Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
Garlic Benefits: வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்.. உங்கள் உடலில் எத்தனை அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
நாம் சாப்பிடும் எந்த உணவிலும் பூண்டை சேர்ப்பது அவசியம். ஏனெனில் பூண்டில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.சுவை மற்றும் நறுமணத்திற்கு பெயர் பெற்ற பூண்டின் குணாதிசயங்கள் ஏராளம். இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே பூண்டு பல நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.
அதனால் தினமும் உங்கள் காலை வேளையை பூண்டோடு தொடங்குங்கள். அதில் பல நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறூகிறார்கள். அனைவரது வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் பூண்டு. அசைவம் சைவம் என பூண்டோடு இஞ்சியை சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவை கூடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பொதுவாக பூண்டு என்றாலே அது வாய்வுக்கோளாறை சரிப்படுத்தும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி பல நன்மைகள் பூண்டில் அடங்கி இருக்கிறது. குறிப்பாக இரண்டு பூண்டு பற்களை வெதுவெதுப்பான நீரில் போட்டு காலையில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

1. பூண்டில் பாஸ்பரஸ், ஜிங்க், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மேலும், அவை வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், ஆகியவை நிறைந்துள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பூண்டை வெதுவெதுப்பான நீரோடு குடிக்கும் பொழுது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் அது உடலில் உள்ள வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது.குளிர் மற்றும் காய்ச்சலுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். பூண்டில் உள்ள த்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பருவக்காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு ஏற்றவாறு பூண்டு நமது உடம்பில் செயல்படும்.
2. உங்களுக்கு இருமல் மற்றும் சளி தொற்று பிரச்சனை இருந்தால், வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது நன்மை பயக்கும். குழந்தைகளுக்கு பூண்டு பற்களை நூலில் கட்டி கழுத்தில் போட்டால் சளி பிரச்சனை நீங்கும் என்பார்கள் நமது முன்னோர்கள்.
3. பச்சைப் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமான பிரச்சனைகள் குறையும். இது குடலுக்கு நல்லது. வீக்கத்தைக் குறைக்கிறது. குடல் புழுக்களையும் அழிக்கிறது. கெட்ட பாக்டீரியாவைக் கொல்லும். இது செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் பாதுகாக்கிறது.
4. பூண்டு சாப்பிடுவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குறிப்பாக பருவக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இது வலிமை அளிக்கிறது. மேலும், இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக, கண் மற்றும் காதில் ஏற்படும் தொற்று நோய்களை சரிச்செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5.பூண்டு இதய ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது. பூண்டில் அல்லிசின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, பூண்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். உடலின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கி நன்மை பயக்கும். பூண்டின் பற்கள் மட்டுமல்லாமல் பூண்டு தோலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பூண்டின் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. சருமத்தில் கொலாஜன் குறைவதை மெதுவாக்குகிறது. இது வயதானவர்களின் சருமத்தில் சுருக்கத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.
6. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் வியர்வையை பெருக்கும் இதனால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்..
7. கெட்ட கொழுப்பை கரைப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. கெட்ட கொழுப்பால் எண்ணற்ற உடல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதை சரி செய்ய பூண்டு நல்ல பலன் தரும்.
8. உடற்சக்தியை அதிகப்படுத்தும். மகப்பேறு அடைந்துள்ள மகளிர் பூண்டு சாப்பிடுவதன் மூலம் தாய்பாலை விருத்தி செய்யும். சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
9.பூண்டு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பலன்களைக் கொண்டது. பூண்டு காலங்காலமாக சிறந்த மருத்துவப் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூண்டு பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க ஆண்டிபயாடிக் ஆகப் பயன்படுத்தப்படுகிறது. நீர்த்த பூண்டு சாறு நாடாப்புழு தொற்று உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
10. இதில் இருக்கும் ஒவ்வாமையை எதிர்த்து போராடும் குணங்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது. குளிர்காலநிலையில் ஏற்படும் காய்ச்சல், சளியால் மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை புண் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
உங்களுக்கு பூண்டை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து அருந்துவது கடினமாக இருந்தால் அதனோடு தேன் அல்லது இஞ்சியைக் கலந்து கூட சுவையாக பருகலாம். ஒரு நாளைக்கு 2 முதல் 3 பச்சை பூண்டு பல் அல்லது சமைத்த பூண்டு பல் எடுத்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











