Latest Updates
-
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
காலை நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டா அந்த நாள் முழுவதும் நீங்க ரொம்ப கஷ்டப்படணுமாம்...!
காலை நேரம் என்பது ஒரு நாளின் மிகவும் முக்கியமான நேரமாகும். இது ஒரு புதிய நாளின் தொடக்கமாகும், நம்முடைய முழு நாளும் இதனை சார்ந்துதான் உள்ளது. மக்கள் பெரும்பாலும் தங்கள் நாளை ஒரு நல்ல தொடக்கத்துடன் தொடங்க முயற்சிப்பதற்கான உண்மையான காரணம் இதுதான்.
ஒரு நல்ல நாளைத் தொடங்க நல்ல காலை உணவு மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான ஒன்றை சாப்பிட்டால், அது நாள் முழுவதும் உங்களை முழு ஆற்றலுடன் வைத்திருக்கும், மாறாக, ஆரோக்கியமற்ற உணவுகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், அது உங்கள் முழு நாளையும் கெடுத்துவிடும்.

எனவே உங்கள் நாளை எந்தெந்த உணவுகளுடன் தொடங்க வேண்டும், எந்த உணவுகளுடன் தொடங்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். உங்கள் காலைப்பொழுதை எந்தெந்த உணவுகளுடன் தொடங்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பழச்சாறு
பழச்சாறு ஒரு நாளைத் தொடங்க ஒரு சிறந்த வழி என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இது முற்றிலும் சரியானது அல்ல. உண்மையில், பழச்சாற்றில் நார்ச்சத்து இல்லை, எனவே காலையில் அதை முதலில் குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இதனால், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். பழச்சாறுக்கு பதிலாக எலுமிச்சை தண்ணீர், வெள்ளரிக்காய் சாறு, சாத்துக்குடி போன்றவற்றைக் கொண்டு நாளைத் தொடங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பான்கேக் மற்றும் வாஃபிள்ஸ்
பெரும்பாலும், மக்கள் காலை உணவுக்கு விரைவாக தயாரிக்கவும் வசதியாகவும் இருக்கும் உணவுகளை விரும்புகிறார்கள். பான்கேக் மற்றும் வாஃபிள்ஸ் அதில் ஒன்றாகும், பலர் இதனை காலை உணவாக சாப்பிட விரும்புகிறார்கள்.
இருப்பினும், உங்கள் நாளைத் தொடங்க இது ஒரு நல்ல தேர்வு அல்ல. அதிகாலையில் இவற்றைச் சாப்பிட்டால், நாள் முழுவதும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வேண்டும் என்ற ஆவல் உண்டாகும், இது உங்கள் ஆற்றலைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது.
தேனீர்
பலர் தங்கள் நாளை ஒரு கோப்பை தேநீருடன் தொடங்குகிறார்கள். காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சில சமயங்களில் அது இல்லாமல் அசௌகரியமாக உணர ஆரம்பிக்கிறார்கள். இருப்பினும், தேநீருடன் நாளை தொடங்குவது மிகவும் மோசமான யோசனையாகும்.
இதை காலையில் குடிப்பதால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, உங்களுக்கு அமிலத்தன்மை, வயிறு எரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், மேலும் இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம்.
காலை உணவு தானியங்கள்
காலை உணவு தானியங்கள் பலரின் காலை உணவாக இருக்கிறது. காலை உணவுக்கு இது ஒரு ஆரோக்கியமான விருப்பம் என்று மக்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இது முற்றிலும் உண்மை இல்லை. அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இல்லாததால் உங்கள் காலைப்பொழுதை இதனுடன் தொடங்குவது மோசமான தேர்வாக அமைகிறது.
காபி
ஒரு கப் காபியுடன் தங்கள் நாளைத் தொடங்கும் பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது, நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால் உங்களின் இந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்றுங்கள். காலையில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரிக்கலாம், இது ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கும்,
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை விட, காலை உணவுக்குப் பிறகு குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சுவையூட்டப்பட்ட தயிர்
சுவையூட்டப்பட்ட தயிர்களும் காலை உணவுக்கு ஆரோக்கியமற்ற தேர்வாகும், ஏனெனில் அவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது மற்றும் சாதாரண தயிர் போன்ற பலன்களை வழங்காது. பல வகை தயிர்களில் கொழுப்பு அல்லது பிற ஊட்டச்சத்து கலவைகள் இல்லை, அவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமற்ற தேர்வாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
