Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் பார்ட்னர் இருப்பது ஆபத்தானதா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன? ஷாக் ஆகாதீங்க...!
செக்ஸ் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு நல்ல பாலியல் துணை தேவை. ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணைகளைக் கொண்டிருக்கிறார்கள்.
பல பாலுறவுத் துணைகளை வைத்திருப்பது என்பது ஒரே நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதாகும்.

பல பாலியல் துணைகள் இருப்பது பாதுகாப்பானதா?
ஆய்வுகளின் படி, சம்மதத்துடனும், பாதுகாப்பாகவும் இருக்கும் வரை ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணைகள் வைத்திருப்பதில் எந்த ஆரோக்கிய சிக்கலும் இல்லை. ஒருவர் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையை விரும்பினால் தங்கள் சொந்த பாலியல் தேவைகள் குறித்தும் மற்றும் அதில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
HPV தொற்று ஆபத்து
குறுகிய காலக்கட்டத்தில் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது HPV ஆபத்தை அதிகரிக்கும். ஆய்வுகளின் படி எளிதில் பரவக்கூடிய பாலியல் நோயென்றால் அது HPV தான். ஏனென்றால், HPV உள்ள பலர் எந்த அறிகுறிகளையும் உணர்வதில்லை, ஆனால் பாலியல் தொடர்பு மூலம் இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும். இதிலுள்ள மற்றொரு ஆபத்து HPV புற்றுநோயை உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை அல்லாத ஒருவருடன் உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் ஆணுறை பயன்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
HIV ஆபத்து
பல பாலியல் துணை உள்ளவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு அல்லது பரவும் ஆபத்து அதிகமாக இருக்கலாம். ஆய்வுகளின்படி, பல பாலியல் துணைகளுடன் (MSP) பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது எச்.ஐ.வி மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது மற்றும் இளைஞர்களிடையே பாலியல்ரீதியாக பரவும் பிற நோய்த்தொற்றுகளுக்கும் இது காரணமாக இருக்கிறது.
உளவியல் சிக்கல்கள்
ஆரோக்கிய சிக்கல்கள் மட்டுமின்றி உளவியல்ரீதியாகவும் பல பாலியல் துணைகளைக் கொண்டிருப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நீண்டகால குற்ற உணர்வை ஏற்படுத்தும், உங்களின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு ஒருவரை மகிழ்ச்சியடையச் செய்யவோ பல துணையுடன் நீங்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டால், அது உங்களுக்கும், உங்கள் சுற்றத்தாருக்கும் நல்லதல்ல.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
உங்கள் வாழ்க்கைத்துணை அல்லாத ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது எந்த சூழலிலும் காண்டம் உபயோகிப்பதை மறக்கக்கூடாது. மேலும் அடிக்கடி பாலியல் தொற்றுநோய்க்கான சோதனைகள் அடிக்கடி செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஆய்வுகளின் படி 4 மாதத்திற்கு மேல் ஒரே துணையுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கும், 6 மாதத்திற்கு மேல் ஒரே துணையுடன் உறவு கொள்ளும் பெண்களுக்கு பாலியல் தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு கணிசமாக குறைகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

