Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.
வானிலை மாற்றங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும் அதற்கு ஏற்ப சரும பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது இயல்பு தான். தோலில் விரிசல் ஏற்பட தொடங்கி வறண்டு காணப்படும
வானிலை மாற்றங்கள் மாறிக்கொண்டே தான் இருக்கும் அதற்கு ஏற்ப சரும பிரச்சனைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது இயல்பு தான். தோலில் விரிசல் ஏற்பட தொடங்கி வறண்டு காணப்படும். இதற்கு சிறந்த வழி உங்கள் உடலை நீரேற்றமாக வைப்பதுதான். நிறைய நீர் பருக வேண்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பொருட்களை தவறாமல் உங்கள் உடலில் பயன்படுத்துங்கள். சிலர் சரும வறட்சியைத் தடுக்க தினமும் எண்ணெயை பயன்படுத்துவார்கள். என்ன தான் எண்ணெய் பயன்படுத்தினாலும், அந்த எண்ணெயை சிலரது சருமம் முற்றிலும் உறிஞ்சி, மீண்டும் வறட்சியை உண்டாக்கும்.

இத்தகையவர்கள் தங்களது சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை அன்றாடம் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி கொடுக்காமல் சரும வறட்சியை விட்டுவிட்டால், அதனால் சருமத்தில் வெடிப்புக்கள் வர ஆரம்பித்து, காயங்களை உண்டாக்கி, வேறு சில சரும பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இவர்கள் தங்கள் உடலில் பாடி லோஷனை பயன்படுத்தலாம். இவை உங்கள் வறண்ட சருமத்தில் இருந்து உங்களுக்கு விடுதலைத் தரும். உடலில் லோஷனைப் பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள் உள்ளன. எல்லா பாடி லோஷன்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் உண்மையில் பாடி லோஷன்கள் மிக மென்மையாக மற்றும் தண்ணியாக இருக்கும். பாடி கிரீம்கள் சற்று தண்ணீர் குறைவாகவும் திக்காகவும் இருக்கும். எனவே உங்கள் சருமத்திற்கு எது தேவைப்படுகிறதோ அதை தேர்வு செய்து வாங்குங்கள்.

சரியான லோஷன்
முதலில் சரியான லோஷன் தேர்வு செய்வது எப்படி என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். மென்னையான தண்ணீர்யுடன் உள்ள பாடி லோஷன்களே எல்லா சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். சற்று வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பாடி லோஷன் மிக சிறந்ததாகும். மிக வறண்ட சருமம் உள்ளவர்கள் பாடி பட்டர் பயன்படுத்தலாம். ஆனால் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் பாடி பட்டர் பயன்படுத்தக் கூடாது. மேலும் வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் இரண்டிற்கும் நடுவில் சாதாரண சருமம் கொண்டவர்கள் பாடி கிரீம்களை பயன்படுத்தலாம்.

குளித்தப் பிறகு
லோஷனை நீங்கள் பயன்படுத்த சரியான நேரம் குளித்து முடித்தவுடன் உடலில் லோஷனைப் பயன்படுத்துவது தான். அல்லது மழையில் இருந்து நனைந்து வந்த பிறகும் கூட பயன்படுத்தலாம். குளித்தவுடன் உங்கள் சருமத்தை ஒரு துண்டு கொண்டு துடைப்பத்தால் எரிச்சல் ஏற்படலாம் அல்லது உடலில் இருக்கும் தண்ணீரை உறிஞ்ச வாய்ப்புக்கள் உள்ளன. எனவே நீங்கள் குளித்து முடித்த பிறகு உடனடியாக லோஷனைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். குளித்தவுடன் உங்கள் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருப்பதால், மற்ற நேரங்களை விட இப்போது லோஷனை உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும் லோஷன் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் விதம்
லோஷனை முதலில் எங்கு இருந்து அப்ளை செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். அதாவது லோசனை முதலில் காலில் தான் அப்ளை செய்ய வேண்டும். பின்பு உடலை நோக்கி அப்ளை செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். மேலும் இவ்வாறு அப்ளை செய்யும் போது ஈரப்பதத்தினை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும்.

உடல் முழுவதும்
உங்கள் உடல் முழுவதும் லோஷனை அப்ளை செய்ய வேண்டியது அவசியம். கை மற்றும் கால்களில் மட்டும் அப்ளை செய்தால் போதாது. சற்று நேரம் எடுத்து உங்கள் உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். உங்கள் முழங்கைகள்,கைகள் மற்றும் முழங்கால்களில் கண்டிப்பான முறையில் அப்ளை செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் உடலில் மிகுந்த வறட்சியை ஏற்படுத்தும் இடங்கள் இவை தான்.

லோஷன்
உங்கள் உடலினை ஈரப்பத்துடன் வைப்பதற்காக தான் லோஷனை பயன்படுத்துறீங்கள். எனவே அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். வறண்ட உங்கள் சருமத்தில் லோஷனை எடுத்து தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு வட்ட வடிவில் லோஷனை பரப்புவது உடல் இயற்கையான முறையில் லோஷனை உறிஞ்ச உதவுகிறது.

தவறான லோஷன்கள்
நல்ல லோஷன்களை வாங்க வேண்டுமென்றால் முதலில் எதை வாங்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வாங்குவதற்கு முன்பு உட்பொருட்களை பற்றிய லேபிள்களை வாசித்துப் பாருங்கள். அதில் ரெட்டினோல் கொண்ட மாய்ஸ்சரைசர்களை பகல்நேரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்ட லோஷன்களை வாங்கலாம். சில ஹோம்மேடு லோஷன்களும் தற்போது விற்பனையில் உள்ளன. அவற்றில் எந்த வித இரசாயனங்களும் இல்லையெனில் நீங்கள் கண்டிப்பாக அவற்றை பயன்படுத்தலாம். அவற்றில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளதா என்பதையும் சரி பார்த்து வாங்குங்கள். மேலும் நல்ல லோஷன்களை தேர்வு செய்து வறண்ட உங்கள் சருமத்தை பளபளக்கச் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications