் பொய் தான்.
சொல்லப்போனால் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு வாழ்க்கை முறை, மரபணுக்கள், எப்படி உணவை சமைத்து சாப்பிடுகிறார்கள், சிகரெட், மது பழக்கங்கள் உள்ளதா என்பதைப் பொறுத்தது. எனவே உங்களுக்கு பிடித்த எதையும் ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், நல்ல தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பு நன்றாகவே குறையும்" என்று டாக்டர். அருண்குமார் கூறினார்.
எனவே சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று நினைத்து, சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்காமல், அந்த சிக்கனை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட்டு, அதன் முழு நன்மைகளைப் பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
புற்றுநோய் இருந்தால், சிக்கன் சாப்பிடலாம். சிக்கன் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். புற்றுநோய் உள்ளவர்கள் சிக்கனை தவிர்க்க வேண்டும் என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மேலும் தொடர்ச்சியான, நீண்ட கால ஆரோக்கியத்திற்கு நீங்கள் சீரான உணவை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஆம், சிக்கனில் கொலஸ்ட்ரால் உள்ளது. இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க பங்களிக்கும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக சிக்கனை உட்கொண்டால் அல்லது எண்ணெயில் பொரித்து உட்கொள்ளும் போது, உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.
சிக்கனின் தோல் பகுதியில் தான் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. அதைத் தொடர்ந்து தொடை, கால்கள் மற்றும் இறக்கைகள் ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் உள்ளன. சிக்கனின் நெஞ்சு பகுதியில் தான் குறைந்த அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது.



Click it and Unblock the Notifications











