Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
அடிக்கடி பல் வலிக்குதா? அப்ப அது மாரடைப்பின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. வேறு என்ன அறிகுறிலாம் தெரியும்?
Heart Attack Symptoms In Tamil: உங்களுக்கு அடிக்கடி பல் வலி வருமா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் பல் வலியானது இதய பிரச்சனையை தான் சுட்டிக்காட்டுகிறது. தற்போது பல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பல் பிரச்சனைகள் மாரடைப்பின் அறிகுறிகளுள் ஒன்றாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அது உண்மை தான்.
பொதுவாக மாரடைப்பு என்றால் மார்பு வலி, இடது கையில் வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிவோம். மேலும் இந்த அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர பலர் அறியாத வேறு சில அறிகுறிகளும் உள்ளன. அதில் ஒன்று தான் பல் பிரச்சனைகள்.

தற்போது உலகில் பெரும்பாலானோரின் இறப்புக்கு கரோனரி இதய நோய் முக்கிய காரணமாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகளை அறிந்து கொள்வதன் மூலம், உயிர்சேதம் ஏற்படுவதைத் தடுக்கலாம். தரவுகளின் படி, 2023 ஆம் ஆண்டில் 13 சதவீத மக்களின் இறப்புக்கு கரோனரி இதய நோய் காரணமாக உள்ளது. கரோனரி இதய நோய் என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும் நிலையாகும்.
பல் வலி எப்படி இதய நோயின் அறிகுறியாக உள்ளது?
பற்களுக்கும் இதயத்திற்கும் செல்லும் நரம்புகள் சில பாதைகளை பகிர்ந்து கொள்வதால், பல் வலி மாரடைப்பின் அறிகுறியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் இதுவரை மாரடைப்பு ஏற்பட்ட பல நோயாளிகள் தங்கள் முதுகு பகுதியில் மிகுந்த அசௌகரியத்தையும், பல் வலி பிரச்சனையையும் சந்தித்ததாக புகார் கூறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போதோ அல்லது இரத்தத்தின் அளவு குறையும் போதோ, அதனால் வலியானது பற்கள், கைகள், முதுகு, தாடை போன்ற பகுதிகளில் தெரியும். அதே வேளையில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டால், அதன் விளைவாக வலி அதிகரிக்கும். அதே சமயம் ஓய்வில் இருக்கும் போது வலி குறையும். எனவே அடிக்கடி பற்களில் வலியை அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மாரடைப்பின் பிற அசாதாரண அறிகுறிகள்
வயிற்று வலி
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், வயிற்று வலி, குமட்டல் போன்றவையும் இதய பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். அதுவும் சில நேரங்களில் பெண்களுக்கு மாரடைப்பின் அறிகுறி அஜீரண கோளாறு, குமட்டல், வயிற்று அசௌகரியம் போன்று தெரியலாம். அத்துடன் மார்பு வலி, மூச்சுத்திணறல், தாடை வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே திடீரென்று காரணமின்றி வயிற்று வலியுடன் மார்பு வலியையும் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வியர்வை
மிகுந்த சோர்வுடன் அளவுக்கு அதிகமாக வியர்வையை சந்தித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் எப்போது ஒருவரது இதயத் துடிப்பு குறைந்து, இரத்த ஓட்டம் குறைகிறதோ, அப்போது இந்த அறிகுறிகள் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆய்வுகளின் படி, இந்த அறிகுறிகள் பெண்களிடையே இரவு நேரத்தில் அதிகமாக காணப்படுகிறது.
எனவே மாரடைப்பால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று நினைத்தால், பல் வலி, வயிற்று வலி, அதிக வியர்வை போன்றவற்றை சந்திக்கும் போது, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications