Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
கண்ணாடி அணிவதால் ஏற்படுகிற தழும்பினை ஈஸியா போக்கலாம்!
தொடர்ந்து கண்ணாடி அணிவதினால் ஏற்படுகிற தழும்புகளை போக்க சில எளிமையான வீட்டுக்குறிப்புகள்.
இன்றைக்கு பள்ளிப்பருவத்திலிருந்தே கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. சத்துக்குறைபாடு உட்பட பல்வேறு காரணங்களால் பார்வைக்குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் இந்த காலத்தில் கண்ணாடி அணிவதினால் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்திருப்போம்.
குறிப்பாக மூக்கின் மேல் பகுதியில் கண்ணாடியில் ஃப்ரேம் படும் பகுதியில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டு ஒர் அடையாளமாகவே விழுந்து விடும். அதுவும் பவர் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நாளடைவில் அந்த அழுத்தம் ஏற்படும் பகுதியில் பிக்மென்டேசன் ஏற்பட்டு முகத்தில் அசிங்கமாக தெரியும்.

கற்றாழை :
கற்றாழையிலிருந்து எடுக்கப்படுகிற ஜெல் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. கண்ணாடி அணிந்து ஏற்படுகிற அடையாளம் இருக்கும் இடங்களில் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தடவி வாருங்கள். அது தானாகவே வேப்பர் ஆகிடும். அதனால் அடிக்கடி தடவலாம். மூன்று முறைக்கு மேல் தடவியதும் சற்று பிசுபிசுப்பாக தோன்றும் என்பதால் குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு சமைப்பதற்கு மட்டுமல்ல உங்கள் சருமத்திற்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது. குறிப்பாக கண்ணிருக்கும் பகுதிகளில் ஏற்படக்கூடிய கருவளையம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய இது உதவிடுகிறது. உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்துக் கொள்ளுங்கள்.அதை கண்களைச் சுற்றியும், மூக்கில் மார்க் உள்ள பகுதிகளிலும் பூசி லேசாக மசாஜ் செய்திடுங்கள்.
அதன் பிறகு சுமார் பதினைந்து நிமிடம் அப்படியே காயவைத்த பிறகு கழுவிட வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

வெள்ளரி :
இது கண்களை குளிரச் செய்திடும். வெள்ளரியை வட்ட வடிவில் வெட்டி அதனை அப்படியே கண்களில் மேலே வைத்து கண்ணை மூடி படுத்துக் கொள்ளுங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து கணினியில் பணியாற்றுகிறவர்கள் இதனை அவசியம் செய்ய வேண்டும். வெள்ளரியை சாறு எடுத்து அதனை மூக்கில் உள்ள கண்ணாடி அடையாளம் இருக்கிற இடத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை :
இதில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் இருக்கிற பிக்மெண்ட்களை போக்கிடும். எலுமிச்சை சாற்றினை நேரடியாக அப்ளை செய்ய வேண்டாம். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு என்றால் அதேயளவு ரோஸ்வாட்டர் அல்லது தண்ணீரை கலந்து அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இப்படி செய்வதினால் அதிக எரிச்சல் இருக்காது. இதனை முகம் முழுவதும் கூட நீங்கள் தடவலாம். பத்து நிமிடம் காத்திருந்து பின்னர் கழுவிடலாம்.

ரோஸ் வாட்டர் :
இது குளிர்ச்சியை தரும்.ரோஸ்வாட்டரை காட்டனில் நனைத்து கண்களில் வைத்துக் கொள்ளுங்கள். இது இயற்கையான ஸ்கின் டோனராகவும் செயல்படும். சருமம் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் போது இதனை பயன்படுத்துவது போதுமானது.

தேன் :
தேன் அதிக திக்காக இருக்கும் அதை அப்படியே தடவுவதற்கு பதிலாக அதனுடன் ஒரு ஸ்பூன் பால் கலந்து சற்று குழைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மூக்கில் மார்க் உள்ள இடங்களில் தடவி லேசாக மசாஜ் செய்து பின்னர் கழுவிடலாம்.
தேனில் உள்ள சத்துக்கள் அடையாளத்தை மறைப்பதுடன் சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கும் என்பதால் நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு பழத்தோல் :
இது கருவளையத்திற்கு அதிகம் உதவிடும். ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். தேவையான அளவு மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு அதனுடன் பால் கலந்து தடவலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சிறந்த பலனை கொடுக்கும். டார்க்காக அடையாளம் இருப்பவர்களுக்கு விரைவிலேயே நல்ல மாற்றத்தை காண்பிக்கும்.

பயிற்சி :
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கண்ணாடி அணிந்திருந்தால் அதனை கழற்றி வைத்து விட்டு கண்களுக்கான சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இது இருக்கமாக இருக்கும் அந்த பகுதிகளை சற்று தளர்வுறச்செய்யும்.
இதனால் ரிலாக்ஸ் ஆவது உங்கள் கண்கள் மட்டுமல்ல சருமமும் தான். தொடர்ந்து சத்தான உணவுப்பழக்கங்கள் கொண்டிருப்பதும் மிகவும் அவசியமான ஒன்று.



Click it and Unblock the Notifications
