Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஐஸ் கட்டியால் உங்க சருமத்தில் மசாஜ் செய்வது... உங்களுக்கு என்னென்ன அற்புதங்களை செய்யும் தெரியுமா?
சருமத்தில் வீக்கம் இருந்தால், அல்லது சருமம் கண்ணிப்போய் சிவந்து இருந்தால், அல்லது சருமத்தில் வடுக்கள் இருந்தால், ஐஸைக் கொண்டு நீங்கள் மசாஸ் செய்யலாம்.
பொதுவாக சருமம் அழகாகவும் பொலிவாகவும் இருப்பதற்காக சிலா் எண்ணெய் மாசாஜ் செய்வா்கள். சிலா் மூலிகை மசாஜ் செய்வா். ஆனால், ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், ஐஸ் மசாஜ் உங்களுக்கு சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. பொதுவாக சருமத்தில் ஐஸ் மசாஜ் செய்வதற்கு, குளா்சாதனப் பெட்டியின் ஃப்ரீசாில் இருக்கும் உறைந்த ஐஸை பயன்படுத்தக்கூடாது. மாறாக ஃப்ரீசருக்கு வெளியில் இருக்கும் ஐஸை எடுத்து அதை நேரடியாகவே சருமத்தில் வைத்து மசாஜ் செய்யலாம்.

இரண்டாவதாக சருமத்தின் ஒரே இடத்தில் 12 நிமடங்களுக்கு அதிகமாக ஐஸை வைக்கக்கூடாது. அப்படி செய்தால் சருமம் மறத்துப்போய்விடும். ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சருமம் பெலிவு பெறுதல்
சீரான இரத்த ஓட்டத்திற்கு ஐஸ் உதவி செய்கிறது. இரத்த ஒட்டம் சீராக இருந்தால் சருமம் பொலிவு பெறும். ஆகவே ஐஸ் கட்டிகளில் இருந்து வடியும் குளிா்ந்த நீரை சருமம் முழுவதும் தேய்த்தால் சருமம் பொலிவாக தோற்றமளிக்கும்.

வீக்கத்தைக் குறைத்தல்
சருமத்தில் வீக்கம் இருந்தால், அல்லது சருமம் கண்ணிப்போய் சிவந்து இருந்தால், அல்லது சருமத்தில் வடுக்கள் இருந்தால், ஐஸைக் கொண்டு நீங்கள் மசாஸ் செய்யலாம். அது அவற்றைக் குறைக்கும். அது போல் முகப்பரு இருந்தாலும், அதன் மீது ஐஸைக் கொண்டு மசாஜ் செய்தால், அந்த இடம் முழுவதும் சுத்தமாகி முகம் புதுப் பொலிவு பெறும்.

கரு வளையங்களைக் குறைத்தல்
வெள்ளாிக்காய் சாற்றையும், ரோஸ் தண்ணீரையும் உறைய வைத்து, அதில் ஐஸ் சில கட்டிகளை சேர்த்து, அந்தக் கலவைக் கொண்டு கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால், உங்கள் கருவளையங்கள் நீங்கும். அதோடு சரும வீக்கமும் குறையும்.

சருமத்தைத் தூண்டுதல்
சருமம் மென்மையாக மற்றும் புதுப் பொலிவுடன் இருக்க ஐஸ் உதவி செய்கிறது. அதாவது ஐஸ் மசாஜ் செய்யும் போது, அது தசைகளை ஊடுருவி சருமத்தை சுத்தம் செய்கிறது. ஒப்பனை செய்வதற்கு முன்பாக ஐசைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகள் சுத்தமாகும்

சுருக்கங்களைத் தடுத்தல்
ஐஸ் மசாஜ் செய்தால், சருமத்தில் மிக எளிதாக சுருக்கங்கள் ஏற்படாது. முகமானது நீா்ச்ச்த்துடன் இருக்கும். அதோடு முகத்தில் முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படாது. ஆகவே சருமத்தைப் பாதுகாக்க, சருமத்தைப் புதுப் பொலிவுடன் பராமாிக்க அடிக்கடி ஐஸ் மசாஜ் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications