Latest Updates
-
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான்
ஆண்களே! செக்ஸில் ஆர்வம் குறைந்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மெனோபாஸ் உங்களுக்கு எப்போது வரும் தெரியுமா?
Male Menopause In Tamil: ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் பல சுகாதார பிரச்சனைகள் உள்ளன. சில பிரச்சனைகள் இருவருக்கும் வித்தியாசமாக இருக்கலாம். சில பிரச்சனைகள் இருவருக்கும் ஒன்றாக ஏற்படலாம். 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஆதாவது மெனோபாஸ் ஏற்படுவது பொதுவானது.
ஆண்களுக்குதான் மாதவிடாய் ஏற்படுவது இல்லையே? அவர்களுக்கு மெனோபாஸ் ஏற்படுமா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், ஆண்களுக்கும் பெண்களை போலவே குறிப்பிட்ட வயதை தாண்டியதும் மெனோபாஸ் ஏற்படும். சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலும் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு தலைப்பு ஆண் மாதவிடாய். இது ஆண்ட்ரோபாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

பெண் மெனோபாஸ் என அறியப்படாவிட்டாலும், ஆணின் மெனோபாஸ் என்பது ஒரு ஆணின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உண்மையான நிலையாகும். ஆண்களின் மெனோபாஸ் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் என்று வரும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது, மெனோபாஸ் ஏற்படுகிறது. அதேபோல டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் ஆண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வயதாகும்போது, அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு இயற்கையாகவே குறைகிறது. இது உடல் சோர்வு, பாலியல் ஆசை குறைதல், திருப்தியற்ற உடலுறவு மற்றும் மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுவது சில சுகாதார நிலைமைகளின் ஆபத்தை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு இதய நோய், நீரிழிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஆண்களே! வயதாகும்போது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற்கான சிகிச்சைகள் உள்ளன. டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும் அறிகுறிகளைப் போக்கவும் உதவும். இருப்பினும், இந்த சிகிச்சையின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுவது முக்கியம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆண் மெனோபாஸ் காலத்தில், அவர்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது ஆகியவை அவர்களுக்கு நன்மை பயக்கும்.
உங்களுக்கு வயதாகும்போது உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். உங்கள் மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளுங்கள். ஏதேனும் உடல்நலக் கவலைகள் இருந்தால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
நீங்க மெனோபாஸ் ஏற்படும் அபாயத்தில் உள்ளீர்களா?
ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும் சில குறிப்புகள் உள்ளன. பொதுவாக 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது. இருப்பினும், சில ஆண்களுக்கு அவர்களின் 40 வயதிலேயே இது ஏற்படலாம்.
சில வாழ்க்கை முறை காரணிகள் ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், தவறான உணவுப்பழக்கம், உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது மற்றும் மன அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும்.
சில மருத்துவ நிலைமைகளைக் கொண்ட ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு மெனோபாஸ் நின்றால், நீங்கள் இந்த நிலையை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருக்கலாம்.
ஆண்களின் மாதவிடாய் நிறுத்தத்தின் சில பொதுவான அறிகுறிகளில் உடல் சோர்வு, பாலியல் ஆசை குறைதல், விறைப்புத்தன்மை, எடை அதிகரிப்பு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும். உங்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவ உதவியை நாடுங்கள்.
இறுதிக் குறிப்பு
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தாலோ அல்லது ஆண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் அபாயம் குறித்து கவலைப்பட்டாலோ, உங்கள் மருத்துவரிடம் பேசுவது அவசியம். அவர்கள் உடல் பரிசோதனை செய்து, உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ளதா மற்றும் சிகிச்சை தேவையா என்பதைத் தீர்மானிக்க சோதனைகளை நடத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

