Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ஆர்த்ரிடிஸ் இருக்குதா? அப்ப இந்த சப்ளிமெண்ட்டுகளை எடுக்காதீங்க.. இல்ல உங்க நிலைமை மோசமாயிடும்...
Arthritis: தற்போது ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். ஆர்த்ரிடிஸ் என்பது எந்த வயதிலும் ஒருவரை தாக்கக்கூடிய மிகவும் வேதனைமிக்க மூட்டு வலியை உண்டாக்கும் நிலையாகும். இந்நிலையில் மூட்டுக்களில் அழற்சி ஏற்பட்டு, வீக்கத்தை உண்டாக்கும்.
இந்த ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் கொண்டிருந்தால், தினசரி செயல்பாடுகளை செய்வதில் கூட மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற தினமும் சப்ளிமெண்ட்டுகளை எடுத்து வருகிறார்கள். ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் கொண்டவர்களுள் சுமார் 65 சதவீதம் பேர் ஆர்த்ரிடிஸிற்காக சப்ளிமெண்ட்டுகளை எடுத்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலும்பு தொடர்பான இந்த ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் சந்திக்கும் வலி மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்க இயற்கை வழிகளும் ஓரளவு பயனுள்ளதாக இருந்தாலும், அனைத்தும் அனைவருக்கும் ஒரு நல்ல தீர்வைத் தரும் என்று கூறிவிட முடியாது.
அதுவும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு சில சப்ளிமென்ட்டுகளை எடுத்தால், அவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போது ஆர்த்ரிடிஸ் பிரச்சனை கொண்டவர்கள் எந்த வகையான சப்ளிமென்ட்டுகளை எடுக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
ரெட் ஈஸ்ட் ரைஸ்
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு ரெட் ஈஸ்ட் ரைஸ் மிகவும் பிரபலமான ஒரு சப்ளிமெண்ட் ஆகும். ஆனால் நிறைய பேர் இதை மூட்டு வலிக்கான சப்ளிமெண்ட்டாகவும் எடுத்து வருகின்றனர். ஏனெனில் இதில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகளவில் உள்ளன. ஸ்டேடின் மருந்துகளைப் போலவே, ரெட் ஈஸ்ட் ரைஸ் கூட தசைவலி மற்றும் மூட்டுக்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சப்ளிமெண்ட்டை ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சப்பரல்
சப்பரல் என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு மூலிகையாகும். இந்த மூலிகையின் சப்ளிமெண்ட் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. மேலும் இது மூட்டு வலிகள் மற்றும் மூட்டு வீக்கத்திற்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. ஆனால் மூட்டு வலிக்காக சப்பரல் சப்ளிமெண்ட்டுகுளை எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிரோசிஸை ஏற்படுத்தும். அதுவும் இதை மிகச்சிறிய அளவில் எடுத்தாலும், அது கல்லீரலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே ஆர்த்ரிடிஸ் இருந்தால், இதை எடுக்காதீர்கள்.
அர்னிகா
அர்னிகா சருமத்திற்கான மிகச்சிறந்த சப்ளிமெண்ட்டாகும். இது ஆயின்மெண்ட் மற்றும் டின்சர் போன்று காயங்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இந்த ஆயின்மெண்ட் கடுமையான அரிப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட அர்னிகாவை உட்கொள்வதாக இருந்தால், அது மருத்துவரின் அறிவுரையின் பேரில் மட்டுமே எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக இதை எடுக்கும் போது, உயிருக்கே ஆபத்தும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
கேட்ஸ் க்ளா
ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை சப்ளிமெண்ட்டு தான் கேட்ஸ் க்ளா. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமான அளவில் உள்ளன. இருப்பினும் இதை அளவாக எடுக்கும் போது, அது வலியில் இருந்து மட்டும் தான் நிவாரணம் அளிக்குமே தவிர, மூட்டு வீக்கம் மற்றும் அழற்சியில் இருந்து எந்த நிவாரணத்தையும் ஏற்படுத்தாது. அதுவும் இந்த கேட்ஸ் க்ளாவின் பக்கவிளைவுகளில் குமட்டல் மற்றும் வயிற்று வலி ஆகியவை அடங்கும். ஏனெனில் இந்த சப்ளிமெண்ட் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதற்கான சில மருந்துகளுடன் தொடர்பு கொண்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த மருந்தை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
ஆர்த்ரிடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். இந்நிலை மூட்டுக்களில் வலி, விறைப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆர்த்ரிடிஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரிடிஸ் மற்றும் கவுட் ஆகியவை அடங்கும்.
ஆர்த்ரிடிஸின் அறிகுறிகளில் மூட்டு வலி, வீக்கம், விறைப்பு மற்றும் குறைந்த இயக்க வரம்பு ஆகியவை அடங்கும்.
ஆர்த்ரிடிஸ் மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ. போன்ற இமேஜிங் சோதனைகள் ஆகியவற்றின் கலவையின் மூலம் கண்டறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications











