Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
இந்த மாதிரி பருக்கள் இருக்கா?... முருங்கை இலைய அரைச்சு தேய்ங்க... சூப்பர் ஆகிடுவீங்க...
அழகை அதிகரிப்பதற்காக முருங்கை பேஸ் மாஸ்க் இன்று பல்வேறு அழகு சிகிச்சையில் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் ஒரு அற்புதமான காயாகும். இந்தியர்களில் முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்திய சமையலில் ஒரு நீங்கா இடம் பிடித்த ஒரு உணவுப் பொருளாக உள்ளது.

முருங்கைக்காய். குழம்பு, வறுவல், பொரியல், அவியல், சூப் என்று எல்லா வித உணவுகளிலும் முருங்கைக்காய் மனிதனின் நாவிற்கு விருந்து படைக்கிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளில் கூட முருங்கைக்காய் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது.

முருங்கை
முருங்கை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு உதவுகின்றன. அதன் இலைகள், பூக்கள், காய்கள் என்று எல்லா பகுதிகளும் ஊட்டச்சத்து மற்றும் மினரல்கள் அடங்கியது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன் வசம் கொண்டுள்ளது முருங்கை. அது சரி. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஓரளவிற்கு நாம் அனைவரும் அறிந்துள்ளோம். ஆனால் முருங்கைக்காய் அழகு சிகிச்சையில் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அழகை அதிகரிப்பதற்காக முருங்கை பேஸ் மாஸ்க் இன்று பல்வேறு அழகு சிகிச்சையில் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சரும அழகை பாதுகாக்க, முருங்கை இலை மற்றும் எண்ணெய் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் இப்போது நாம் காணலாம்.

வயது முதிர்வு
முருங்கை எண்ணெய் அல்லது முருங்கை இலை தூள் போன்றவற்றை முகத்தில் தடவுவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் தடுக்கப்படுகிறது. உங்கள் முகத்தின் தோல் பகுதியை இறுக்கமாக வைக்க முருங்கை உதவுகிறது. மேலும் சுருக்கங்கள், கொப்பளங்கள் போன்றவை மறைந்து உங்கள் முகம் இளமையாக மாறுகிறது.

உதடுகளுக்கு ஈரப்பதம்
லிப் பாம் மற்றும் இதர உதடு பராமரிப்பு பொருட்களில் ஒரு முக்கிய மூலப்பொருளாக முருங்கை எண்ணெய் பயன்படுகிறது. உதடுகளின் சென்சிடிவ் தோல் பகுதிக்கு ஈரப்பதம் கொடுக்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உள்ளது. இதனால் உதடுகள் அதன் மிருதுவான தன்மையை தக்க வைக்க உதவுகிறது.

நிறத்தை மேம்படுத்த
முருங்கைக்காயை மேல்புறமாக சருமத்தில் தடவுவதால், உங்கள் சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் போன்றவற்றை தடுத்து, சருமத்தின் சமச்சீரற்ற தன்மையைப் போக்க உதவுகிறது. முருங்கை இலைகளின் விழுதை முகத்தில் உள்ள கருந்திட்டுகள் அல்லது கொப்பளங்களில் தடவுவதால் அவை எளிதில் மறைகின்றன.

கட்டிகள் மற்றும் பருக்கள்
முருங்கையில் இருக்கும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக, முருங்கை எண்ணெய்யை பருக்கள் மற்றும் கட்டிகளில் தடவுவதால் அவை மறுபடி தோன்றாமல் தடுக்கப்படுகின்றன. முருங்கை எண்ணெய்க்கு மாற்றாக முருங்கை இலைகளை அரைத்தும் கட்டிகளில் தடவலாம். ஆனால் சருமத்திற்கு சுயமாக எதாவது சிகிச்சை அளிக்கும் முன்னர்,தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று பின்னர் சிகிச்சையைத் தொடங்கலாம்.

நச்சுகளை வெளியேற்ற
உடலில் உள்ள இரத்தத்தில் நச்சுகள் படிவதன் விளைவாக பருக்கள் மற்றும் கட்டிகள் தோன்றலாம். முருங்கை விதைகள் அல்லது முருங்கை தூளை தினமும் உட்கொள்வதால் இரத்தம் சுத்தம் அடைகிறது. இதனால் உங்கள் சருமம் சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக மாறுகிறது.

சருமத் துளைகள்
சருமத்தில் பெரிதாக காணப்படும் துளைகளின் மீது செயல்பட்டு சருமத்தை இறுக்கமாக்கி துளைகளின் அளவைக் குறைக்க முருங்கை உதவுகிறது. முருங்கையில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொலோஜென் புரதம் அதிகமாக இருப்பதால் துளைகளைக் குறைக்க உதவுகின்றன.
ஆரோக்கியமான சருமம் பெற முருங்கை பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
முருங்கை தூளில் உள்ள சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் காரணமாக இதனை பேஸ் மாஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.

முருங்கை பேஸ்பேக்
முருங்கை இலைகளை வெயிலில் காயவைத்து பொடியாக்கினால் முருங்கை தூள் கிடைக்கும். இது அடர் பச்சை நிறத்தில் இருக்கும். இந்த பேஸ் மாஸ்க் செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள், முருங்கை இலை தூள், தேன், பன்னீர், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர்.
முருங்கை இலை தூளை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து கலக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் காலையில் தடவி, 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
காய்ந்தவுடன் முகத்தை டவலில் துடைத்து பின்னர் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மிருதுவாக மாறும்.

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பிலும் முருங்கை இலை தூள் பயன்படுகிறது. ஆரோக்கியமான நீளமான கூந்தல் பெற இந்த தூளை நீங்கள் பயன்படுத்தலாம். முருங்கை தூளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக பொடுகு மற்றும் கூதல் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கவும் இவை நல்ல முறையில் உதவுகிறது.



Click it and Unblock the Notifications