Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
நீங்கள் குடிக்கும் பால் தூய்மையானதா, கலப்படமானதா என்பதை வீட்டில் இருந்தே எப்படி கண்டறிவது என்று தெரியுமா?
Adulterated Milk: சமீப காலமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பல பொருட்களில் கலப்படம் இருப்பது குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படியான செய்திகள் வருவதால், தற்போது சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொன்றின் மீதும் அனைவருக்குமே சந்தேகம் நிச்சயம் வரும்.
உங்களுக்கும் அப்படி நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் சந்தேகம் எழுகிறதா? குறிப்பாக தினமும் நாம் குடித்து வரும் பாலின் மேல் சந்தேஷம் வருகிறதா? அப்படியானால் நீங்கள் பயன்படுத்தும் பால் சுத்தமானதா என்பதை வீட்டில் இருந்தே சோதித்து பார்க்கலாம்.

நாம் குடிக்கும் பால் ஆரோக்கியமானதாகவும், சுத்தமானதாகவும் இருப்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். பால் நல்ல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பானம். தினமும் பாலைக் குடிப்பதன் மூலம், பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுப்பதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு பால் தூய்மையாக இருக்க வேண்டும். இப்போது நாம் குடிக்கும் பால் சுத்தமானதா அல்லது கலப்படமானதா என்பதை வீட்டில் இருந்தே எப்படி அறிவது என்பதைக் காண்போம்.
சுத்தமான பால் சோதனை
நீங்கள் பயன்படுத்தும் பால் சுத்தமானதா என்பதை அறிய, பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதை 2-3 மணிநேரம் குறைவான தீயில் வைத்து, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கெட்டியாகும் போது பாலானது மிகவும் கெட்டியாக, கரடுமுரடாக இருந்தால், அந்த பாலில் கலப்படம் உள்ளது என்று அர்த்தம். அதுவே எண்ணெய் பசையுடன் இருந்தால், அந்த பால் சுத்தமானது என்று அர்த்தம்.
செயற்கை பாலுக்கான சோதனை
இயற்கை பாலில் கெமிக்கல்கள் மற்றும் சோப்பு போன்றவற்றை சேர்த்து செயற்கை பாலானது தயாரிக்கப்படுகிறது. செயற்கை பாலின் சுவை தனியே தெரியும். இப்படியான பாலை தேய்க்கும் போது சோப்பு போன்று இருக்கும் மற்றும் சூடுபடுத்தும் போது மஞ்சள் நிறமாகவும் மாறும்.
நீரில் பால் அதிகம் இருப்பதை அறியும் முறை
பாலில் நீர் சேர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று தான். ஆரோக்கியத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. ஆனால் அந்த பாலில் நீர் அளவுக்கு அதிகமாக இருக்கிறதா என்பதை, ஒரு துளி பாலை சாய்ந்த மேற்பரப்பில் வைத்து பாய்ச்ச வேண்டும். அப்போது பால் செல்லும் வழியில் தடயத்தை விட்டு சென்றால், அது சுத்தமானது அல்ல. தடயத்தை விடாமல் சென்றால் அது சுத்தமானது.
பாலில் ஸ்டார்ச் இருப்பதை அறியும் முறை
சில சமயங்களில் பாலில் ஸ்டார்ச் கலந்து விற்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் பாலில் ஸ்டார்ச் உள்ளதா என்பதை அறிய, 2 டேபிள் ஸ்பூன் உப்பை 5 மிலி பாலில் ஊற்றி நன்கு கலக்கும் போது, பால் நீல நிறத்தில் மாறினால் அது கலப்படமிக்க பால் என்று அர்த்தம். அதுவே நிறம் மாறாமல் இருந்தால், சுத்தமான பால் என்று அர்த்தம்.
ஃபார்மலின் பாலை கண்டறியும் முறை
பால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஃபார்மலின் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபார்மலின் நிறமற்றது என்பதால் பால் விற்பனையாளர்கள் இதை பாலில் அதிகம் கலப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த ஃபார்மலின் உங்கள் பாலில் உள்ளதா என்பதை அறிய, ஒரு சோதனை குழாயில் 10 மிலி பாலை எடுத்து, அதில் 2-3 துளிகள் சல்ப்யூரிக் அமிலத்தை சேர்த்து கலக்கும் போது, நீல நிற வளையம் தோன்றினால், பாலில் கலப்படம் உள்ளது என்று அர்த்தம்.
யூரியா பாலை கண்டறியும் முறை
பாலில் அதிகம் கலக்கப்படும் முதன்மையான பொருள் யூரியா ஆகும். ஏனெனில் இது பாலின் சுவையை மாற்றாது மற்றும் இதை கண்டுபிடிப்பது என்பது கடினம். நீங்கள் குடிக்கும் பாலில் யூரியா இருப்பதை அறிய, 1/2 டேபிள் ஸ்பூன் பாலில், சிறிது சோயா பவுடர் சேர்த்து நன்கு குலுக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து, அதில் லிட்மஸ் பேப்பரை 30 விநாடிகள் நனைத்து எடுக்கும் போது, அந்த பேப்பரின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறினால், பாலில் யூரியா உள்ளது என்று அர்த்தம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications