Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் இந்த புற்றுநோயின் முதல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
பிறப்புறுப்பு புற்றுநோய் மிக அரிதானதாக இருந்தாலும், கருப்பையில் இருந்து சினைப்பை வரை நீண்டு செல்லும் மெல்லிய தசைக் குழாயைப் பாதிக்கும் ஒரு தீவிர நிலையாகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தனது இரு ஆண்டு அறிக்கையில், நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பிறப்புறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்த நோய் 2025 ஆம் ஆண்டில் 1.57 மில்லியன் மக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ஆண்டு 1.46 மில்லியனாக இருந்தது, இது நாட்டின் சுகாதார அமைப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் ஆபத்தான கட்டத்தை அடையும் வரை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். யோனி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு மிகவும் முக்கியமானது. பிறப்புறுப்பு புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிறப்புறுப்பில் அசாதாரண இரத்தப்போக்கு
யோனி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று அசாதாரண யோனி இரத்தப்போக்கு ஆகும். மாதவிடாய்க்கு இடையில், மாதவிடாய் நின்ற பிறகு அல்லது உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு இதில் அடங்கும். ஏதேனும் காரணமில்லாத இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். பிறப்புறுப்பு இரத்தப்போக்கு சில நேரங்களில் மற்ற காரணங்களால் ஏற்படலாம் என்றாலும் அதனை உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம்.
அசாதாரண யோனி வெளியேற்றம்
யோனி புற்றுநோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறி அசாதாரண யோனி வெளியேற்றம் ஆகும். இந்த வெளியேற்றம் தண்ணீராகவோ, இரத்தமாகவோ அல்லது துர்நாற்றமாகவோ இருக்கலாம். சில பிறப்புறுப்பு வெளியேற்றம் இயல்பானதாக இருந்தாலும், நிறம், நிலைத்தன்மை அல்லது வாசனையில் ஏதேனும் திடீர் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உடலுறவின் போது வலி
உடலுறவின் போது வலியை அனுபவிப்பது பிறப்புறுப்பு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி ஆழமான வலி அல்லது ஊடுருவலின் போது கூர்மையான அசௌகரியமாக இருக்கலாம். உடலுறவின் போது வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தொடர்ந்து வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பிறப்புறுப்பை சுற்றி சதை அல்லது கட்டி இருப்பது
யோனியில் ஒரு கட்டி அல்லது சதை இருப்பது போன்ற உணர்வு யோனி புற்றுநோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாகும். இந்த கட்டி கடினமாகவோ அல்லது தடிமனாகவோ உணரப்படலாம் மற்றும் பொதுவாக வலியற்றதாக இருக்கும். உங்கள் யோனியின் திசுக்களில் ஏதேனும் அசாதாரண மாற்றங்களை நீங்கள் கண்டால், அதை மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
சரியான காரணமின்றி சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பது சில நேரங்களில் யோனி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என நீங்கள் உணர்ந்தால், குறிப்பாக மற்ற அறிகுறிகளுடன் இருந்தால், இதை மருத்துவரிடம் விவாதிக்க வேண்டியது அவசியம்.
ஆபத்தான நிலையின் அறிகுறிகள்
யோனி புற்றுநோய் முன்னேறும் போது, மிகவும் கடுமையான அறிகுறிகள் உருவாகலாம். சிறுநீர் கழிப்பதில் வலி, சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம், மலச்சிக்கல், முதுகுவலி, வயிற்று வலி, இடுப்பு வலி மற்றும் கால் வீக்கம் ஆகியவை இதில் அடங்கும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், விரைவில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியம்.
யாரெல்லாம் ஆபத்தில் உள்ளனர்?
60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு யோனி புற்றுநோய் மிகவும் பொதுவானது, இந்த நோய் கண்டறியப்பட்டவர்களில் 50% பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20% பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) பிறப்புறுப்பு புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக இருக்கிறது. 21 முதல் 65 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் பேப் சோதனைகள் மற்றும் HPV ஸ்கிரீனிங் உட்பட வழக்கமான சோதனைகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

