அக்குள் பகுதியில் கொப்புளங்கள் அடிக்கடி வருகிறதா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு...

Hidradenitis Suppurativa In Tamil: பொதுவாக தோலில் ஏற்படும் சிவப்பு மற்றும் வலிமிகுந்த புடைப்புகளை எப்போதும் நாம் பருக்கள் என்றே நினைக்கிறோம். ஆனால் அது ஒரு ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா என்பது உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக சில சமயங்களில் கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதியில் ஏற்படும் கொப்புளங்கள் இந்த ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவாக இருக்கலாம். இது ஒரு தோல் பிரச்சினையாகும்.

இந்த ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா வருவதற்கு இன்னும் சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் மரபணு, ஹார்மோன்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சரி வாங்க இந்த தோல் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

All You Need To Know About Hidradenitis Suppurativa In Tamil

ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா என்றால் என்ன?

ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா என்பது முகப்பரு இன்வெர்சா என்று அழைக்கப்படுகிறது. இது வலி மிகுந்த சீழ் புடைப்புகளால் வரும் ஒரு அழற்சி நோயாகும். இது பார்ப்பதற்கு பருக்கள் போன்று தோற்றமளிக்கும். இந்த பருக்கள் தோல் மற்றும் ஃபிஸ்டுலஸ் பாதைகளின் கீழ் ஏற்படுகிறது. இது ஆழமான முகப்பரு போன்ற முடிச்சுகள் உட்பட பல வடிவங்களில் இது ஏற்படலாம்.

இந்த முகப்பரு புண்கள் அபோக்ரைன் சுரப்பிகள் நிறைந்த பகுதிகளிலும், உங்கள் அக்குள், இடுப்பு, மார்பகத்தின் கீழ், காதுகள், கழுத்தின் பின்புறம், உள் தொடைகள் மற்றும் பிட்டம் போன்ற தோல் ஒன்றோடு ஒன்றாக தேய்க்கும் இடங்களிலும் தோன்றும். இந்த நாள்பட்ட நிலை மக்கள் தொகையில் 4% வரை பாதிக்கிறது. இந்த முகப்பருக்கள் உடைந்து வலி நிறைந்து ஆழமான வீங்கிய கட்டியாக உருவாகலாம். இது இறுதியில் வடுவாக மாறுகிறது.

ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா அறிகுறிகள்

இந்த ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா தோல் ஒன்றோடு ஒன்றாக தேய்க்கும் இடங்களில் வலி மிகுந்த தோல் வெடிப்புடன் தொடங்குகிறது.

* வலிமிகுந்த தோலின் கீழ் சிவப்பு கட்டிகள் பெரிதாகி, அப்புறம் உடைந்து விடும்.
* சீழுக்கு கீழே அரிப்பு மற்றும் கெட்ட வாசனை ஏற்படும்.
* பிறகு அது கரும்புள்ளிகள் கொண்ட சிறிய குழியாக மாறும்.

இந்த புண்கள் மெதுவாக குணமாகலாம். இது தோலின் கீழ் வடுக்களுக்கு வழி வகுக்கும். லேசான பாதிப்பு என்றால் ஒரு பகுதியில் மட்டும் சில புடைப்புகள் தோன்றும், மிதமான பாதிப்பு என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் புடைப்புகள் தோன்றும்.

இதனால் புடைப்புகள், வடுக்கள், கொப்புளங்கள் மற்றும் நாள்பட்ட வலி ஏற்படலாம். இந்த வலி காரணமாக சிலரால் எழுந்திருக்க கூட முடியாது. மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், உடல் சூடு, புகையிலை பழக்கம் மற்றும் உடல் பருமன் ஆகியவை நிலைமையை இன்னும் மோசமாக்கலாம்.

ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா வருவதற்கு என்ன காரணம்?

இந்த ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா என்பது மயிர்க்கால்களில் ஏற்படும் அடைப்புகளால் ஏற்படுகிறது. மயிர்க்கால்களில் கெரட்டினின் அதிகப்படியான வளர்ச்சியின் காரணமாகவும் புண்கள் உருவாகலாம். அடைக்கப்பட்ட மயிர்க்கால்களில் பாக்டீரியாக்கள் பல்கி பெருகுகிறது. இந்த பாதிப்பு நாள்பட்ட அழற்சி மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கும்.

* மரபணு, சுற்றுச் சூழல் காரணிகளும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
* பருவமடையும் சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம்.
* உடல் பருமன்
* புண்கள்
* புகையிலை பொருட்களை பயன்படுத்துதல்
* முகப்பருக்கள்
* அசாதாரண வியர்வை சுரப்பியின் வளர்ச்சி
* நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து பிற அழற்சி நோய் ஏற்படுதல் போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

யாருக்கு இந்த ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்?

* உங்கள் வயது 20 அல்லது 30 வயதில் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவா பிரச்சனை இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* அதிக எடை மற்றும் உடல் பருமனானவர்கள்
* பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
* தற்போது புகைப்பழக்கம் இருப்பவர்கள் மற்றும் கடந்த காலத்தில் புகைப்பழக்கம் இருப்பவர்கள்.

ஹைட்ராடெனிடிஸ் சுப்புரடிவாவிற்கு சிகிச்சை முறைகள்

* ஆன்டி பயாடிக்குகள்: ஆன்டி பயாடிக்குகள் அழற்சிக்கு காரணமான பாக்டீரியாக்களை தடுக்க உதவுகிறது.

* பயோலாஜிக்: வெளிப்புற மருந்துகள் மற்றும் வலி மிகுந்த வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அழற்சியில் இருந்து காக்கிறது. மேலும் கொப்புளங்கள் வராமல் தடுக்க உதவுகிறது. வெளிப்புற மருந்துகள் தோல்வியடையும் போது பயோலாஜிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. இது பருக்களில் இருந்து உடலை காக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion