Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
Budget 2026: இந்த ஆண்டு காஞ்சிபுர பட்டுப்புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Budget 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01 ஆம் தேதி தனது 9 ஆவது மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்யவுள்ளார். அதற்காக தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டிற்கு முன் நிதியமைச்சர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் இந்திய பெண் நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் நாட்டின் நீண்டகால நிதியமைச்சர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியாவின் வரலாற்றிலேயே முதல்முறையாக 2026 ஆம் ஆண்டின் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் அணிந்து வரும் ஆடை எப்போதும் கவனத்தை ஈர்க்கும்.
ஏனெனில் அவர் ஒவ்வொரு ஆண்டும் அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் வெவ்வேறு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் பழமையான நெசவு பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்துள்ளார். அதுவும் தங்க ஜரிகையால் கட்டம் போட்ட ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அணிந்து வந்துள்ளார்.
மேலும் இந்த புடவையானது நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய காபி பழுப்பு நிற பார்டர் கொண்டது. இந்த புடவைக்கு இவர் மஞ்சள் நிற முழுக்கை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, மேலே ஒரு சால்வையையும் போட்டு வந்திருந்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டின் காஞ்சிபுர பட்டுப்புடவை தேர்ந்தெடுக்க தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை உணர்த்துவதும் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications