Latest Updates
-
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்!
உங்க முகம் சும்மா பீட்ருட் மாதிரி தகதகன்னு சிவப்பா ஜொலிக்க...பீட்ருட்டை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
பீட்ரூட் ஜூஸில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வைத் தடுக்கும்.
பெரும்பலான பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்க சரும ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும். அந்த வகையில், ஆச்சரியப்படும் விதமாக பீட்ரூட் சாறு உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. பீட்ருட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சரும பாதிப்பை குறைக்கிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது.

பீட்ரூட் சாறு சாத்தியமான அழகு நன்மைகளைக் கொண்டிருக்கும் போது, உங்கள் தினசரி வழக்கத்தில் ஏதேனும் புதிய சப்ளிமெண்ட்ஸ் அல்லது உணவு மாற்றங்களைச் சேர்ப்பதற்கு முன்பு தோல் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது எப்போதும் சிறந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் பீட்ருட் சாறு உங்களுக்கு வழங்கும் சரும நன்மைகளை பற்றி காணலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு உதவும்
பீட்ரூட் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவும். இது உங்கள் சருமத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் முதுமையின் பிற அறிகுறிகளைக் குறைப்பது உட்பட மேம்பட்ட தோல் ஆரோக்கியத்தை வழங்க உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும்.

ஆரோக்கியமான கூந்தல்
பீட்ரூட் ஜூஸில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வைத் தடுக்கும். ஆதலால், உங்கள் தினசரி வழக்கத்தில் பீட்ருட் சாறு அருந்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பளபளப்பான நிறம்
பீட்ரூட் சாற்றில் உள்ள பீட்டாலைன்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, இதன் விளைவாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். உங்களுக்கு இன்னும் கூடுதலான நிறம் வேண்டுமென்றாலோ மற்றும் சருமம் ஜொலிக்க வேண்டும் என்றாலோ, பீட்ருட் சாறை அருந்துங்கள் மற்றும் உங்கள் சரும பராமரிப்பிலும் இதைப் பயன்படுத்தலாம்.

வீக்கத்தைக் குறைக்கிறது
பீட்ரூட் சாறு உங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பரு, ரோசாசியா மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகளை குணப்படுத்த உதவுகிறது. பீட்ரூட் சாறு ஒரு இயற்கை நச்சு நீக்கியாகும், இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும், இது தெளிவான சருமத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
