Latest Updates
-
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் வைக்கும் திசை தெரியுமா? இந்த வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வகை பெண்கள் ஆண்கள் வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்களாம் - ஜாக்கிரதை -
மதுரை மட்டன் பொடிமாஸ் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 31 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு அலைச்சல் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (31 May 2026-06 June 2026)- ஜூன் மாதத்தின் முதல் வாரம் இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
புகைப்பிடிக்காதவர்களிடம் அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்: காரணங்களும், அபாய அறிகுறிகளும் - விளக்கும் டாக்டர்! -
பஞ்சாப் வீடியோவை பார்த்து அதிர்ச்சியா? உங்கள் குடும்பத்திலும் இப்படி நடக்க வாய்ப்பிருக்கா? இதோ சில எச்சரிக்கை அறிகுறிகள்! -
உங்கள் துணை புகைப்பிடிப்பதை நிறுத்த மாட்டேங்கிறாரா? சண்டையிடாமல் அவர்களை மாற்ற இந்த ஒரு வழி போதும்! -
வெயிலால் டல்லாக இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போடுங்க... -
Guru Peyarchi 2026: 12 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் குரு பெயர்ச்சி - திடீர் லக் , ஹம்ச யோகம் யாருக்கு தெரியுமா?
சொன்னா நம்பமாட்டீங்க.. இந்திய ஆண்களுக்கு பானை போல வயிறு வர முக்கிய காரணம் இந்த 3 உணவுகள் தானாம்..!
Belly Fat Reasons In Tamil: உலகில் தொப்பையால் நிறைய பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொப்பையைக் குறைக்க நினைத்தால், அதற்கு சிறந்த காலம் கோடைக்காலம் தான். இந்த காலத்தில் தொப்பை அல்லது உடல் எடையைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனைப் பெற முடியும்.
ஒருவரது தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு வெறும் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது. உண்ணும் உணவிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொப்பையைக் குறைக்கவே முடியாது.

ஆனால் இப்படி பானைப் போன்ற தொப்பை ஏன் இந்திய ஆண்களுக்கு வருகிறது என்று என்றாவது யோசித்ததுண்டா? இந்திய ஆண்கள் உடற்பயிற்சிகளில் போதுமான அளவு ஈடுபடுவதில்லையா என்ன? நிச்சயம் இல்லை. சொல்லப்போனால், இந்திய ஆண்களுக்கு பானை போன்று வயிறு வீங்குவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.
உலகளவில் இந்தியாவில் தான் குறைவான அளவில் விலங்கு இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இப்படி தொப்பை வர வேறு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்ற நீங்கள் கேட்கலாம். இதற்கு இந்தியர்கள் உட்கொள்ளும் 3 விதமான உணவுகள் தான் காரணம். அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1. அதிக சர்க்கரை உணவுகள்
தற்போது மார்டன் டயட் என்ற பெயரில் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள் இந்திய மக்களால் அதிகம் பின்பற்றப்படுவதோடு, மேற்கத்திய உணவுகளை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி அதிகம் பதப்படுத்தப்பட்ட மேற்கத்திய உணவுகளை இந்தியர்கள் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர். இந்த மேற்கத்திய உணவுகளில் உணவின் சுவைக்காக செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயற்கை சர்க்கரையானது ஒரு குளுக்கோஸ் சிரப்.
ஆய்வுகளின் படி, இந்த சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுப்பதன் மூலம் வீக்கம் மற்றும் மன அழுத்தம் அதிகரிப்பது மட்டுமின்றி, இன்சுலின் அளவுகளிலும் பெரிய உயர்வு ஏற்பட வழிவகுக்கும். இது உடலில் கொழுப்பை சேமிக்க சிக்னலை அளிக்கும். சர்க்கரையில் உள்ள ப்ரக்டோஸ் உடலின் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு செல்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்குவைத்து, உடல் பருமன், தொப்பை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
2. விதை எண்ணெய்கள்
விதை எண்ணெகள் மிகவும் பதப்படுத்தப்பட்டவை மற்றும் அதிக அழற்சி கொண்டவை. இந்த விதை எண்ணெய்கள் மிகவும் சுத்திகரிக்கப்பட்டவை என்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி எண்ணெய்களை அதிகம் சுத்திகரிக்கும் போது, அதில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உருவாகும். இந்த வகை கொழுப்புக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் இந்த எண்ணெய்களை நீண்ட காலமாக உட்கொண்டு வந்தால், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் அப்படியே தங்கி, காலப்போக்கில் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற ஆபத்தான நோய்களின் அபாயங்களை அதிகரித்துவிடும்.
3. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து
சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அல்லது கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் கொழுப்புக்களை தேங்க செய்து தொப்பையை உண்டாக்கும். எனவே தொப்பை வரக்கூடாதெனில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை எடுப்பதைக் குறைத்து, தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுக்களை எடுக்க வேண்டும்.
பானைப் போன்ற வயிறு வராமல் தடுப்பது எப்படி?
அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது தான், அது வயிற்றில் வீக்கம் மற்றும் உப்புசத்தை உண்டாக்கி, குடலை பலவீனப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் எச்.பைலோரி பாக்டீரியாக்கள் எளிதில் செழித்து வளர்வதற்கான சூழலை உருவாக்குகிறது. எச். பைலோரியானது வயிற்றின் பாதுகாப்பு சளி புறணியை பலவீனப்படுத்தி, இரைப்பை அழற்சி மற்றும் புண்களை உண்டாக்குகிறது.
மேலும் வயிற்றின் அமிலத்தை நடுநிலையாக்கும் அமோனியாவை உருவாக்கி, செரிமான பிரச்சனைகள மற்றும் நோய்கள் வளரும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதோடு, வயிற்று உப்புசத்தை உண்டாக்கும் உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.
இது தவிர மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்பதுடன், கீட்டோஜெனிக் டயட் என்று அழைக்கப்படும் கார்போஹைட்ரேட் குறைவான டயட்டுகளையும் மேற்கொள்வதனால், கார்போஹைட்ரேட்டுக்களை விட உடலில் உள்ள கொழுப்புக்களை எரிபொருளாக எரிக்க உடலை பயிற்றுவிப்பதன் மூலம் உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைத்து, தொப்பையைக் குறைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications