Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உடலுறவுக்கு முன்னும் பின்னும் இந்த விஷயங்கள செய்யுறது... உங்க செக்ஸ் வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்!
உடலுறவுக்கு முன்னும் பின்னும் உங்களைத் தூய்மைப்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் இது உடலில் திரவங்கள் பரவுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது.
தம்பதிகள் இருவருக்கும் ஓர் அற்புத உணர்வை தரும் செயல் உடலுறவு. அது இருவருக்கும் அளவற்ற இன்பத்தை கொடுக்கும். அதேநேரம் அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில், பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களால் தம்பதிகள் இருவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆதலால், உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை கவனிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. நம் உடலில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை நாடுகிறோம். அதேபோல அந்தரங்க உறுப்புகளில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

பாதுகாப்பான உடலுறவுக்கு உங்கள் அந்தரங்க ஆரோக்கியம் மிக அவசியம். பொதுவாக அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்தை பற்றி மக்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. அதனால், அதன் அறிகுறிகள் தவறவிடப்படுவதால், நோய்தொற்றிலிருந்து குணமடைய உங்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.
பாலுறுப்புகளைக் கவனிப்பது மலட்டுத்தன்மை போன்ற முக்கியமான உடல்நலச் சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது. தனிநபரின் பாலியல் செயல்பாடு பாதிக்கப்படாமல் இருப்பதையும் இது உறுதி செய்கிறது.
ஆதலால், உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பும் பின்பும் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் ஒவ்வொருவரும் தங்கள் பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக கொண்டிருக்க கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்தல்
ஒவ்வொருவருக்கும் தங்கள் உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், அந்தரங்க பகுதி என்னும்போது, அது குறித்து விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இல்லை. உங்கள் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது மிக முக்கியம். ஏனெனில் இந்த பகுதி தூய்மையாக இல்லையென்றால், கிருமிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் இடமாக மாறும். எப்போதும் உங்கள் அந்தரங்க பகுதியை வெற்று நீரில் மெதுவாக சுத்தம் செய்வது நல்லது. விளம்பரங்கள் அல்லது ஒருவரின் பரிந்துரையைப் பின்பற்றி கண்மூடித்தனமாக இரசாயனப் பொருட்களை அந்த பகுதியில் பயன்படுத்த வேண்டாம், அவ்வாறு செய்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

உடலுறவுக்கு முன்னும் பின்னும் தூய்மையாக இருக்க வேண்டும்
உடலுறவுக்கு முன்னும் பின்னும் உங்களைத் தூய்மைப்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் இது உடலில் திரவங்கள் பரவுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது. நீங்கள் வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்பைப் பயன்படுத்தி குளிக்கலாம். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

டச்சிங் பரிந்துரைக்கப்படவில்லை
பல பெண்கள் தங்கள் யோனியை சுத்தமாக வைத்திருக்க டச்சிங்கைத் தேர்வு செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். யோனியின் சாதாரண pH அளவை பாதிக்கிறது மற்றும் பிற உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்தலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். யோனி பகுதியை சுத்தம் செய்ய வெற்று தண்ணீரே போதுமானது.

சிறுநீர் கழிக்க வேண்டும்.
உடலுறவுக்குப் பிறகு குளியலறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் மற்றும் உங்கள் அந்தரங்க பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். சிறுநீர் கழிப்பதன் மூலம், உங்கள் உடலில் நுழைய வாய்ப்புள்ள கிருமிகளை வெளியேற்றலாம். நீங்களும் உங்கள் துணையும் எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தாலும், கிருமிகள் சுரக்கும் வாய்ப்புகளை ஒருபோதும் உருவாக்க வேண்டாம்.

செக்ஸ் பொம்மைகளை சுத்தம் செய்யவும்
உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல மற்ற விஷயங்களையும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். நீங்கள் செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாக சுத்தம் செய்யாமல் வைத்திருக்க வேண்டாம். அதுபோல செக்ஸ் பொம்மைகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பும் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆணுறைகளை மாற்றவும்
நீண்ட நேரம் அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடும்போது, ஆணுறைகளை மாற்ற மறக்காதீர்கள். நீங்கள் பாலின வகைகளில் இருந்து மாறினாலும் (குத செக்ஸ், வாய்வழி செக்ஸ்) ஆணுறைகளை மாற்ற மறக்காதீர்கள். ஒரே ஆணுறையைப் பயன்படுத்தினால், தொற்று அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, அவற்றைப் பயன்படுத்துவதன் நோக்கமும் வீணாகிவிடும். ஆதலால், ஆணுறைகளை பயன்படுத்தும்போது, கவனமாக இருக்க வேண்டும்.

அசாதாரண அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
ஒவ்வொரு நோய்த்தொற்றும் லேசான அறிகுறிகளுடன் தொடங்குகிறது மற்றும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கும்போது நோய்கள் மேம்பட்ட நிலைக்கு வளர தொடங்கும். அந்தரங்க பகுதிகளில் சொறி, அரிப்பு மற்றும் எரியும் உணர்வுகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அதை புறக்கணிக்காதீர்கள். உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு வரும் பெரிய பிரச்சனையை கண்டறிய உதவும்.

உணர்ச்சி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்
பாலியல் ஆரோக்கியம் என்பது தனிப்பட்ட உறுப்புகளுக்கு மட்டும் அல்ல. இது நமது மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது. ஆதலால், மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். மன அழுத்தம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உங்கள் துணை உடலுறவு கொள்ள உங்களை கட்டாயப்படுத்தினால், அதற்கு அடிபணிய வேண்டாம். விருப்பம் இருந்தால் மட்டும் உடலுறவு கொள்ளுங்கள்.
இருவரும் உடலுறவின்போது மகிழ்ச்சியாக இருங்கள், மகிழ்ச்சியான உடலுறவை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications