Latest Updates
-
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா? அப்ப இதுல ஒரு வழியை ட்ரை பண்ணுங்க..
உங்கள் முகம் இறந்த செல்கள் அதிகம் தேங்கி பொலிவிழந்து காணப்பட்டால், இறந்த செல்களை நீக்க ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்ப கொடுங்கள்.
நமது உடலில் ஏராளமான இயற்கை செயல்முறைகள் நடைபெறுகின்றன. அதில் புதிய சரும செல்களின் உற்பத்தி மற்றும் இறந்த சரும செல்கள் உதிர்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரும ஆரோக்கியத்திற்கு புதிய செல்களின் உற்பத்தி மட்டுமின்றி இறந்த செல்களை வெளியேற்றுவது போன்றவை அவசியமான செயலாகும். சில சமயங்களில், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் சரியாக வெளியேறாமல், சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் சரும பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், இறந்த செல்களை வெளியேற்ற வேண்டும்.

சருமத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால், சருமம் பொலிவிழந்து காணப்படும். எனவே உங்கள் முகம் இறந்த செல்கள் அதிகம் தேங்கி பொலிவிழந்து காணப்பட்டால், இறந்த செல்களை நீக்க ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்ப கொடுங்கள். கீழே சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேற்கொண்டு, உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

1. ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவும். எனவே அந்த பொருளைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம்.
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

2. சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்
* 1/2 கப் சர்க்கரையில், 2-3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சருமத்தில் தடவி மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது நல்லது.

3. காபி ஸ்க்ரப்
* ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இறந்த செல்கள் அதிகம் உள்ள பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, சருமத்தை உலர்த்த வேண்டும்.
* இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.

4. பாதாம் ஃபேஸ் ஸ்கரப்
* 10 பாதாமை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் தோலுரித்து விட்டு, பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 10-15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் ஸ்கரப்பை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

5. கடலை மாவு
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை சருமத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
* மற்றொரு வழி, ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து தயிர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.
* இவற்றை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications