Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
எச்சரிக்கை! பாராசிட்டமால் உட்பட 53 மருந்துகள் தர சோதனையில் தோல்வி.. வேறு எதெல்லாம்-ன்னு பாருங்க..
தற்போது பலர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தான் உயிர் வாழ்ந்து வருகின்றனர். எனவே நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை தரமானதாக இருக்கக வேண்டியது அவசியம். ஆனால் நாம் எடுக்கும் மருந்து மாத்திரைகள் அனைத்துமே தரமானதா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் கால்சியம், வைட்டமின் டி சப்ளிமெண்ட்டுகள், சர்க்கரை நோய் மாத்திரைகள், உயர் இரத்த அழுத்த மருந்துகள் உட்பட 53-க்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன.

சமீபத்தில் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு மாதாந்திர மருந்து எச்சரிக்கை பட்டியலை வெளியிட்டது. அதில் 53 மருந்துகளின் பட்டியலை அந்த சிடிஎஸ்சிஓ தரமற்றதாக அறிவித்துள்ளது. இந்த மருந்துகளின் பட்டியலில் தினசரி எடுக்கும் பல மருந்துகளும் அடங்கியுள்ளன. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளாவன:
* வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால்
* வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள்
* ஆன்டிஆசிட் பேன்-டி
* பாராசிட்டமால் ஐபி 500மிகி
* நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு
* உயர் இரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் மற்றும் பல அடங்கும்.
இந்த மருந்துகள் ஹெட்டோரோ மருந்துகள், அல்கெம் ஆய்வகங்கள், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், மெக் லைஃப் சயின்சஸ், ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் மற்றும் பல பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவைகளாகும். மேலும் வயிற்று பிரச்சனைகளை சரிசெய்ய பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் PSU ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் லிமிடெட் (HAL) தயாரித்த மெட்ரானிடசோல் கூட தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.
அதேப் போல் டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மற்றும் உத்தரகாண்ட் சார்ந்த ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் தயாரித்த ஷெல்கால் மருந்தும் தரநிலை சோதனையில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாக்டீரியா தொற்றை எதிர்த்துப் போராட பரிந்துரைக்கப்படும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50 உலர் சஸ்பென்ஷன் கூட தரமற்றதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் வழங்கும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தரமற்றவையாக இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டு, மக்கள் இவற்றை எடுக்கக்கூடாதென மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே மக்களே! நீங்கள் இந்த நிறுவனங்களின் மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், அவற்றை எடுப்பதை தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications